LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெங்கு சிகிச்சையும் சேர்ப்பு!!

முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சையும் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையளிக்க வேண்டும், முதல்வர் மருத்துவ காப்பீட்டில் டெங்குவை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரியபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

 அந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சையும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொசு ஒழிப்பிற்காக 13.95 கோடி ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெங்கு காய்ச்சலை கண்டறிய தமிழகம் முழுவதும் ரூ 23.50 கோடியில் 837 ரத்த அணு சோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை உறுதிபடுத்த மாநிலம் முழுவமும் 125 சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில வேம்பு குடிநீருக்காக 2,000 கிலோ பொடி இருப்பு உள்ளதாகவும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கும் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் டெங்கு காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம்.

by Swathi   on 16 Oct 2017  0 Comments
Tags: Mudhalvar Maruthuva Thittam   CMCHIS   Dengue Fever   Dengue Fever Treatment   Dengue Kaichal Maruthuvam   முதல்வர் மருத்துவ காப்பீட்டு   டெங்கு காய்ச்சல்  
 தொடர்புடையவை-Related Articles
முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெங்கு சிகிச்சையும் சேர்ப்பு!! முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெங்கு சிகிச்சையும் சேர்ப்பு!!
உயிரைக் கொல்லும் டெங்கு , அதன் பின்புலம் என்ன? தப்புவது எப்படி?  சித்தமருத்துவர், பேராசிரியர் கோ.அன்புகணபதி, P.hd. உயிரைக் கொல்லும் டெங்கு , அதன் பின்புலம் என்ன? தப்புவது எப்படி? சித்தமருத்துவர், பேராசிரியர் கோ.அன்புகணபதி, P.hd.
டெங்குக் காய்ச்சல் – ஒரு பார்வை டெங்குக் காய்ச்சல் – ஒரு பார்வை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.