தனுஷ் தற்போது நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்திற்காக இரண்டாவது முறையாக ‘சிக்ஸ்பேக்’ வைத்திருக்கிறாராம்.
இந்தி திரைப்பட உலகை தொடர்ந்து தமிழ் சினமாவிலும் சிக்ஸ்பேக் வைப்பது என்பது பேஷனாகிவிட்டது. சூர்யா, விஷால் லேட்டஸ்ட்டாக பரத் உள்ளிட்ட நடிகர்கள் தங்களது படங்களில் ஒரு முறை சிக்ஸ்பேக் வைத்து காட்டிவிட்டார்கள்.
ஆனால் தற்போது தனுஷ் இரண்டாவது முறையாக ‘சிக்ஸ்பேக்’ வைத்திருக்கிறார். இதற்கு முன்பு அவர் ‘பொல்லாதவன்’ படத்தில் ‘சிக்ஸ்பேக்’ வைத்திருந்தார். வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுற்கு ஜோடியாக அமலாபால் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா காதலர்தினமான பிப்ரவரி-14ம் தேதி நடக்கவிருக்கிறது.
|