நடிகராகவும், பாடகராகவும் இந்திய திரையுலகை ஒரு கலக்கு கலக்கிய தனுஷ், சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார்.
எதிர்நீச்சல் படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரும் வெற்றி பெற்றதோடு, வசூலையும் வாரிக்குவித்தது.
இதனை அடுத்து, தான் ஹீரோவாக நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தை தயாரித்தார் தனுஷ். இப்படம் அதிக வசூலை வாரிக்கொடுத்து இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது இவர் விஜய் சேதுபதி-நயன்தாரா ஜோடியாக வைத்து ‘நானும் ரவுடிதான்’ என்னும் படத்தை தயாரிக்கவுள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதியை அடுத்து விஜய்யை வைத்து பட தயாரிக்க தனுஷ் ஆசைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். அதன்பிறகு தனுஷ் தயாரிக்கும் படத்திற்கு கால்ஷீட் கொடுப்பார் என கூறப்படுகிறது.
|