|
|||||
உடல் அழகை காக்க டயட்டில் இருப்பவரா நீங்கள் ! இத படிங்க முதல ! |
|||||
உடலை அழகாக வைத்து கொள்வதற்காக பெரும்பாலானோர் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்கின்றனர். இவர்களில் சிலர் தகுந்த ஆலோசனை இன்றி டயட்டில் இருப்பதாக கூறி பட்டினி கிடந்து உடலை கெடுத்து கொள்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில பயனுள்ள குறிப்புகள் இதோ,
1. நாள்தோறும் ஏதாவது ஒரு பழ சாறு அருந்துவது நல்லது, நீங்கள் குடிக்கும் பழ சாறு அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ்கட்டி ஆகியவை சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும்.
2. வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும். அதற்காக இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அதிகமாக சாப்பிடக்கூடாது.
3. முடிந்தவரை எண்ணெய் உணவுகளை தவிர்த்து, காய்கறிகளை அதிகமாக சாப்பிடவேண்டும்.
4. மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும்.
5. புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதற்கு பதிலாக தக்காளி சேர்த்துக்கொள்ளவும்.
6. உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது.
7. அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான்.
பழங்களை எப்படி சாப்பிட வேண்டும் :
1. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.
2. உணவு சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.
3. சாப்பிட்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
4. பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும். |
|||||
by Swathi on 07 Aug 2013 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|