LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி : கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்

தினமணி நாளிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் இணைந்து நடத்தும் கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகளுக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

தேபக (என்எல்சி) இந்தியா நிறுவனத்தின் ஆதரவுடன் 21-ஆவது ஆண்டு நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஆனி 15- ஆனி 24 / சூன் 29 முதல் சூலை 8 வரை கடலூர் மாவட்டம், நெய்வேலி வட்டம் 11-இல் உள்ள பழுப்புக்கரி (லிக்னைட்டு) அரங்கில் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கண்காட்சியையொட்டி மாணவ, மாணவிகளின் எழுத்தார்வத்தைத் தூண்டும் வகையில் கட்டுரை, சிறுகதைப் போட்டிகள், இளம் திரைப்படக் கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் குறும்படப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

இந்தப் போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்தும் திரளானோர் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். 21-ஆவது நெய்வேலி புத்தகக் கண்காட்சியையொட்டி கட்டுரை, சிறுகதை, குறும்படப் போட்டிகளுக்கு சில நிபந்தனைகளுக்குள்பட்டு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

கட்டுரைப் போட்டி

பள்ளி மாணவர்களுக்கான தலைப்புகள்:

 விழுவதெல்லாம் எழுவதற்கே, அகத் தூய்மையே பெருந்தூய்மை, நல் உரைகளே நல்ல உரைகல்.

கல்லூரி மாணவர்களுக்கான தலைப்புகள்:

வேதனை சாதனை ஆவதே போதனை, வாழ்க்கைத் தளத்தில் வலைதளங்கள், தேசம் என் சுவாசம்.

மேற்கண்ட தலைப்புகளில் கீழ்க்காணும் விதிகளுக்குட்பட்ட கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

கட்டுரைகள் 1,500 சொற்களுக்கு மிகாமல், தமிழில் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். மின் அச்சு அல்லது தட்டச்சு செய்தும் அனுப்பலாம். ஒருவரே மூன்று தலைப்புகளிலும் கட்டுரைகளை அனுப்பலாம். கட்டுரை சொந்த முயற்சியில் எழுதப்பட்டதற்கான உறுதிமொழி, பள்ளி, கல்லூரி மாணவர் என்பதற்கான சான்றும் இணைக்கப்பட வேண்டும். பரிசுகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வழங்கப்படும்.

தகவல் தெரிவிக்க வசதியாக மாணவர்கள் தங்களது கட்டுரை முகப்பில் பள்ளி, கல்லூரி முகவரியுடன், வீட்டு முகவரி, தொடர்பு எண்ணையும் குறிப்பிட வேண்டும். பரிசு பெறும் கட்டுரைகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சி மலரில் வெளியாகும். போட்டி முடிவுகள் சூன் மாதம் கடைசி வாரத்தில் தினமணி நாளிதழில் வெளியிடப்படும். முதல் பரிசு உரூ.2 ஆயிரம், 2-ஆம் பரிசு உரூ.1,500, 3-ஆம் பரிசு உரூ.1,000 மற்றும் 5 ஆறுதல் பரிசுகள் தலா உரூ.500 வழங்கப்படும். நெய்வேலி மாணவர்களுக்கான 6 ஆறுதல் பரிசுகள் தலா உரூ.500 வழங்கப்படும்.

குறும்படப் போட்டி: தமிழர்களின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச் சிக்கல்கள், சமூக உணர்வுகள் போன்றவற்றை எதிரொலிப்பவையாகவும், 30 நிமிடங்களுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.  எண்ம வட்டு அல்லது காணொளி வட்டில் (டி.வி.டி. அல்லது வி.சி.டி.யில்) பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். குறும்படத்தின் கதைச் சுருக்கம், முதன்மைக் காட்சிகளின் ஒளிப்படங்கள், இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவை வரவேற்கப்படுகின்றன. படத்தின் உரிமையாளரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இயக்குநரின் பெயர், முகவரி, தொடர்பு எண் ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும். குறும்படங்கள் 1-1-2018-க்கு பிறகு எடுக்கப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் புத்தகக் கண்காட்சியில் திரையிடப்படும். ஆவணப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தேர்வு செய்யப்படாத குறும்படங்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டாது.

பரிசுகள் நெய்வேலி புத்தகக் கண்காட்சியின்போது வழங்கப்படும். போட்டி முடிவுகள் சூன் 3-ஆவது வாரம் வெளியிடப்படும்.

இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். முதல் பரிசு உரூ.15 ஆயிரம், 2-ஆம் பரிசு உரூ.10 ஆயிரம், 3-ஆம் பரிசு உரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இதுதவிர சிறப்புப் பரிசுகள் (நடிப்பு, கதைக்கரு, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு மற்றும் இயக்கம்) தலா உரூ.2,000, நடுவர் குழுவின் பரிசுகள்( 5 குறும்படங்கள் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரம்) தலா உரூ.1,000 வழங்கப்படும்.

சிறுகதைப் போட்டி: தமிழர்களின் பண்பாட்டு மேன்மை, சமுதாயச் சிக்கல்கள், சமூக உணர்வுகள் போன்றவற்றை எதிரொலிக்கக் கூடியவையாகச் சிறுகதைகள் இருத்தல் வேண்டும். இவை தினமணி கதிரில் வெளியிடப்படும் நிலையில், 3 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். சிறுகதைகள் ஏற்கெனவே வெளிவராதவையாகவும், சொந்தக் கற்பனையில் உருவானவையாகவும், அதற்கான உறுதிமொழி இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

கதைகள் வெள்ளைத் தாளில் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். மின் அச்சு அல்லது தட்டச்சு செய்தும் அனுப்பலாம். ஒருவர்ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகளையும் எழுதலாம். போட்டி முடிவுகள் சூலை முதல்வார தினமணி கதிரில் வெளியாகும். தேர்வு செய்யப்படும் சிறுகதைகளுக்கான முதல் பரிசு உரூ.10 ஆயிரம், 2-ஆம் பரிசு உரூ. 5 ஆயிரம், 3-ஆம் பரிசு உரூ.2,500 மற்றும் 5 ஆறுதல் பரிசுகள் தலா உரூ.1,250 வழங்கப்படும்.

கட்டுரைகள், குறும்படங்கள், சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

செயலர், நெய்வேலி புத்தகக் கண்காட்சி,

செயல் இயக்குநர்/மனிதவளம், மக்கள் தொடர்புத் துறை அலுவலகம்,

தேபக (என்எல்சி) இந்தியா நிறுவனம்(என்எல்சி இந்தியா லிமிடெடு),

வட்டம்-2, நெய்வேலி-607 801, கடலூர் மாவட்டம்.

படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: ஆனி 02, 2049 /  16.6.2018.

by Swathi   on 12 Jun 2018  0 Comments
Tags: Neyveli Book Exhibition   Book Exhibition   Dinamani   தினமணி   நெய்வேலி புத்தகக் கண்காட்சி   கட்டுரை   குறும்படம்  
 தொடர்புடையவை-Related Articles
தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி : கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள் தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி : கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்
ஈரோட்டில் NCBH புத்தகக் கண்காட்சி தொடக்கம் … ஈரோட்டில் NCBH புத்தகக் கண்காட்சி தொடக்கம் …
வா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை) வா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை)
குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள்
ரௌத்திரம் பழகு! ரௌத்திரம் பழகு!
ஓங்கி உலகளந்த தமிழர் - 11 : நல்லனவும் அல்லனவும் ஓங்கி உலகளந்த தமிழர் - 11 : நல்லனவும் அல்லனவும்
ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன? ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன?
ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை ஓங்கி உலகளந்த தமிழர் - 4 : மழைக்கு அறிவில்லை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.