LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

இயக்குனர் சேரன் மகள் காதல் விவகாரத்தில் இணையதள ஜீவிகளின் கண்டனக் கருத்துக்கள் நியாயமா?

இயக்குனர் சேரன் மகள் காதல் விவகாரத்தில் இணையதள ஜீவிகளின் கண்டனக் கருத்துக்கள் நியாயமா? 

                                                                                                                                                -இலக்கியன்  

 

இயக்குனர் சேரன் அவர்களின் மகள் காதல் விவகாரம் கடந்த சில நாட்களாக தமிழக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் முக்கிய விவாதப் பொருளாக இருக்கிறது. பலர் காதலை வாழ்த்தி படம் எடுத்த சேரன் இப்படி செய்யலாமா?  படத்தில் மட்டும்தான் அவரின் காதல் வசனங்களா? சொந்த வாழ்க்கையில் சராசரி மனிதன்தானா?  என்பதுபோன்ற பல விமர்சனக் கருத்துக்களை அள்ளித் தெளித்துள்ளார்கள்.  இப்படிப்பட்ட விமர்சகர்கள் இந்த நிகழ்வை அடுத்தவர் வாழ்க்கையாகப் பார்க்கிரார்களே தவிர கல்லூரியில் படிக்கும் தன் மகளுக்கோ, தங்கைக்கோ இந்த நிலை வந்திருந்தாள் இதே அளவுகோலை பயன்படுத்துவார்களா?

 

காரணம், இன்று சில கும்பல் வசதி படைத்த குடும்பங்களை குறிவைத்து அவர்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் காதல் மற்றும் திருமண உறவுகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அதுவும் பிரபலங்களின்  குடும்பங்களை குறிவைப்பது சாதாரணமாகிவிட்டது. இதை இயக்குனர் சேரன் மற்றும் அவரின் மகள் பேச்சுக்களை முழுமையாக ஆராந்தவர்களுக்கு நன்கு புரியும்.

 

ஒரு பெண் இன்னும் படிப்பை முடிக்காத நிலையில், படிப்பின் ஆரம்பத்திலேயே காதல் வலையில் விழுந்து கல்வி கற்காமல் போனால் அதை ஒரு தகப்பனாக மகளின் எதிர்காலத்தில் அக்கறையுள்ள பெற்றோராக அதை புரியவைக்க இயக்குனர் சேரன் எடுத்த நடவடிக்கைகள் ஒரு முன் உதாரணமாகும்.

 

ஒரு பெண், படிப்பை முடிக்காமல், வேலை இல்லாமல் திரியும் ஒரு பையனுடன்  காதல் வலையில் விழுந்துவிட்டேன், படிப்பு தேவையில்லை, இன்றே காதலனுடன் சேர்த்து வையுங்கள் என்று சொல்லும்போது நாம் ஒவ்வொருவரும் ஒரு பெற்றோராக எப்படி இந்த சூழ்நிலையை எதிர்கொள்வோம் என்பதை அடுத்தவர் வீட்டு குடும்பம்தானே என்று பார்க்காமல் நம் வீட்டு பிரச்சினையாக கருதி பார்க்கும்போது இதன் உண்மை நிலை விளங்கும். இது வலுவான காதலாக இருக்குமானால், சேரன் அவர் பெண்ணுக்கு இரவோடு இரவாக திருமணம் பேசினால் அந்தப் பெண் எதிர்ப்பை தெரிவித்து காதலனுடன் சேர முடிவெடுக்கலாம். அப்படி எதுவும் இங்கே நடக்கவில்லையே. படிப்பை முடிக்கச் சொல்லி அவகாசம் கொடுத்தும், அந்தப் பையனை ஒரு நல்ல வேலையைத் தேடு  பிறகு பேசலாம் என்று சொன்னதிலும் என்ன குற்றம் இருக்கிறது? அந்தப் பெண்ணால் படிப்பைகூட தொடரமுடியாமல் காதலனுடன் சுற்றவேண்டும், பேசமால் இருக்க முடியவில்லை என்ற நிலையில் அது இனக்கவர்ச்சியைத் தவிர எப்படி உண்மையான காதலாக இருக்க முடியும்? 

 

இனக்கவர்ச்சி மீறிய பக்குவப்பட்ட உள்ளத்தால் ஒன்றிய காதலர்கள் பலர் தன் பெற்றோரை கண்ணீர் சிந்த விடாமல், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை செவிமடுத்து கல்வியை முடித்து, இருவரும் ஒரு நல்ல வேலையைத் தேடிக்கொண்டு ஒரு கண்ணியமான வாழ்க்கையை நடத்த குறைந்தபட்ச வருமானம் தேடிக்கொண்டு தானே திருமணம் செய்து வெற்றியடைகிறார்கள்.  இருவரும் சொந்தக் காலில் நிற்க தயார்படுத்திக்கொண்ட பிறகு வரட்டு கவுரவத்திற்காக, ஜாதிக்காக சேர்த்து வைக்கத் தயங்கும் பெற்றோர்களை காயப்படுத்தாமல் எதிர்ப்பது ஒன்றும் தவறில்லை. 

 

இன்று வெளிநாட்டு வாழ் இந்தியர்களை குறிவைத்து, சினிமாக் காரர்களை குறிவைத்து, வசதி படைத்தவர்களை குறிவைத்து ஒரு சில கும்பல் செயல்படுகிறது. இது பையனை வைத்து என்றில்லாமல் பெண்ணை வைத்தும் திருமணம் ஆனவுடன் பல ஆதாரங்களை திரட்டிக்கொண்டு பிளாக் மெயில் செய்து பணம் பறிப்பதும், சொத்துக்களை பிடுங்குவதும் மிக சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.  இவர்களின் இலக்கில் பெரும்பாலும் அரசியல்வாதிகள் வருவதில்லை ஏனெனில் அவர்களிடம் இருக்கும் உயிர் பயம்தான். இப்படிப்பட்ட பிரச்சினைகளில் சிக்கிய பல நடுத்தரக் குடும்பங்கள் மரியாதைக்கு பயந்து வெளியில் சொல்லாமல் கேட்ட பணத்தை கொடுத்துவிட்டு வெளிவருகிறார்கள். இதில்  நமக்குப்போய் இப்படி நடந்துவிட்டதே, வெளியில் சொன்னால் வெட்கம் என்று கருதி உயிர் விட்ட பல குடும்பங்களின் கதைகள் வெளியில் வருவதில்லை.

 

ஒரு பையனுக்கோ பெண்ணுக்கோ ஒரு நல்ல கல்வியை, நல்ல எதிகாலத்தை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியது அந்தப் பெற்றோரின் கடமை. அதே சமயத்தில் படிக்கும்போது, வேலையில்லாதபோது இழுத்துக்கொண்டு ஓடிபோய் திருமணம் செய்வதும், மேஜர் என்ற காரணத்தைக் காட்டி பெற்றோரை இப்படி கொடூரமாக குற்றம் சாட்டி அவர்களை உயிரோடு ரணப்படுத்துவும், பெற்றோருக்கு குழந்தைகள் செய்யும் துரோகம் என்பதை உணரவேண்டும். அவர்களின் காதல் உண்மையான காதலாக இருக்கும்பட்சத்தில் பெற்றோரை புரியவைத்து, தான் ஒரு நல்லவனை அல்லது நல்லவளைத்தான் தேர்ந்தெடுத்துள்ளேன், உங்கள் உதவி இல்லாமால், உங்கள் பணம், புகழ் இல்லாமல் எங்களால் வாழமுடியும் என்று உணர்த்த முடியாத இவர்கள் எப்படி மூளை வளர்ச்சி பெற்ற பக்குவப்பட்ட காதலர்களாக இருக்க முடியும்?. பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, படிப்பை முடித்து ஒரு வேலைக்கு சென்று, பெற்றோர் பார்க்கும் திருமண பந்தங்களை மன வலிமையுடன் எதிர்த்து கடைசிவரை போராடி திருமணம் செய்து கடைசியில் பெற்றோரின் உதவியில்லாமல் வாழ்க்கையில் முன்னேறி கரம் பிடித்து வாழ்ந்துவரும் எத்துனையோ காதலர்கள், தன் பெற்றோரையும் ஏமாற்றாமல்,காட்டிக்கொடுக்காமல் காதலையும் விட்டுக்கொடுக்காமல், இனக்கவர்ச்சிக்கு அப்பாற்பட்டு வெற்றிகரமாக வாழ்வதை இன்றைய கல்லூரி, பள்ளி காதலர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த வயதில் இது உடல் சம்பத்தப் பட்டக் கோளாறு அதில் சிக்கி வாழ்க்கையை இழக்காமல் இருப்பது முக்கியமானதாகும்.

 

நம் முன்னோர் சொன்னதைப்போல் ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள், இந்த தொண்ணுறு நாட்களைத் தாண்டி காதல் வாழ்க்கையானாலும் சரி , பெற்றோர் பார்த்து வைக்கும் வாழ்க்கையானாலும் சரி ஒருவித கவர்ச்சி முடிந்து  , அடுத்தக் கட்டத்திற்கு வாழ்க்கை நகரும்.  அப்போதுதான் உண்மையான காதல் ,நாடகக் காதல் எவை என்பது விளங்கும். இந்த தொண்ணுறு நாட்களுக்குப் பிறகு அனைவரும் வானத்தில் இருந்து பூமிக்கு இறங்கி வீட்டு வாடகை முதல், மாற்றுதுணி, புட்டிப்பால் வாங்கப் பணம் என்ற சக்கரத்தில் சிக்கி விடைகான முயலும்போது தன் படிப்பும், சுய வேலையும் இல்லாமல் வாழ்க்கையை எதிர்கொள்வது எவ்வளவு சிரமம் என்பது புலப்படும். தான் செய்த தவறுகளும் கண்முன் தோன்றும்.  அதற்குள் நம்மை உருவாக்கிய பலர் நம்  காதல் ஏற்படுத்திய ரணத்தில் சிக்கி நோய்வாய்ப்பட்டிருப்ப்பர் அல்லது இந்த உலகைவிட்டே போயிருப்பார்கள். அப்போதுதான் இப்படிப்பட்ட  இனக்கவர்ச்சி காதல்கள் நசுங்கி நடுத்தெருவிற்கு வருகிறது. 

 

 

இன்றைய தொழில் நுட்ப வசதி பெருகிய காலத்தில், பேஸ்புக், செல்போன் காலத்தில், பள்ளிகளும் கல்லூரிகளும் இப்படிப்பட்ட பிரச்சினைகளை உளவியல் ரீதியாக மாணவர்களுக்கு புரியவைக்க  முயற்சிக்கவேண்டும். இதற்கு குறும்படங்கள் மற்றும் சில புதிய உத்திகளை கையாளலாம். இந்த முயற்சி படித்து முடித்து தனக்கென வேலையைத் தேடிக்கொண்டு  சொந்தக்காலில் நின்றபிறகு மணம் முடித்து வாழ்வதன் அவசியத்தை உணர்த்த வேண்டும்.

 

இதற்கு என்ன செய்யலாம்? 

  1. படிப்பை முடிக்காமல், ஒரு குறைந்தபட்ச வேலை இல்லாமல் சேரும் காதலின் அவல நிலையை விளக்க கல்லூரிகள் முயற்சிக்க வேண்டும். மதிப்பெண் கல்வியை விட இப்படிப்பட்ட வாழ்க்கைக் கல்விதான் இன்றைய மாணவர்களுக்கு தேவைப்படுகிறது.
  2. பெற்றோர் சம்மதமில்லாமல் திருமணம் செய்துகொண்டால் அந்த பையனுக்கோ, பெண்ணுக்கோ பெற்றோர் சொத்தில் சட்டப்படி பங்கில்லை என்ற கடுமையான சட்டத்திருத்தம் வந்தால் பணம் குறித்து உருவாக்கப்படும் நாடகக் காதல்களை ஒழிக்க முடியும்.
  3. பள்ளி, கல்லூரிகளில்  குறைந்தது இளநிலை பயிலும் மாணவ மாணவிகள் பெற்றோரின் சம்மதமிலாமல் திருமணம் செய்ய முடியாது என்ற கட்ட்ப்பாட்டை கொண்டுவரலாம்.  இன்று ஆண்-பெண் சம உரிமை, மாறிவரும் தொழில்நுட்பம் போன்றவைகளால் சில புதிய சிந்தனைகளும், வாழ்வியல், சட்ட வரையறைகளும் அத்தியாவசியமாகிறது.

 

காணொளிகள்:

http://www.youtube.com/watch?v=QENuiLnzjqk

http://www.youtube.com/watch?v=dVBhWI2jz9E

http://www.youtube.com/watch?v=RSXcwG4LQ0o

http://www.youtube.com/watch?v=gbjWcWPyBsM

 

 

by Swathi   on 05 Aug 2013  3 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும் தமிழ்ச் சமூகத்தில் தேங்கியுள்ள ஆங்கில மோகமும், நம் தாய்மொழி சந்திக்கும் சவால்களும் தீர்வுகளும்
தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி தமிழின அடையாளங்களின் இன்றைய நிலையும் செல்லவேண்டிய திசையும் ..ச.பார்த்தசாரதி
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
கருத்துகள்
16-Sep-2013 07:41:58 ராமகிருஷ்ணன் said : Report Abuse
பணக்கார வீட்டு பெண்கள் படிக்கும் பொழுது காதல் என்று யார் வந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். அந்த ஆண் பெண்ணை விரும்புகிறானா அப்பாவின் சொத்தை விரும்புகிறானா என்பதை பெண் முதலில் கண்டுபிடித்துக்கொள்ளவேண்டும். அப்பா சொந்தமாக சம்பாதித்தது இந்த சொத்து. அப்பா தனக்கு ஒன்று தரமாட்டார் என்று சொல்ல வேண்டும்.
 
05-Aug-2013 22:18:24 கார்த்திக் said : Report Abuse
காதலின் வலி(மை)யை புரிந்தவர்கள், ஒரு நல்ல தகப்பனின் அன்பை ஏற்க மறுகிறார்கள். இவர்கள் எங்கே, அன்பான வாழ்க்கையில் பயணப்படப் போகிறார்கள்.
 
05-Aug-2013 11:54:21 ந.ஜ.போண் said : Report Abuse
வேர்ல்ட் ஒப் வோமேன் இஸ் ஹேர் ஹோமே , WHOLE வேர்ல்ட் இஸ் ஹிஸ் ஹோமே . தேரே ஆர் ONLY TWO ENERGY இன் திஸ் வேர்ல்ட் ONE இஸ் ஹேர் அண்ட் OTHER இஸ் HIM. தேரே ஆர் நோ ப்ரீ LUNCH OR ப்ரீ ENERGY இன் திஸ் வேர்ல்ட் . WE ஆர் DUPED FOR 2,300 YEARS NON STOP BY THE PAPAL அண்ட் மொணர்ச்சி. DONOT TRY TO SOLVE.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.