LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பிரமாண்ட படங்களை இயக்குவது ஏன் : சொல்கிறார் ஷங்கர் !!

இந்த வருட தீபாவளிக்கு ரசிகர்கள் அனைவரும் ஆவளோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் ஐ. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீஸரும், பாடல்களும் இணையதளங்களை திணறடித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தனது 'ஐ' படம் குறித்து இயக்குநர் ஷங்கர், சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் இயக்குநர் ஷங்கர் கூறியவற்றின் முக்கிய அம்சங்கள்:


ஐ' படத்துக்காக நடிகர் விக்ரமின் ஒத்துழைப்பு என்னை வியக்க வைத்தது. வேறு ஒரு நடிகர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பாரா என்பது சந்தேகமே. இப்படத்தில் நடிப்பதற்காக நான் விக்ரமை மட்டுமே அணுகினேன். 


தற்போது நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். தலையை மொட்டையடிக்க வேண்டும் என்றவுடன், வேறொரு நடிகராக இருந்தால் தயங்கி இருப்பார். ஆனால், விக்ரம் 'ஐ' படத்திற்காக எதையும் செய்யத் தயாராகவே இருந்தார்.


இப்படத்திற்கு ஏன் அதிக பட்ஜெட் என்பது நீங்கள் திரையில் பார்த்தால் தெரியும். 


தற்போது ரசிகர்கள் தொலைக்காட்சியில் அதிகமான படங்களைப் பார்த்து நாளுக்கு நாள் மாறியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பெரிய பெரிய விஷயங்களை எதிர்பார்த்து திரைப்படத்திற்கு வரும் ரசிகர்களை நாம் திருப்திப்படுத்த வேண்டும். பிரம்மாண்டத்தை எதிர்பார்த்துதான், எனது படத்திற்கு வருகிறார்கள். அவர்களை நான் திருப்திபடுத்த வேண்டும்.


சீன மொழியில் படத்தை டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டது தயாரிப்பாளரின் எண்ணம்தான். நாங்கள் சீனாவில் படப்பிடிப்பு நடத்தும்போதே, அங்குள்ள மக்கள் படத்தைப் பார்க்க விரும்பினார்கள்.


ரசிகர்கள் என்னிடம் சின்ன பட்ஜெட் படங்களைக் காண விரும்பினால், இயக்கத் தயாராகத்தான் இருக்கிறேன். ஆனால், ஷங்கரிடம் இருந்து பிரம்மாண்டத்தைதான் விரும்புகிறார்கள். அவர்கள் சொல்வதைதான் நான் செய்துக்கொண்டிருக்கிறேன். பெரிய பட்ஜெட் படங்கள் இயக்குவது போர் அடிக்கும்போது சிறு பட்ஜெட் படங்கள் இயக்குவேன்.


ஆனால், பெரிய பட்ஜெட் படங்கள் இயக்குவது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய கற்பனைக்கு பிரம்மாண்டமான பட்ஜெட் தேவைப்படுகிறது" என்று ஷங்கர் சிஎன்என்-ஐபிஎன் தொலைகாட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

by Swathi   on 27 Sep 2014  0 Comments
Tags: Shankar I Movie   Director Shankar   Shankar Vikram   ஷங்கர் விக்ரம்   ஷங்கர் ஐ   ஐ திரைப்படம்   இயக்குனர் ஷங்கர்  
 தொடர்புடையவை-Related Articles
விரைவில் உருவாக இருக்கிறதாம் இந்தியன் 2 !! விரைவில் உருவாக இருக்கிறதாம் இந்தியன் 2 !!
ஐ படம் ரிலீசானால் எனது மார்க்கெட் எகிறிவிடும் - சொல்கிறார் பவர் ஸ்டார் !! ஐ படம் ரிலீசானால் எனது மார்க்கெட் எகிறிவிடும் - சொல்கிறார் பவர் ஸ்டார் !!
கத்தி, மெட்ராஸ் பாடல்களை அடிக்கடி கேட்கும் ஷங்கர் !! கத்தி, மெட்ராஸ் பாடல்களை அடிக்கடி கேட்கும் ஷங்கர் !!
பிரமாண்ட படங்களை இயக்குவது ஏன் : சொல்கிறார் ஷங்கர் !! பிரமாண்ட படங்களை இயக்குவது ஏன் : சொல்கிறார் ஷங்கர் !!
முடிந்தது ஐ படத்தின் படபிடிப்பு... கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்... முடிந்தது ஐ படத்தின் படபிடிப்பு... கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்...
பட்ஜெட்டில் சாதனை படைத்த ஐ திரைப்படம் !! பட்ஜெட்டில் சாதனை படைத்த ஐ திரைப்படம் !!
யு டியூப்பில் சாதனை படத்து வரும் ஐ !! யு டியூப்பில் சாதனை படத்து வரும் ஐ !!
பிரமாண்டத்திலும், காட்சியமைப்பிலும் ஷங்கரை யாரும் நெருங்க முடியாது : நான் ஈ பட இயக்குனர் !! பிரமாண்டத்திலும், காட்சியமைப்பிலும் ஷங்கரை யாரும் நெருங்க முடியாது : நான் ஈ பட இயக்குனர் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.