LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

த்ரெட்டிங்(புருவ முடி திருத்துதல்) செய்யும் பெண்களுக்கு ஏற்படும் அபாயம்!

இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள் அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் ஆரோக்கியத்தைக்கெடுத்துக் கொள்ளுகிறார்கள். இப்போது பெண்கள் தங்களை அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் உயிரை தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் இன்னோர் பழக்கத்தையும் இங்கே விளக்கவே இந்தப் பதிவு!!!!

புருவமுடிகளைத் திருத்துகிறோம் (த்ரெட்டிங்)(THREADING)என்ற பெயரில் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள். புருவமுடிகள் என்பவை பிராணன் இயங்கும் இடங்கள். இறப்பு நெருங்கி வரும் பொழுது புருவமுடிகள் தொட்டாலே கையோடு வந்துவிடும். உடல் பிராணன் தீர்ந்து போய் விடுவதாலேயே புருவ முடிகள் கொட்டிப் போய் விடுகின்றன.இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றபோது ( த்ரெட்டிங்)(THREADING), கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம், காம பூரி வர்மம், திலர்த வர்மம் (பொட்டுவர்மம் (அல்)சுடரொளியின் காலம்), மின் வெட்டி வர்மம் (முன்வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்), மந்திரக் காலம், அடக்க வர்மம், நேம வர்மம், பட்சிவர்மம், கண்ணாடி வர்மம் (மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண்ட வர்மம் போன்ற கண்ணைச் சுற்றி உள்ள வர்மங்களில், பாதிப்புக்கள் நேர்கின்றன. இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றவர்களுக்கு இந்த வர்மங்களைப் பற்றித் தெரிய வாய்ப்பேயில்லை. இதனால் பெண்களின் பிராண சக்தி குறைகின்றது. விளைவு குறைவான பிராண சக்தியால், ஆயுளும் குன்றி, பிராண சக்தி குன்றிய குழந்தைகளையும் பெற்று, ஆரோக்கியக் குறைவான சமுதாயத்திற்கே வித்திட்டு விடுகின்றனர்.இவை ஆயுளைக் குறைப்பதுடன் பல பெரும் நோய்களுக்கும் காரணம் ஆகின்றன. பல ஆங்கில மருத்துவத்துக்கு பிராணன் எங்கே நிலை கொண்டிருக்கிறது. அதை சிதைத்தால் என்ன விளை வுகள் நேரும் என்பது தெரியாது. இதனால் பல ஆங்கில மருத்துவர்கள் கத்திகளை வைக்கக் கூடாத இடத்தில் வைத்து பலரை பரலோகம் அனுப்பி விடுகிறார்கள்.

வர்மங்களில் நிலை கொண்டிருக்கும் மின் காந்த சக்தியை எந்த வழியிலும் சிதைப்பது கூடாது.மேலும் உடலின் முக்கிய சக்திப்பாதைகள் கண்களுக்கு அருகில் ஓடுகின்றன, எனவே இந்த இடங்களில் கை வைப்பது நமக்கு நாமே தலைக்கு கொள்ளி வைத்துக் கொள்வது போல ஆகும்.இறைவன் உறையும் இடம் இதுவே!!!! இதை உணர்ந்து நம் நாட்டுக் கலாச்சாரத்திற்கு ஏற்றாற் போல் பெண்கள் நல்ல சுத்தமான விளக் கெண்ணையை கண் புருவங்களில் தீட்டுவ தானாலும், கண்ணில்இட்டு வருவதனாலும் தம் ஆயுளையும் காத்து, நீட்டித்து, நல்ல பிராணனும், நீண்ட ஆயுள், நிறை ஆரோக்கியமும் கொண்ட தேகத்தால் இதே போல நற்குழந்தைகளையும் பெற்று நல் ஆரோக்கிய சமுதாயத்திற்கு வித்திடுங்கள் .

by Swathi   on 04 Oct 2017  0 Comments
Tags: Eyebrow Threading   Eyebrow Threading Disadvantages   த்ரெட்டிங்   புருவ முடி திருத்துதல்           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
த்ரெட்டிங்(புருவ முடி திருத்துதல்) செய்யும் பெண்களுக்கு ஏற்படும் அபாயம்! த்ரெட்டிங்(புருவ முடி திருத்துதல்) செய்யும் பெண்களுக்கு ஏற்படும் அபாயம்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.