LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

காவல் துணை ஆணையர்களுக்கு மாஜிஸ்திரேட் அதிகாரம் - ஜெயலலிதா அறிவிப்பு !!

காவல் துணை ஆணையர்களுக்கு மாஜிஸ்திரேட் அதிகாரம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

 

சென்னையில் 3 நாட்கள் நடந்த ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளின் மாநாட்டில் நிறைவுரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா 312 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார், இந்த அறிவிப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த சில அறிவிப்புகள் பின்வருமாறு,

 

40 வயது முடிந்த காவலர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை :

 

காவல் துறைக்கு முழு சுதந்திரம் தரப்பட்டதால் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது என்றார். மேலும், 40 வயது முடிந்த காவலர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இலவச உடல் பரிசோதனை செய்யப்ப்படும்.

 

மாஜிஸ்திரேட் அதிகாரம் :

 

சென்னை நகர காவல் துறையில் துணை ஆணையாளர்களுக்கு மாஜிஸ்திரேட்களுக்கு இணையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது, மற்ற பெருநகரங்களில் உள்ள காவல் துறை துணை ஆணையாளர்களுக்கும் வழங்கப்படும்.

 

கோவை மாவட்டத்தில் வடவள்ளி, அன்னூர், மதுக்கரை காவல் நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படும். பேரூர் டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு புதிய முகாம் அலுவலகம் அமைக்கப்படும். கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் நிலயைத்துக்கு புதிய கட்டடமும், திட்டக்குடி மற்றும் மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம், திருப்பூர் மவாட்டம் அவிநாசி ஆகிய இடங்களில் உள்ள டி.எஸ்.பி.களுக்கு குடியிருப்புடன் கூடிய அலுவலகங்கள் கட்டப்படும்.

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் புதிதாக தாலுகா மருத்துவமனையும், ஸ்ரீரங்கத்தில் குற்றப் பிரிவு மற்றும் போக்குவரத்துக் காவல் நிலையங்களுக்கும் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

 

விழுப்புரம் மாவட்டத்தில் 35 இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும்.

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் மெலட்டூர், கபிஸ்தலம் காவல் நிலையங்களுக்கு புதிய கட்டடமும், ஈரோடு மாவட்டம் பெருந்துறை டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடமும் கட்டப்படும்.

 

தொடர்பு அதிகாரி நியமனம் :

 

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல் நிலையங்களில் ஒரு தொடர்பு அதிகாரி நியமிக்கப்படுவார்.

 

நிவாரண நிதி உயர்வு:

 

அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்போருக்கு நிவாரணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உயிரிழப்புக்கு 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தால் 1 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும்.

by Swathi   on 13 Dec 2013  0 Comments
Tags: District Collectors Conference   Jayalalitha   காவல் துணை ஆணையர்   மாஜிஸ்திரேட்           
 தொடர்புடையவை-Related Articles
ஜெயலலிதாவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சந்திப்பு !! ஜெயலலிதாவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சந்திப்பு !!
காவல் துணை ஆணையர்களுக்கு மாஜிஸ்திரேட் அதிகாரம் - ஜெயலலிதா அறிவிப்பு !! காவல் துணை ஆணையர்களுக்கு மாஜிஸ்திரேட் அதிகாரம் - ஜெயலலிதா அறிவிப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.