LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

உங்களுக்கு தலை சுற்றுகிறதா ?

யாருக்காவது லேசான தலைசுற்றல் ஏற்பட்டாலே ரத்த அழுத்தம் பார்க்கிறோம். ஆனால் பழங்காலத்தில் கடவுள் முன்பாக, தரையில் உடல் உறுப்புகள் அனைத்தும் படும்படியாக விழுந்து கும்பிட்டு விட்டு எழுந்திருப்பார்கள். அப்படி எழுந்த பின்னர் சரியாக நிற்க முடிந்தால் உடலில் எந்த குறையும் இல்லை என்று அர்த்தம். கும்பிட்டு விட்டு எழுந்து நின்றவுடன் தடுமாற்றம் ஏற்பட்டால் ரத்த ஓட்டம் சரியான அளவில் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.


ஞாபக சக்தியைத் தூண்டும் நரம்புகளில் முக்கியமானவை காதின் நரம்பு வழியே செல்கின்றன. அந்த இடத்தில் அழுத்தம் தருவதால் ஞாபக சக்தி தூண்டபடுகிறது. அதனால் தான் அந்த காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்களின் காதை பிடித்து அழுத்தினர்! முன்பெல்லாம் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு காதை பிடித்துக் கொண்டு பிள்ளையாருக்கு தோப்புக் கரணம் போடுவார்கள். இதுவும் நினைவாற்றலைத் தூண்டும்.


இரண்டு உள்ளங்கைகள் மற்றும் இரண்டு உள்ளங்கால்களிலும் அக்குபிரஷர் செய்து வந்தால் எந்த நோயும் வராது. வந்த நோய்களும் படிபடியாகக் குறையும். உடல் இளைப்பதற்கும் அக்குபிரஷர் சிகிச்சை செய்யலாம். உள்ளங்கால், உள்ளங்கையில் குறிபிட்ட இடத்தில் பத்து வினாடிகள் அழுத்தினால் ஆறு மாதத்தில் பலன் தெரியும்.


உடல் இளைத்தாலும் அல்லது உடற்பயிற்சி, டயட்டை விட்டுவிட்டாலும் மீண்டும் எடை கூடி குண்டாகி விடுவோம். ஆனால் அக்குபிரஷர் சிகிச்சையில் உணவுக் கட்டுபாட்டுடன் இருந்தால் எடை கூடாது. உடல் இளைப்பதற்கு அக்குபிரஷர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் காலங்களில் உடலுறவில் ஈடுபடக்கூடாது. அப்படி இருந்தால் கூடிய சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும்.


14 முதல் 18 வயது வரை உள்ள பெண்கள் பலர் ஒற்றைத் தலைவலியால் அதிகமாக அவதிபடுகின்றனர். இந்த வயதில் அதிகமாக சுரக்கும் ஹார்மோன்களால் ஏற்படும் செக்ஸுவல் டென்ஷனால் இந்தத் தலைவலி ஏற்படுகிறது. சிலருக்கு சளியினால் முக்கடைபு ஏற்பட்டு அதனாலும் தலைவலி ஏற்படலாம். மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறுகளாலும் தலைவலி வரும். இவற்றை அக்குபிரஷர் முலம் குணபடுத்த முடியும்.


உச்சி முதல் பாதம் வரை மென்மையாக அக்குபிரஷர் செய்து கொண்டால் உடல் பருமன், தலைவலி, சைனஸ், ரத்தபோக்கு, வெள்ளைபடுதல், மூட்டுவலி, முழங்கால் வலி, இடுப்பு வலி, முழங்கை வலி, உயர் ரத்த அழுத்தம் போன்ற பெரும்பாலான பிரச்சினைகளை அக்குபிரஷர் முலம் தீர்த்து வைக்க முடியும். குறிப்பாக நினைவாற்றலை அக்குபிரஷர் மூலம் பெருக்கிக் கொள்ள முடியும்.


இந்த சிகிச்சையை டாக்டர் ஆலோசனைபடி மட்டுமே செய்ய வேண்டும்.

by Swathi   on 05 Feb 2014  6 Comments
Tags: Thalai Sutral   தலை சுற்றல்   தலை சுற்றுகிறதா   அக்குபிரஷர்   Dizziness   Dizziness While Standing     

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
உங்களுக்கு தலை சுற்றுகிறதா ? உங்களுக்கு தலை சுற்றுகிறதா ?
கருத்துகள்
21-Oct-2017 07:00:52 karthika said : Report Abuse
சில சமயங்களில் சாப்பிட்டுவதன் தலை சுயற்ற காரணம் என்ன
 
05-Jul-2016 12:23:31 manikandan said : Report Abuse
hai vanakam enaku thala rmba parama iruku thalaiyila suruku suruku nu kuthal edukuthu rmba thala weight theriyuthu kaluthula rmba valikuthu kalutha thirupa kuda mudiyala rmba valikuthu enaku rmba pain ah iruku plz ethuku nalla treatment ah sollunga plz help me thank uuuu
 
05-Jul-2016 12:22:57 manikandan said : Report Abuse
hai vanakam enaku thala rmba parama iruku thalaiyila suruku suruku nu kuthal edukuthu rmba thala weight theriyuthu kaluthula rmba valikuthu kalutha thirupa kuda mudiyala rmba valikuthu enaku rmba pain ah iruku plz ethuku nalla treatment ah sollunga plz help me thank uuuu
 
08-Jun-2016 16:35:54 பன்னீர்செல்வம் said : Report Abuse
எனது மனைவிக்கு தலை சுற்றல் பிரச்சனையல் அவதிபடுகிறார். தீர்வு கூறவும்.
 
23-Aug-2014 08:13:02 ரம்யா said : Report Abuse

மருந்துக்கு மேல் மருந்து சாப்பிடுவதால் அனைத்து பிரச்சினை தீர்வதில்லை. இது ஒரு குறுகிய காலத் தீர்வைத்தான் தரும். இயற்கை முறையில் நோய்க்கான மூலகாரணத்தை கண்டுணர்ந்து தீர்வு காண முயற்சிக்கவும்.. கோவை அருகில் ஹீலர் ரங்கராஜன் , ஹீலர் பாஸ்கர், உங்கள் அருகில் உள்ள ஒரு சித்த மருத்துவர் என யாராவது ஒருவரை சந்தித்து பிரச்சினைக்கான காரணத்தை அறிய முயற்சிக்கவும். தொடர்புக்கு இங்கே செல்லவும் http://www.valaitamil.com/classifieds/siddha-medicine-naturopathy-ctitles393-394.html

 
23-Aug-2014 07:32:31 Dhamodharan.k said : Report Abuse
நான் கீழ முதுகு வலியால் அவதி படுகிறேன் . அதற்காக முதுகில் இன்ஜெக்சண் போட்டேன் .உடனே சுவாச கோளாறு வந்தது .அதற்கு ஒரு இன்ஜெக்ட்சன் போட்டார்கள் . உடனே நெஞ்சி வலி வந்தது .டாக்டர் சொன்னாரு ஒரு சிறிய அட்டாக் வந்து போயிருக்கு ...நான் முதுகு வலிக்காக மாத்திரை சாப்பிடுகிறேன் . இப்போதும் அப்ப அப்ப நெஞ்சி வலி வருகிறது . இன்று காலை எனக்கு தலை சுற்றல் வந்தது .இதற்கு நல்ல தீர்வு சொல்லுங்கள் ..நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.