LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா

சச்சின் தெரியும்… தியான் சந்த் தெரியுமா..?

ஆகஸ்ட் 29 – நம் தேசிய விளையாட்டு தினம். இந்தத் தேதியை ஏன் இதற்குத் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியுமா? இது தியான் சந்த் அவர்களின் பிறந்த நாள். நம் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் பிறந்து, இந்தியாவை உலக நாடுகள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கிய ஹாக்கியின் சகாப்தம் தியான் சந்த். இந்தியராகப் பிறந்த ஒவ்வொருவரையும் பெருமைப்பட வைத்த, இந்த மண்ணின் மைந்தனது கதை இது… தொடர்ந்து படியுங்கள்.
இந்தியாவுக்கு விடுதலை கிடைப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலம் அது. அந்த எளிய பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த இளைஞன் ஒரு ஹாக்கிப் போட்டியை பார்க்கப்போனான். போட்டியில் ஆங்கிலேயர்கள் ஆதரித்த அணிக்கு எதிர் அணியை அவன் உற்சாகபடுத்த… ஆங்கிலேய அதிகாரி கடுப்பாகி விட்டார். நீ வேண்டுமானால் ஆடேன் பார்க்கலாம்… என்று நக்கலாக சொல்ல அந்த போட்டியில் களம் இறங்கி அவன் அடித்த கோல்கள் நான்கு.
மிகப் பிரகாசமான மின்விளக்குகள் இல்லாத காலத்தில், நிலவொளியில் பயிற்சி செய்யும் பழக்கம் சந்துக்கு உண்டு. இந்திய அணி ஒன்று நியூசிலாந்து அணியுடன் மோத முதல் முறையாக தேர்வானது. அதில் இவரும் இடம் பெற்றார். எண்ணற்ற போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணி கலக்கி எடுத்தது. அந்தப் போட்டித் தொடரில் மொத்தம் 192 கோல்களை இந்திய அணி அடித்தது. அந்த கோல்களில் நூறு கோல்கள் சந்த் அடித்தது. ஒரே ஒரு போட்டியை தவிர மற்ற எல்லா போட்டியிலும் (பதினெட்டு) இந்தியா வென்றிருந்தது. டான் பிராட்மன் இவரின் ஆட்டத்தை பார்த்துவிட்டு நாங்கள் ரன் அடிப்பது போல இவர் கோல் அடிக்கிறார் என்று வியந்திருக்கிறார்.
இங்கிலாந்து அணி தான் அதற்கு முந்தைய ஒலிம்பிக்கில் சாம்பியன். இந்திய அணி இங்கிலாந்தில் போய் கலந்து கொண்ட பதினொரு போட்டியிலும் வென்று விடவே ஒலிம்பிக் போட்டிக்கு இங்கிலாந்து அணிக்கு பதிலாக இந்தியா போனது.
இறுதிப்போட்டிக்கு முந்தைய எல்லா போட்டிகளிலும் வென்றிருந்த இந்திய அணி மொத்தம் 26 கோல்கள் அடித்தது. அதில் பதினோரு கோல்கள் நம் நாயகன் அடித்தது. இறுதிப்போட்டி ஹாலந்து நாட்டின் தலைநகரில் ஹாலந்து அணிக்கு எதிராக நடந்தது. சொந்த ஊர் உற்சாகத்தோடு ஆடிய அந்த அணியை மூன்றுக்கு பூஜ்யம் என்று இந்தியா வென்று முதல் தங்கத்தை பெற்றது. அதில், தியான் சந்த் அடித்தது இரண்டு கோல்கள்.
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள சென்ற பொழுது வழியனுப்ப வெறும் மூன்று நபர்கள்தான் வந்திருந்தார்கள். ஆனால், பதக்கத்துடன் திரும்பிய பொழுது பம்பாய் நகரே ரசிகர்களால் நிரம்பி இருந்தது.
அடுத்த ஒலிம்பிக்கிலும் கலக்கி எடுத்தது இந்திய அணி. இறுதிப்போட்டியில் அமெரிக்காவை கதற விட்டார்கள். இருபத்தி நான்கு கோல்கள் அடித்தது இந்திய அணி. அமெரிக்க அணியோ ஒரே ஒரு கோல் மட்டுமே அடித்திருந்தது. இதில் சந்த் எட்டு கோல்களும், அவர் தம்பி பத்து கோல்களும் அடித்திருந்தார்கள்.
இங்கிலாந்து அரசி ஒரு முறை இவரிடம் தன் குடையை கொடுத்து விளையாடச் சொல்ல, அதிலும் கோல் அடித்திருக்கிறார் தியான்சந்த்! பெர்லின் ஒலிம்பிக் போட்டி ஆரம்பித்த பொழுது முப்பத்தி ஒரு வயது அவருக்கு. தோல்வி என்பது என்னவென்றே தெரியாத இந்திய அணி பயிற்சி போட்டிகளில் தோற்றிருந்தது.
முறையான சீருடைகள், காலணிகள் என எதுவும் இல்லாமலும், ரயிலில் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்து வந்து இறங்கிய களைப்பு தீருவதற்குள் ஜெர்மனியுடனான பயிற்சி போட்டியில் கலந்து கொண்டது இந்திய அணி. இதில் 4/1 என்று நம் அணி தோற்றது. இருந்த போதிலும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் சிறப்பக விளையாடி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.
பெர்லின் நகரில் இறுதிப்போட்டி… ஹிட்லர் தனது நாட்டு அணியின் ஆட்டத்தைப் பார்க்க ஆர்வத்துடன் அமர்ந்து இருந்தார். ஏற்கனவே இந்தியாவை தோற்கடித்த கம்பீரத்தோடு இருந்தது ஜெர்மனி அணி. இந்திய அணியினர் காங்கிரஸ் கொடியை வணங்கிவிட்டு களம் புகுந்தார்கள். முதல் பாதியில் இந்திய அணி ஒரே ஒரு கோல் தான் அடித்தது.
தியான் சந்த் தான் அணிந்திருந்த காலணியை கழற்றி எறிந்தார். வெறுங்கால்களோடு ஆட்டக்களத்தில் புகுந்தார். பார்வையாளர்கள் ஆர்ப்பரிக்க, தியான் சந்தின் கால்களும், கைகளும், குறிப்பாக ஹாக்கி மட்டையும் மாயஜாலம் செய்யத் துவங்கியது… மூன்று கோல்களை அவர் அடிக்க இந்தியா மூன்றாவது முறையாக ஒலிம்பிக் தங்கத்தை வென்றது. தியான் சந்த் ரயில்வே தண்டவாளங்களில் பந்தை இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு அடித்துக்கொண்டே சென்று பயிற்சி செய்வார் என்று சொல்வார்கள்.
உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை பரவச் செய்த இவரை வறுமை வாட்டியது. வேட்டையாடுவதிலும், மீன் பிடிப்பதிலும் தன் நேரத்தைக் கழித்தார். கடைசி காலத்தில், அங்கீகாரம் கிடைக்காமல் ஒரு மருத்துவமனையின் ஜெனரல் வார்டில் கல்லீரல் புற்றுநோயால் இறந்து போனார்..!
நெடுங்காலம் கழித்து அவரது மகன் ஆக்லாந்து நகருக்குப் சென்ற பொழுதுதான் தியான் சந்தின் அருமை புரிந்தது. அவரது ஹாக்கி மட்டையின் மாயாஜாலத்தால் பார்வையாளர்களை பிரமிக்க வைத்த அவரைப்பற்றிய பல குறிப்புகள் அங்கே காணப்பட்டது. வியன்னாவில், நான்கு கைகள் – ஒவ்வொன்றும் ஹாக்கி ஸ்டிக்கைப் பிடித்திருக்குமாறு அவரது சிலை சிரிக்கிறது. அது தியான் சந்த் எனும் சகாப்தம்..!
இவரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஐதான் இந்தியாவில் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடுகிறோம்.

by Swathi   on 30 Mar 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.