LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை செய்திகள்

தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் - தொடக்கவிழா!

அருந்தமிழ் உறவுடையீர், வணக்கம்.

      தமிழை இயல், இசை, நாடகம் என மூவகைப்படுத்தி நம் முன்னோர் உரைப்பர். இவற்றுள் நடுவணாக உள்ள இசைத்தமிழ் நீண்ட வரலாறுகொண்டது. தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சேக்கிழாரின் பெரியபுராணம், சீவக சிந்தாமணி, அருணகிரிநாதரின் பாடல்கள், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் வண்ணப்பாடல்கள்  உள்ளிட்ட நம் தமிழ் நூல்களில் இசைகுறித்தும், இசைக்கருவிகள் குறித்தும், இசைக்கலைஞர்கள் குறித்தும். மிகுதியான செய்திகள் இடம்பெற்றுள்ளன. மேலும் தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளிலும் இசை குறித்த செய்திகள் பதிவாகியுள்ளன.

      இருபதாம் நூற்றாண்டில் ஆபிரகாம் பண்டிதர், விபுலாநந்த அடிகளார், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார், வீ.ப.கா. சுந்தரம் உள்ளிட்ட இசை அறிஞர்கள் இசைத்தமிழ் ஆய்வில் தம் வாழ்நாளை ஒப்படைத்துப் பணியாற்றியுள்ளனர். அண்ணாமலை அரசர் தமிழிசை இயக்கம் கண்டு நிலைத்த புகழ்பெற்றார். "பொங்கு தமிழ் மன்றம்", "தந்தை பெரியார் தமிழிசை மன்றம்" உள்ளிட்ட அமைப்புகளும் தமிழ்நாட்டில் மீண்டும் ஓர் இசைப்புரட்சிக்கு வித்திட்டன.

 ’நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய’ அடியவர்களைக் கண்ட இத்தமிழ்நாட்டில் இசைத்தமிழ் ஆவணங்கள் யாவும் முறைப்படித் தொகுத்துவைக்கப்படாத ஒரு நிலை உள்ளது. ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டு வரலாறுகொண்ட இசைத்தமிழின் வரலாற்றை விளக்கும் வகையில் முனைவர் மு. இளங்கோவன் இயக்கத்தில் தொல்லிசையும் கல்லிசையும் என்ற ஆவணப்படத்தை உருவாக்க உள்ளோம். இந்த ஆவணப்படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு தங்களை மிகுந்த மகிழ்வுடன் அழைக்கின்றோம்.

 

இன்னவண்ணம்

வயல்வெளித் திரைக்களம்

புதுச்சேரி - 605 003

தொடர்புக்கு: 94420 29053

 

நாள்: 11.02.2019, திங்கள் கிழமை,

நேரம்: அந்திமாலை 6. 00 மணி - 8. 30 மணி

இடம்: செயராம் உணவகம், புதுச்சேரி

 

 

நிகழ்ச்சி நிரல்

அந்திமாலை 6.00 முதல் 6.30 வரை

கலைமாமணி சு.கோபகுமார் மாணவர்கள் வழங்கும்

அறுமுகனம் இன்னிசை

 

தமிழ்த்தாய் வாழ்த்து: கலைமாமணி கா. இராசமாணிக்கம்

வரவேற்புரை: முனைவர் அரங்க. மு. முருகையன்

 

முன்னிலை

புலவர். ந. ஆதிகேசவன், தமிழ்மாமணி சீனு.இராமச்சந்திரன்,

தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கன், திரு. தூ. சடகோபன்

 

தலைமை: தவத்திரு. சிவஞான பாலய சுவாமிகள்

மயிலம் திருமடம்

 

ஆவணப்படத்தைத் தொடங்கிவைத்தல்

மாண்புமிகு சட்டப்பேரவையின் துணைத்தலைவர்

திரு. வி. பொ. சிவக்கொழுந்து

 

சிறப்புரை

முனைவர் பா. மீ. சுந்தரம்

இசையாய்வறிஞர், புதுச்சேரி

 

பாராட்டுரை

திரு. இரா.சிவா, சட்டமன்ற உறுப்பினர் &

தலைவர், புதுவை அரசின் தொழில் வளர்ச்சிக் கழகம்

முனைவர் சீனி. திருமால்முருகன்

தலைவர், அதியமான் கல்வி நிறுவனங்கள், ஊத்தங்கரை

திரு. வ. பாசிங்கம்

தலைவர், ஆல்பா கல்வி நிறுவனங்கள்

 

வாழ்த்துரை

திரு. கே. பி. கே. செல்வராஜ் (தலைவர், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்)

முனைவர் வி. முத்து (தலைவர், புதுவைத் தமிழ்ச் சங்கம்)

மருத்துவர் பால் ஜோசப். கனடா

முனைவர் ஒப்பிலா. மதிவாணன்

திரு. சோழன்குமார்

முனைவர் ப. சிவராசி, இசுலாமியாக் கல்லூரி, வாணியம்பாடி

 

தொகுப்புரை: செல்வி கு. அ. தமிழ்மொழி நன்றியுரை: திரு. செ. திருவாசகம்

by Swathi   on 07 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா சென்னையில் ஐந்து நாட்கள் தமிழிசை விழா
தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம் தமிழிசை கற்க வலைத்தமிழ் கல்விக்கழக இணைய தளம்
பண்ணிசை விழா  -தொடக்க நிகழ்வை வட  அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது. பண்ணிசை விழா -தொடக்க நிகழ்வை வட அமெரிக்காவில் முதல் முறையாக இவ்வாண்டு வலைத்தமிழ் குழு தொடங்கியது.
திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்
தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு  பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள். தமிழாய்வு அறக்கட்டளையின் இரண்டாம் உலகத் தமிழாய்வு மாநாடு பேரூராதீனம், சிரவை ஆதீனம் இணைந்து நடத்திய மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்.
தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா
தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.
எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம் எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.