LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF

உங்கள் திறமையின் மீது சந்தேகப்படாதீர்கள் இளைஞர்களுக்கு அப்துல் கலாம் அறிவுறுத்தல்

ஜெய்ப்பூரில் நடந்து வரும் இலக்கியத் திருவிழாவில் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியு மான டாக்டர் அப்துல் கலாம் இளைஞர்களுக்கு தன் வாழ்க்கையில் இருந்து அனுபவங்களை தொகுத்து வழங்கிய அறிவுரைகள் பின்வருமாறு :

இளைஞர்களே! ஒரு போதும் உங்கள் திறமையின் மீது சந்தேகப்படாதீர்கள். இஸ்ரோ தலைவர் சதீஷ் தவான் என்னிடம் 7 ஆண்டுகளுக்குள் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோளை நிறுத்த ராக்கெட் சிஸ்டம் ஒன்றை வடிவமைக்குமாறு கேட்டார்.

என்னால் முடியுமா? என எனக்கு அப்போது சந்தேகமாகவும், குழப்பமாகவும் இருந்தது. அதை உருவாக்க என்ன செலவானாலும் பரவாயில்லை. அதை உருவாக்க எத்தனை பேர் உங்களுக்கு வேண்டும். அதை செய்ய உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கூறுங்கள். அதை மத்திய அரசிடமிருந்து பெற்றுத்தருகிறேன். ஆனால், நீங்கள் அதை செய்து முடிக்க வேண்டும் என்றார்.

எனக்கு ஆச்சர்யமாகவும், குழப்பமாகவும் இருந்தது. என்னை விட எத்தனையோ மூத்த அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால், என்னை ஏன் இதற்குத் தேர்ந்தெடுத்தார்கள் என யோசித்தேன். என்னால் இதை செய்ய முடியுமா? எனக்கு சந்தேகமாக இருந்தது. ஆனால், அந்த சந்தேகத்தை என் மனதிலிருந்து நீக்கிய பிறகே, நான் அதை செய்ய முடிந்தது.

நான் பைலட்டாக வேண்டும் என ஆசைப் பட்டேன். அதனால்தான் ஏரோனாட்டிக்கல் என்ஜினியரிங் படிப்பைத் தேர்வு செய்து படித்தேன். பைலட்டாக வருவதற்கு தேர்வுக் குழுவிற்குப் போன போது அங்கே 10 பேர் இருந்தனர். ஆனால், 9 சீட்டுகளே இருந்தது. இறுதியில் நான்தான் வெளியேற்றப்பட்டேன். எனக்கு அப்போது மனமே உடைந்து விட்டது போலிருந்தது. ஆனால், என்னால் பைலட்டாக வர முடியாமல் போனாலும், இந்த நாட்டுக்கே குடியரசுத் தலைவராக பின்னாளில் வந்துவிட்டேன்.

நான் குடியரசுத் தலைவராக ஆனதும் விமானப் படை தளபதியிடம் எனக்கு விமானத்தில் பறக்க கற்றுக் கொடுங்கள் என கேட்டேன். அவர் எனக்கு 6 மாத காலம் பயிற்சியளித்தார். என்னால் பைலட்டாக முடிய வில்லை என்றாலும், இன்றுவரை என்னுடைய பறக்கும் கனவை நினைவாக்கி கொண்டுதான் இருக்கிறேன். இது எப்படி நடந்தது? நான் கனவு கண்டதால் நடந்தது. நான் பறக்க வேண்டும் என கனவு கண்டேன். அதனால் நடந்தது. என்னுடைய கனவுகள் எண்ணங்களானது. என் எண்ணங்கள் செயலாக மாறியது.

உங்கள் கனவுகள் நனவாக உங்களுக்கு நான் ஒரு மந்திரத்தை தருகிறேன். உங்கள் திறமையின் மீது ஒருபோதும் சந்தேகப்படாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்தாலும், நான் கொடுத்த இந்த மந்திரத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு என்ன கிடைக்கும் என்று எப்போதும் நினைக்காதீர்கள். அங்கு தான் பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. இந்தியாவை உலகிலேயே வாழ்வதற்கு சிறந்த நாடாக மாற்றுவோம் என உறுதி யெடுத்துக் கொள்ளுங்கள்!

இவ்வாறு டாக்டர் அப்துல் கலாம் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

by Swathi   on 27 Jan 2015  1 Comments
Tags: திறமை   அப்துல் கலாம்   இளைஞர்கள்   Skills   Youths   Abdul Kalam     
 தொடர்புடையவை-Related Articles
அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார் - வே.ம.அருச்சுணன் அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார் - வே.ம.அருச்சுணன்
ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் காலமானார் !! ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் காலமானார் !!
எப்படி பேசவேண்டும்? எப்படி பேசவேண்டும்?
தொழில்திறன் மிக்க நாடாக இந்தியா உருவாக வேண்டுமானால் பள்ளிக்கல்வித் திட்டத்தில் மாற்றம் அவசியம் - அப்துல் கலாம் !! தொழில்திறன் மிக்க நாடாக இந்தியா உருவாக வேண்டுமானால் பள்ளிக்கல்வித் திட்டத்தில் மாற்றம் அவசியம் - அப்துல் கலாம் !!
உங்கள் திறமையின் மீது சந்தேகப்படாதீர்கள் இளைஞர்களுக்கு அப்துல் கலாம் அறிவுறுத்தல் உங்கள் திறமையின் மீது சந்தேகப்படாதீர்கள் இளைஞர்களுக்கு அப்துல் கலாம் அறிவுறுத்தல்
ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (விண்வெளி பொறியியல்) ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (விண்வெளி பொறியியல்)
அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவியுங்கள் !! மோடிக்கு, விவேக் கோரிக்கை !! அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவியுங்கள் !! மோடிக்கு, விவேக் கோரிக்கை !!
புதியதோர் உலகம் செய்வோம் படக்குழுவினரை வாழ்த்திய அப்துல் கலாம் !! புதியதோர் உலகம் செய்வோம் படக்குழுவினரை வாழ்த்திய அப்துல் கலாம் !!
கருத்துகள்
02-Apr-2015 10:10:50 சேகர்.p said : Report Abuse
சூப்பர் good
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.