LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    கால்நடை - மீன் வளர்ப்பு Print Friendly and PDF

கால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு...

இன்று ஹைதராபாத்தில்  இருந்து மத்திய  அரசாங்கத்தின் தேசிய  நிறுவனத்தில் இருந்து வருகிறேன் என்று ஒருவர் வந்து இருந்தார். மத்திய அரசு கால்நடைகளின் GENOME SEQUENCING அதாவது அந்த திட்டத்தில் கால்நடைகளின்  ரத்த மந்திரிகளின் மூலம் அவற்றின் DNA போன்றவற்றை சோதிக்கலாம் என்று ஒரு அரை மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.

சிறிது நேரம் பேசிய பிறகு மத்திய அரசிடம் இருந்து பெற பட்ட அத்தாட்சி இருக்கிறதா? அல்லது இந்த திட்டம் சம்மந்தமாக அறிக்கை , அரசு நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ளதா என வினவினேன்.

 சேனாபதி காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் தலைவருக்கு ஒரு விண்ணப்பம் எழுதி அத்துடன் தங்களுடைய வாக்காளர் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் நகல் வழங்கும் படி கேட்டு கொண்டேன்.

தமிழக அரசாங்கத்தின் தலைவர் மற்றும் செயலர் கால்நடை துறை, துணை செயலர் கால்நடை துறை திருப்பூர் மாவட்டம் கையொப்பம் பெற்று வாருங்கள் பின்னர் ரத்த மாதிரிகள் எடுப்பதற்கு அனுமதி தருகிறேன், என்றேன்.

உடனே அவர் நான் என்னுடன் பணி புரிபவர்களிடம் ஒப்புதல் பெற்று வருகிறேன், நான் இப்பொழுது மத்திய அரசாங்கத்திற்கு ஆலோசகராக மட்டுமே பணி புரிகிறேன் என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.

 இந்திய நாட்டில் பாரம்பரிய கால்நடைகள் , வன விலங்குகள், தாவரங்கள் போன்றவற்றின் உயிருடன் மாதிரிகள் எடுப்பதற்கோ  ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கோ சென்னையில் தேசிய பல்லுயிர் பாதுகாப்பு கழகம் என உருவாக்க பட்டு, சென்னையில் அதன் அலுவலகம் உள்ளது. NATIONAL BIODIVERSITY AUTHORITY என்று பெயர், மேலும் இதற்கு NATIONAL  BIODIVERSITY ACT  2002 என்று சட்டமும் இயற்ற பட்டுள்ளது.

மேலும் தேசிய பல்லுயிர் பாதுகாப்பு கழகத்தின் அனுமதி இன்றி மாதிரிகள் எடுப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக இந்த மாதிரிகள் நாட்டை விட்டு எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது. இது போன்ற ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு நடுவன் அரசின் ஆராய்ச்சி மையம்  CENTRE FOR  SCIENCE AND  MOLECULAR BIOLOGY ஹைதராபாத்தில் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கேயும் இதன் ஆராய்ச்சி அறிக்கை வழங்க மட்டுமே உரிமை உள்ளது. மாதிரிகள் எடுத்து செல்ல அனுமதி இல்லை. இதற்கு பெயர்  BIO PIRACY .

அலட்சியமாக விவசாயிகள் கால்நடை வைத்து இருப்போர், அதிகாரி என்று சொல்லும் யார் வேண்டுமானால் கால்நடைகளை ரத்த மாதிரிகளையோ NOSE  SWAB  என சொல்லக்கூடிய மூக்கில் இருந்து பெறக்கூடிய மாதிரிகளையோ எடுக்க அனுமதிக்க கூடாது.

கால்நடை வைத்து இருப்போர் இந்த தகவல்களை பகிர்ந்து பாதுகாப்புடன் இருக்கும் படி கேட்டு கொள்கிறேன்.

கார்த்திகேய சிவசேனாபதி
11-06-2018

by Swathi   on 13 Jun 2018  0 Comments
Tags: Biosamples   Cattles   Kankeyam Cattles   கார்த்திகேய சிவசேனாபதி   NATIONAL BIODIVERSITY ACT   NATIONAL BIODIVERSITY AUTHORITY   BIO PIRACY  
 தொடர்புடையவை-Related Articles
கால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு... கால்நடை வைத்து இருப்போரின் கனிவான கவனத்திற்கு...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.