LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

தமிழ் தொழிலதிபர் மற்றும் பல தமிழ் அமைப்புகளை அமெரிக்காவில் உருவாக்கிய முனைவர். பழனி ஜி.பெரியசாமி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை அமெரிக்க செனட்டர்கள், தமிழ்ச்சங்க தலைவர்கள்வெளியிட்டனர்...

அமெரிக்காவில் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் மற்றும் தமிழ்நாடு அறக்கட்டளை போன்ற அமைப்புகளை நாற்பது ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய தொழிலதிபர் முனைவர்.பழனி.ஜி.பெரியசாமி அவர்களது நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை இரவு வாசிங்டன் பகுதியில் மிகச்சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்ச்சியை மேரிலாந்து மாநில முன்னாள் துணைச் செயலாளரும், தற்போதைய போக்குவரத்து ஆணையருமான டாக்டர் ராஜன் நடராஜன் அவர்கள் முன்னின்று ஏற்பாடு செய்தார்கள். "இதய ஒலி" என்ற முனைவர் பழனி.ஜி.பெரியசாமி அவர்களது வாழ்க்கை வரலாற்று ஆங்கில நூலை டாக்டர் ராஜன் நடராஜன் அவர்கள் வெளியிட விழாவிற்கு வந்திருந்த James Rosapepe, Douglas JJ Peters ஆகிய இரு செனட்டர்கள் பெற்றுக்கொண்டார்கள். "இதய ஒலி" தமிழ் பிரதியை வாசிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவர் பரிவிளாகம் ச.பார்த்தசாரதி வெளியிடத் திரு.பாலகன் ஆறுமுகசாமி, திரு. சிவசைலம், மருத்துவர் குருசாமி, மருத்துவர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

1960 களில் அமெரிக்கா வந்த முதல் தலைமுறையைச் சார்ந்தவர் இவர். அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்று, மேரிலாந்தில் கல்லூரிப் பேராசிரியராக இருந்து மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவர். தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., சிவாஜி என்று பலருடன் மிக நெருக்கமாகப் பழகியவர். எம்.ஜி.ஆர் அமெரிக்காவிற்குச் சிகிச்சைக்காக வந்தபோது அவருக்கு அனைத்து உதவிகளையும் உடனிருந்து செய்தவர். எம்.ஜி.ஆர். இவர் வீட்டிற்கு வந்து தங்கி அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளைத் தமிழக அதிகாரிகளுடன் சுற்றிப்பார்த்துள்ளார். மேரிலாந்தில் உள்ள தன் வீட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்துள்ளார். இந்தியாவில் ஐந்து நட்சத்திர விடுதிகளை வைத்துள்ள முதல் தமிழர் என்று சொல்லலாம். லீ மெரிடியன் விடுதி சென்னையிலும் , கோயம்புத்தூரிலும் , தாரணி சர்க்கரை ஆலை, தாரணி ஷுகர்ஸ் டிஸ்டிலரி நிறுவனங்கள் , பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள் என்று பரந்து விரிந்துள்ள இவரது தொழில்கள் வியப்பூட்டுகிறது. முதல் தலைமுறை பட்டதாரியான இவர் சாதித்துள்ள இந்தத் தொழில் உயரம் , கடந்துவந்த பாதை என்று அனைத்தையும் பதிவு செய்துள்ள நூல் "இதய ஒலி" ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல். அடுத்த தலைமுறை தொழில்முனைவோருக்கு ஊக்கமளிக்கவல்லது. 
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இவர் முன்னின்று உருவாக்கிய வாசிங்டன் தமிழ்ச்சங்கத்தில் அந்த அமைப்பின் இந்நாள் தலைவர் பரிவிளாகம் ச. பார்த்தசாரதி அவரது சமூகப் பங்களிப்புக்காக தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி, விருது வழங்கிச் சிறப்பித்தார். முனைவர்.பழனி.ஜி.பெரியசாமி அவர்கள் தந்து அமெரிக்க இல்லத்திற்கு " தமிழ்நாடு" என்று பெயர் வைத்துள்ளார். அவரிடம் பேசியபோது, தன் பத்தாண்டு கால முக்கிய காலத்தை தமிழ் அமைப்புகளை உருவாக்க உழைத்ததாகக் குறிப்பிடுகிறார். இவர் தமிழ்நாடு அறக்கட்டளைக்காக அரசிடமிருந்து இடம் வாங்கி அதை எம்.ஜி.ஆரை வைத்து அடிக்கல் நாட்டியத்தை நினைவுகூர்கிறார். தொழிலில் பல சாதனைகளைச் செய்திருந்தாலும், தமிழ் உணர்வுடன் இருப்பதும் , தமிழ் வளர்ச்சி குறித்து சிந்திப்பதும் , பழக எளிமையாக இருப்பதும், நம் இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். 
இவர் தமிழ்நாடு அறக்கட்டளையில் தலைமைப்பொறுப்பில் இருந்தபோது டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி துணைத்தலைவராக இருந்ததும், அமெரிக்கா வந்து சமூக அக்கறையுடனும், தமிழ்நாட்டில் வளர்ச்சி குறித்து சிந்தித்தவர்கள் அனைவரும் தமிழ் அமைப்புகள் வழியே ஒருங்கிணைத்ததையும் நினைவு கூர்ந்தார். மேலும் 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச்சங்கம் பயன்படுத்திய சில கடிதங்களை இந்நாள் தலைவருக்கு வழங்கினார். 
இசை நிகழ்ச்சியினிடையே இந்தப் புத்தக வெளியீட்டை முனைவர். பாலாஜி ,முன்னாள் தமிழ்ச்சங்கத்தலைவர் திரு. கோபிநாத, திரு.முரளிபதி , தமிழ்ச்சங்க துணைத்தலைவர் திரு.கொழந்தைவேல் இராமசாமி, இயக்குநர்கள் திரு.இராஜாராமன் மற்றும் திரு.பாபு விநாயகம் ஆகியோர் செம்மையாக செய்திருந்தனர்..

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் உருவாகக் காரணமாக இருந்தவரும் , தமிழ்நாடு அறக்கட்டளையை உருவாக்கியவருமான தொழிலதிபர் முனைவர்.பழனி.ஜி.பெரியசாமி அவர்களது நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை இரவு வாசிங்டன் பகுதியில் மிகச்சிறப்பாக நடந்தது. இந்த நிகழ்ச்சியை மேரிலாந்து மாநில முன்னாள் துணைச் செயலாளரும், தற்போதைய போக்குவரத்து ஆணையருமான டாக்டர் ராஜன் நடராஜன் அவர்கள் முன்னின்று ஏற்பாடு செய்தார்கள். "இதய ஒலி" என்ற முனைவர் பழனி.ஜி.பெரியசாமி அவர்களது வாழ்க்கை வரலாற்று ஆங்கில நூலை டாக்டர் ராஜன் நடராஜன் அவர்கள் வெளியிட விழாவிற்கு வந்திருந்த James Rosapepe, Douglas JJ Peters ஆகிய இரு செனட்டர்கள் பெற்றுக்கொண்டார்கள். "இதய ஒலி" தமிழ் பிரதியை வாசிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவர் பரிவிளாகம் ச.பார்த்தசாரதி வெளியிடத் திரு.பாலகன் ஆறுமுகசாமி, திரு. சிவசைலம், மருத்துவர் குருசாமி, மருத்துவர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

1960 களில் அமெரிக்கா வந்த முதல் தலைமுறையைச் சார்ந்தவர் இவர். அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்று, மேரிலாந்தில் கல்லூரிப் பேராசிரியராக இருந்து மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவர். தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., சிவாஜி என்று பலருடன் மிக நெருக்கமாகப் பழகியவர். எம்.ஜி.ஆர் அமெரிக்காவிற்குச் சிகிச்சைக்காக வந்தபோது அவருக்கு அனைத்து உதவிகளையும் உடனிருந்து செய்தவர். எம்.ஜி.ஆர். இவர் வீட்டிற்கு வந்து தங்கி அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளைத் தமிழக அதிகாரிகளுடன் சுற்றிப்பார்த்துள்ளார். மேரிலாந்தில் உள்ள தன் வீட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்துள்ளார். இந்தியாவில் ஐந்து நட்சத்திர விடுதிகளை வைத்துள்ள முதல் தமிழர் என்று சொல்லலாம். லீ மெரிடியன் விடுதி சென்னையிலும் , கோயம்புத்தூரிலும் , தாரணி சர்க்கரை ஆலை, தாரணி ஷுகர்ஸ் டிஸ்டிலரி நிறுவனங்கள் , பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள் என்று பரந்து விரிந்துள்ள இவரது தொழில்கள் வியப்பூட்டுகிறது. முதல் தலைமுறை பட்டதாரியான இவர் சாதித்துள்ள இந்தத் தொழில் உயரம் , கடந்துவந்த பாதை என்று அனைத்தையும் பதிவு செய்துள்ள நூல் "இதய ஒலி" ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல். அடுத்த தலைமுறை தொழில்முனைவோருக்கு ஊக்கமளிக்கவல்லது. 

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இவர் முன்னின்று உருவாக்கிய வாசிங்டன் தமிழ்ச்சங்கத்தில் அந்த அமைப்பின் இந்நாள் தலைவர் பரிவிளாகம் ச. பார்த்தசாரதி அவரது சமூகப் பங்களிப்புக்காக தமிழ்ச்சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி, விருது வழங்கிச் சிறப்பித்தார். முனைவர்.பழனி.ஜி.பெரியசாமி அவர்கள் தந்து அமெரிக்க இல்லத்திற்கு " தமிழ்நாடு" என்று பெயர் வைத்துள்ளார். அவரிடம் பேசியபோது, தன் பத்தாண்டு கால முக்கிய காலத்தை தமிழ் அமைப்புகளை உருவாக்க உழைத்ததாகக் குறிப்பிடுகிறார். இவர் தமிழ்நாடு அறக்கட்டளைக்காக அரசிடமிருந்து இடம் வாங்கி அதை எம்.ஜி.ஆரை வைத்து அடிக்கல் நாட்டியத்தை நினைவுகூர்கிறார். தொழிலில் பல சாதனைகளைச் செய்திருந்தாலும், தமிழ் உணர்வுடன் இருப்பதும் , தமிழ் வளர்ச்சி குறித்து சிந்திப்பதும் , பழக எளிமையாக இருப்பதும், நம் இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். 

இவர் தமிழ்நாடு அறக்கட்டளையில் தலைமைப்பொறுப்பில் இருந்தபோது டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி துணைத்தலைவராக இருந்ததும், அமெரிக்கா வந்து சமூக அக்கறையுடனும், தமிழ்நாட்டில் வளர்ச்சி குறித்து சிந்தித்தவர்கள் அனைவரும் தமிழ் அமைப்புகள் வழியே ஒருங்கிணைத்ததையும் நினைவு கூர்ந்தார். மேலும் 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச்சங்கம் பயன்படுத்திய சில கடிதங்களை இந்நாள் தலைவருக்கு வழங்கினார். 

இசை நிகழ்ச்சியினிடையே இந்தப் புத்தக வெளியீட்டை முனைவர். பாலாஜி ,முன்னாள் தமிழ்ச்சங்கத்தலைவர் திரு. கோபிநாத, திரு.முரளிபதி , தமிழ்ச்சங்க துணைத்தலைவர் திரு.கொழந்தைவேல் இராமசாமி, இயக்குநர்கள் திரு.இராஜாராமன் மற்றும் திரு.பாபு விநாயகம் ஆகியோர் செம்மையாக செய்திருந்தனர்..

1
by Swathi   on 20 Nov 2016  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
உழவர் திருவிழா – 2019 பஹ்ரைன் மனாமாவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது உழவர் திருவிழா – 2019 பஹ்ரைன் மனாமாவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
விக்டோரியா கேசி தமிழ் மன்றம் உற்சாகப் பொங்கலை கொண்டாடியது விக்டோரியா கேசி தமிழ் மன்றம் உற்சாகப் பொங்கலை கொண்டாடியது
மிசௌரி தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டம் இந்தவாரம் தொடங்குகிறது.. மிசௌரி தமிழ்ச்சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டம் இந்தவாரம் தொடங்குகிறது..
அமெரிக்காவில் தமிழர் உள்பட 4 இந்தியர்களுக்கு முக்கிய பதவி- அதிபர் டிரம்ப் உத்தரவு! அமெரிக்காவில் தமிழர் உள்பட 4 இந்தியர்களுக்கு முக்கிய பதவி- அதிபர் டிரம்ப் உத்தரவு!
அமெரிக்காவில் தமிழ்ச்சங்கங்கள் அமெரிக்காவில் தமிழ்ச்சங்கங்கள்
தமிழகம்- கொரியா இடையே நெருங்கிய உறவுகள் இருந்துள்ளது-தென் கொரிய தூதர் தகவல்! தமிழகம்- கொரியா இடையே நெருங்கிய உறவுகள் இருந்துள்ளது-தென் கொரிய தூதர் தகவல்!
விரைவில் அமையவிருக்கிறது ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை உங்களின் பங்களிப்புடன்  விரைவில் அமையவிருக்கிறது ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை உங்களின் பங்களிப்புடன் 
விரைவில் அமைகிறது யோக ஆராய்ச்சிக்கான திருமூலர் தமிழ் இருக்கை! விரைவில் அமைகிறது யோக ஆராய்ச்சிக்கான திருமூலர் தமிழ் இருக்கை!
கருத்துகள்
14-Jan-2018 16:38:20 பாலகணேசன் வெள்ளிமலை said : Report Abuse
வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தங்கள் குடும்பம் சார்பாக தமிழகத்தில் படிப்பு கம்மியாக உள்ளவர்களை தேர்ந்தெடுத்து தாங்கள் வாழும் நாட்டில் ஓருவருக்காவது வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.