LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

மழை பெய்யும் நேரங்களில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு !!

மழை பெய்யத் தொடங்கும் முதல் சில மணி நேரங்கள், வாகனம் ஓட்டுபவர்களுக்கு மிகவும் ஆபத்தானவையே. சாலைகளில் சாதாரண நாட்களில், என்ஜின் ஆயில், கிரீஸ் ஆகியவை சிந்தி கிடக்கும். அதனுடன் மழை நீரும் சேரும்போது சாலை மிகவும் வழுக்கலாக ஆகிவிடும். தொடர்ந்து மழை பெய்யும்போது, வழுக்கும் படலம் நீக்கப்பட்டுவிடும் என்றாலும், ஆரம்பத்தில் கவனமாக இருப்பது அவசியம்.


ஈரமான, வழுக்கும் சாலையில் சறுக்குவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், மிதமான, சீரான வேகத்தில் செல்வது நல்லது. 


மழை நேரத்தின்போது சாதாரண வேளையைப் போல பிரேக் சிறப்பாகச் செயல்படுவதில்லை என்பதை ஞாபகத்தில் வையுங்கள். 


சற்று முன்பாகவே பிரேக்கை அழுத்துவதும், வழக்கமான அழுத்தத்தை விட மெதுவாகவும் பிரேக்கை அழுத்துவது நல்லது. அது உங்களுக்கும், உங்களுக்கு முன்னால் உள்ள வாகனத்துக்கும் நிறுத்தும் தூரத்தை அதிகரிப்பதோடு, உங்களுக்குப் பின்னால் வரும் வாகன ஓட்டிக்கு நீங்கள் நிறுத்தப் போகிறீர்கள் என்ற எச்சரிக்கையும் தரும்.


முன்னால் செல்லும் வாகனத்துக்கும், உங்கள் வாகனத்துக்கும் சுமார் 20-30 மீட்டர் இடைவெளி இருக்கட்டும். நெருக்கமாகச் சென்றால், அடுத்த வாகனத்தில் இருந்து அடிக்கும் தண்ணீர் உங்கள் முகத்தில் அடிக்க கூடும்.


ஓடும் தண்ணீரைக் குறுக்கே கடக்க முயற்சிக்காதீர்கள். ஏனெனில் ஓடும் தண்ணீரின் வேகம் உங்கள் வாகனத்தின் எடையை விட அதிகமாகும் பட்சத்தில், அது உங்களுக்கே ஆபத்தாக முடியலாம்.


தண்ணீர் தேங்கிய சாலையில் போக்குவரத்துச் சிக்கலில் மாட்டிக்கொண்டால் வாகனத்தை ஆப் செய்யாதீர்கள். என்ஜின் ஓடிக்கொண்டே இருக்கட்டும். தேங்கியிருக்கும் தண்ணீரின் அளவு தெரியாத நிலையில், சீராக, மெதுவாக வாகனத்தை ஓட்டுங்கள். இடையில் நிறுத்தாதீர்கள். நிறுத்தினால் 'எக்சாஸ்ட் குழாய்'க்குள் தண்ணீர் புகுந்துவிடும்.


வளைவில் திரும்பும்போதும், சாலையில் ஒருபுறமாக ஒதுங்கும்போதும் 'இன்டிகேட்டர்களை' அவசியம் ஒளிர விடுங்கள். மழைநேரத்தின் போது வழக்கமான வேகத்தை விட மெதுவாகத் திரும்புங்கள்.


திறந்திருக்கும் பாதாளச் சாக்கடை மூடியில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க, சாலையின் மத்தியில் செல்லுங்கள். உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனத்தைக் கவனித்து, அதைப் பின்பற்றிச் செல்லுங்கள்.

by Swathi   on 21 Dec 2013  0 Comments
Tags: மழைக்காலம்   வாகனம் ஓட்டுபவர்கள்   வாகனம் ஓட்டுபவர்கள் கவனத்திற்கு   Safety Tips   Rain Driving Safety   Raining Season     

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
பற்கள் நமது உடல் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி. பற்கள் நமது உடல் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி.
நலம் காக்கும் சித்த மருத்துவம் : கூதிர் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள் - 35 நலம் காக்கும் சித்த மருத்துவம் : கூதிர் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள் - 35
நலம் காக்கும் சித்த மருத்துவம் : கார்காலத்தில் பின்பற்ற வேண்டிய பழக்க  வழக்கங்கள் - 34 நலம் காக்கும் சித்த மருத்துவம் : கார்காலத்தில் பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள் - 34
நலம் காக்கும் சித்த மருத்துவம் : கண் பாதுகாப்பு – 28 நலம் காக்கும் சித்த மருத்துவம் : கண் பாதுகாப்பு – 28
வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பிற்கான சில முக்கிய விழிப்புணர்வு குறிப்புகள் !! வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பிற்கான சில முக்கிய விழிப்புணர்வு குறிப்புகள் !!
பெண்களே உஷார்... உஷார்... பெண்களே உஷார்... உஷார்...
மழை காலத்தை சமாளிக்க சில டிப்ஸ் மழை காலத்தை சமாளிக்க சில டிப்ஸ்
ஏ.டி.எம் மையங்களில் அரங்கேறும் புது வகையான திருட்டு : விழிப்புடன் இருக்க சில டிப்ஸ் !! ஏ.டி.எம் மையங்களில் அரங்கேறும் புது வகையான திருட்டு : விழிப்புடன் இருக்க சில டிப்ஸ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.