LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் Print Friendly and PDF

முருங்கை இலையின் மருத்துவ குணங்கள் !!

"முருங்கை தின்னா முன்னூறு வராது" என்பது நமது கிராமங்களில் சொல்லப்படும் ஒரு பழமொழி. இதன் பொருள் என்னவென்றால், முருங்கை இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் 300 நோய்களிடம் இருந்து பாதுகாப்பு பெறுவர் என்பதே ஆகும். முருங்கை இலை, பூக்கள், காய் என அனைத்தும் மிகச்சிறந்த மருத்துவ குணம் உடைய உணவுப்பொருள்கள் ஆகும்.

முருங்கை கீரையின் பயன்கள் :

முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் இருக்கிறது. ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கேரட்டைவிட 4 மடங்கு வைட்டமின் ஏ உள்ளது. பாலைவிட 4 மடங்கு கால்சியம் உள்ளது. உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் முருங்கையிலை கொண்டுள்ளது என பட்டியலிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும்.

உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.

முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம். உடல் அழகும், பலமும், தெம்பும் கிடைக்கும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கை இலை சாறு இரத்தசுத்தி செய்வதுடன், எலும்புகளையும் வலுப்படுத்தும். கர்ப்பப் பையை வலுப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.

ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும்.

பித்த மயக்கம், கண் நோய், சொரிய மாந்தம் முதலியவை நீங்கும். இருமல், குரல் கம்மல், தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. மலச்சிக்கலை போக்கும். மெலிந்த தேகம் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.

முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது.  முருங்கை கீரை சாப்பிடாதவர்கள் முருங்கை இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் சாம்பார் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம். தினமும் 8 முதல் 24 கிராம் முருங்கைப்பொடி உணவில் சேர்த்துக்கொள்ளும் போது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும்.
 

by Swathi   on 28 Sep 2015  6 Comments
Tags: Murungai Keerai   Murungai Leaves   முருங்கை இலை   முருங்கை கீரை           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையின் மருத்துவ குணங்கள் !! முருங்கை இலையின் மருத்துவ குணங்கள் !!
முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள் !! முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள் !!
முருங்கை கீரை ஒரு அற்புதம் !! முருங்கை கீரை ஒரு அற்புதம் !!
கருத்துகள்
18-Mar-2021 04:16:20 Pavithran Ravi said : Report Abuse
Dear writer/publisher, The contents are good and happy to see the whole details and good benefits in a single blog. But I can't able to copy the details. Actually I have tried to copy the details to create a awareness of drumstick leaf and flower to people. If I can able to copy the details, it will be more helpful to create the awareness. Kindly let me know the reason for the same if you like to reply. Thanking You
 
25-Jul-2017 10:48:23 Jeevitha said : Report Abuse
This is very useful for human body.. thanks friend
 
13-Mar-2017 22:10:01 நிஷா said : Report Abuse
தேங்க்ஸ்
 
01-Nov-2016 23:13:31 Kalaichelvan said : Report Abuse
மிகவும் பயன் உள்ளதாக இருந்தது மிக்க நன்றி
 
01-Nov-2016 23:12:43 Kalaichelvan said : Report Abuse
மிகவும் பயன் உள்ளதாக இருந்தது மிக்க நன்றி
 
27-Jan-2016 23:02:12 இளவரசி said : Report Abuse
திஸ் ஆல் நியூ வெரி useful
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.