LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    காய்கறிகள்-கீரைகள்-பூக்கள் Print Friendly and PDF

முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள் !!

முருங்கை தின்னால் முன்னூறு வராது என்பது நமது முன்னோர்களின் பழமொழி... 


அதாவது, முருங்கை, இலை, காய் ஆகியவற்றை சாப்பிட்டு வருபவர்கள் 300 நோய்களுக்கு மேல் வராமல் பாதுகாக்கப்படுவார்கள் என்கிறது இந்த பழமொழி. 


முருங்கை இலை, பூக்கள், காய் என அனைத்தும் மிகச்சிறந்த உணவுப்பொருளாகப் பயன்படுகிறது.


முருங்கை இலையை உருவி எடுத்துவிட்டு அதன் காம்புகளை நறுக்கி மிளகு ரசம் செய்து சாப்பாட்டுடன் சாப்பிடலாம்.. முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும்.


முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் இருக்கிறது. ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி நிறைந்திருக்கிறது-. 


வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கேரட்டைவிட நான்கு மடங்கு வைட்டமின் ஏ உள்ளது. பாலைவிட 4 மடங்கு கால்சியம் உள்ளது. உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் முருங்கையிலை கொண்டுள்ளது என பட்டியலிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.


ஏழைக்குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படுகிறார்கள் என அனைவரிடமும் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் நடுத்தரக் குடும்பத்தில் உள்ள குழந்தைகள்கூட ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கருத்து கணிப்பு சொல்கிறது. ஏனெனில் நாம் எடுத்துக்கொள்ளும் அன்றாட உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்து இருப்பதில்லை.

எனவே முருங்கை கீரையை அடிக்கடி சமையலில் சேர்த்து சாப்பிடவேண்டும். 


முருங்கை கீரை சாப்பிடாதவர்கள் முருங்கை இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் சாம்பார் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம். தினமும் 8 முதல் 24 கிராம் முருங்கைப்பொடி உணவில் சேர்த்துக்கொள்ளும் போது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும்.


100 கிராம் முருங்கை இலையில் 92 கலோரி உள்ளது.


ஈரப்பதம்-75.9% 


புரதம்-6.7%


கொழுப்பு-1.7%


தாதுக்கள்-2.3%


கார்போஹைட்ரேட்கள்-12.5%


கால்சியம்-400மி.கி


பாஸ்பரஸ்-70மி.கி


சாதாரண வீடுகளில் காணப்படும் முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் முருங்கை பல வியாதிகளை குணப்படுத்தும் சக்திகளை தன்னகத்தே கொண்டுள்ளது. உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.


பச்சை கீரைகளில் எண்ணிலடங்கா பயன்கள் இருக்கிறது நாம் தான் அதனை முறையாக பயன்படுத்த மறந்துவிட்டோம். கீரை உணவுகளை சும்மாவா சேர்க்க சொல்லி சொன்னார்கள் நம் முன்னோர்கள். மருத்துவ பொக்கிஷம் நிறைந்த முருங்கைகீரையை இனிமேல் தவறாமல் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

by Swathi   on 25 Oct 2014  4 Comments
Tags: முருங்கை கீரை   Murungai keerai   Drumstick leaves              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையின் மருத்துவ குணங்கள் !! முருங்கை இலையின் மருத்துவ குணங்கள் !!
முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள் !! முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள் !!
முருங்கை கீரை ஒரு அற்புதம் !! முருங்கை கீரை ஒரு அற்புதம் !!
கருத்துகள்
22-Jun-2017 07:31:47 ஸ்ரீ said : Report Abuse
குழந்தை பெற விரும்பும் பெண் டெய்லி முருங்கை கீரை சாறு kudikalama
 
25-May-2016 22:18:31 Malathy said : Report Abuse
Thanks for kind info
 
01-Nov-2014 23:15:59 Niththiy said : Report Abuse
நன்மையை தரக்கூடிய கருத்துக்கள் தங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் எனக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்கிறேன் எனக்கு முழுமையான திருப்தி.
 
01-Nov-2014 23:15:58 Niththiy said : Report Abuse
நன்மையை தரக்கூடிய கருத்துக்கள் தங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் எனக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்கிறேன் எனக்கு முழுமையான திருப்தி.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.