|
|||||
ஈஸி கேசரி |
|||||
தேவையானவை : ரவா - 1 கப் சர்க்கரை - 1 கப் ஏலக்காய் பொடி - 1/4 டேபிள் ஸ்பூன் நெய் - 4 டேபிள் ஸ்பூன் முந்திரிப்பருப்பு - 10 திராட்சை - 10 கேசரி கலர் -சிறிது செய்முறை: 1.முதலில் ஒரு வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் நெய்யை விட்டு, அதில் ரவாவைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். 2.பிறகு அதே வாணலியில் சிறிது நெய்யை விட்டு, முந்திரி, திராட்சை ஆகியவற்றையும் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். 3.கனமான ஒரு பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதில் கேசரி கலர் கலந்துவிடவும் 4.தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, ரவாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டி விடாமல் கிளறவும் 5.ரவா எல்லா நீரையும் இழுத்துக் கொண்டு, நன்றாக வெந்துக் கெட்டியானதும், அதில் சர்க்கரை சேர்த்துக் கிளறவும் 6.நன்றாகக் கிளறிய பின் நெய் சேர்த்து மீண்டும் கிளறவும். 7.கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். |
|||||
by Arul Jothi on 18 May 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|