Tamil Dictionary Baby Names Movies Tamil Sites Temples Events eBooks WebTV Photos Videos FM Radio Forum Classifieds Thirukkural Mobile Apps
  Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
 முதல் பக்கம் முதல் பக்கம்   உடல்நலம்-மருத்துவம் நூல்கள் உடல்நலம்-மருத்துவம் நூல்கள்

’இனிப்பு’ எழுதியவனின் வாழ்க்கையை மாற்றிய புத்தகம்

இனிப்பு நூலின் மூன்றாம் பதிப்பு வெளியாகிறது. கடந்த ஆண்டு புரட்டாசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் அம்மாதங்களின் குளிரை உணர இயலாத அளவுக்கு வெப்பம் தகிக்கும் விவாதங்கள் என் மீது நிகழ்த்தப்பட்டன. சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்த இயலும் என்று நான் எழுதிய கட்டுரைகளின் மீதான தாக்குதல்கள் அவை. சில அலோபதி மருத்துவர்கள் என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுத்தனர். இழிவு செய்தனர், அச்சுறுத்தினர், தொல்லை கொடுத்தனர். நான் எழுதிய தொடர் கட்டுரைகளில் சர்க்கரை நோயின் இயல்புகளையும் அதை அலோபதி அணுகும் முறைமையின் பாவங்களையும் வெளிப்படுத்தினேன். 
மரபுவழி மருத்துவர்களும் ஆர்வலர்களும் எனக்குத் துணை நின்றனர். எனது கட்டுரைகளைத் தொகுத்து, மேலும் சில கட்டுரைகளைச் சேர்த்து ‘இனிப்பு’ நூலாக வெளியிட்டோம். பதிப்பகம் தேடி அலைவதைக் காட்டிலும் நாமே வெளியிடலாம் என முடிவெடுத்தோம். சென்னைப் புத்தகக் காட்சியில் விற்பனைக்குக் கொண்டு வரலாம் எனத் திட்டமிட்டோம். இனிப்புடன் ‘முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை’ நூலையும் செம்மை வெளியீட்டகம் வெளியிட்டது. சென்னைப் புத்தகக் காட்சி நிறைவு நாளுக்கு முதல் நாள் மாலைதான் நூல்கள் வந்து சேர்ந்தன.
பெரும் விற்பனை வாய்ப்பைத் தவற விட்டு விட்டதாக சுற்றத்தார் அக்கறையுடன் வருந்தினர். இந்த நூல்களுக்காக கணிசமான முதலீடு செய்யப்பட்டிருந்த்து.
’நான் எப்போதும் நம்பும் இயற்கையின் பேராற்றல் சென்னைப் புத்தகச் சந்தையைவிட வலிமையானது’ என்பதை என் சுற்றத்தாரிடம் கூறினேன்.
எந்த விளம்பரமும் செய்யக் கூடாது, கடைகளுக்கு அனுப்பக் கூடாது ஆகிய கட்டுப்பாடுகளை செம்மை வெளியீட்டக விற்பனைப் பொறுப்பாளர் விஜயன் கதிர்வேலுக்கு விதித்தேன். இவை இரண்டையும் கடைப்பிடித்தால் விற்பனை செய்வது கடினம் என்பதை நான் அறிவேன். ஏறத்தாழ இருபது ஆண்டுகளாகப் பதிப்புத் துறையில் புழங்கிக் கொண்டிருப்பவன் நான். உத்திகளைக் கையாளாமல் புத்தக விற்பனை செய்வது பொருந்தாச் செயல்தான். ஆனாலும், ஒரு நேர்மையான / உண்மையான பொருளை மக்களிடம் எடுத்துச் செல்லும்போது எந்த உத்திகளையும் கையாளாமல் இருக்க வேண்டும். எவருக்கெல்லாம் இந்த உண்மை தேவையோ அவர்களுக்கு தகவல் கிடைக்கும். அனைவருக்கும் மேலான இயற்கையின் பேராற்றலிடம் இப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு எங்களுக்கான கடமைகளை மட்டும் செய்துகொண்டிருந்தோம்.
முகநூலில் எனது பதிவுகளைப் பார்த்துவிட்டு பல நூறு பேர் நூல்களை வாங்கத் துவங்கினர். மரபு வழி மருத்துவர்கள் கணிசமான எண்ணிக்கையில் நூல்களை வாங்கி, தங்களிடம் வரும் மக்களுக்கு வழங்கத் துவங்கினர். குறிப்பாக, தொடு சிகிச்சையாளர்கள் மிகுந்த ஆற்றலுடன், விருப்பத்துடன் ‘இனிப்பு’ நூலை மக்களிடம் கொண்டு சேர்க்கத் துவங்கினர்.
புத்துயிர், இயல்வாகை, வானகம், பூவுலகின் நண்பர்கள், உள்ளிட்ட அமைப்பினர் கணிசமான எண்ணிக்கையில் எமது நூல்களை வாங்கியதோடு, நேர்மையாக விற்பனைத் தொகையை அளித்து வருகின்றனர்.
சென்னைப் புத்தகச் சந்தைக்குப் பின்னர், இரண்டே மாதங்களில் இனிப்பு இரண்டாம் பதிப்பு வெளியானது. இப்போது, இரண்டாம் பதிப்பு நூல்களும் தீர்ந்து, மூன்றாம் பதிப்பு வெளியாகிறது. ஆறு மாதங்களில் மூன்று பதிப்புகள் வெளியாகியுள்ளன.
மனிதக் கணக்குகளைவிட, மனிதர்களுக்கு மேலான பேராற்றலின் கணக்கு மேன்மையானது என்பதற்கு என் வாழ்வில் நிறைய சான்றுகள் கிடைக்கின்றன. அவற்றில் இது ஒரு சிறிய சான்று. இனிப்பு மட்டுமல்ல, செம்மை வெளியீட்டகத்தின் ஐந்து நூல்கள் கடந்த ஆறு மாதங்களில் வெளியாகியுள்ளன. அவற்றில், 
முதல் மழை பெய்தபோது பூமியில் மரங்கள் இல்லை மரபுச் சுவை
இயற்கை வழியில் இனிய பிரசவம் 
ஆகிய நூல்களும் இரண்டாம் பதிப்புகளைத் தொட்டுவிட்டன.
இந்த விற்பனைக் கணக்குகளைக் கடந்த மனநிறைவு, இனிப்பு நூல் குறித்த மக்களின் கருத்துகள்தான்.
‘இந்த நூலை நான் வாங்கிய நாள் என் வாழ்வின் திருப்புமுனை நாள்’ என்று பலர் என்னிடம் கூறுவதுண்டு. கொடூரமான மருத்துவத்தின் பிடியிலிருந்து மனிதர்களை விடுவிக்கும் ஆயுதங்களில் ஒன்றாக இனிப்பு நூல் இருப்பதை உணர முடிகிறது. 
இனிப்பு ஆவணப்படமும் வளர்ந்து வருகிறது. அது இன்னும் வலிமை வாய்ந்த ஆயுதமாக இருக்க வேண்டும் என பேராற்றலை வேண்டுகிறேன்.
அலோபதி மருத்துவர்கள் என்னை இழிவு செய்தபோதெல்லாம், செம்மை வனத்தில் வேலை செய்து கொண்டே ‘இப்படியான அவமானங்கள் நமக்குத் தேவையா? நமது தொழில் இதுவல்லவே’ என வருந்துவேன். ஒரு நாள் இதற்கான பதில் எனக்கு உள்ளே உணர்த்தப்பட்ட்து, ‘இதுவே உன் பணி. இது விதிக்கப்பட்ட்து. இந்த எதிர்ப்புகளும் இழிவுகளும் உன்னை செம்மைப்படுத்தவே. உறுதியாக உனக்குச் சொல்கிறேன். இந்த வழியை நான் பாதுகாக்கிறேன். நீ தொடர்ந்து செல்ல்லாம்’ என்பது அந்த உணர்த்தல்.
பொதுவாக, எனக்குக் கிடைக்கும் உள்ளுணர்த்தல்களை நான் மீறுவதில்லை. இதற்கு எதிராக எவர் நின்றாலும் எது நேர்ந்தாலும் கலங்குவதுமில்லை. ஆகவே, அந்த உணர்த்தலுக்குப் பின்னர் வெறும் எழுத்தாளனாக, இயக்குனராக இல்லாமல் மரபு மருத்துவ நல வழிகாட்டியாகவும் மாறினேன்.
நான் ஒன்றை எழுதுகிறேன் என்றால், அதை நடைமுறைப்படுத்தவும் எனக்குத் தெரிய வேண்டும் என்பது என் எண்ணம். என்னால் நடைமுறைப்படுத்த இயலாத ஒன்றைப் பற்றி நான் ஏன் மக்களிடம் அறிவிக்க வேண்டும்?
அந்த வகையில், இனிப்பு நூல் வெளியீட்டுக்குப் பின்னர், எண்ணற்ற மக்களின் சர்க்கரை நோயை முற்றிலும் அகற்றும் நல வழிகாட்டியாகவும் இப்போது இயங்கிக் கொண்டுள்ளேன். இப்பணியில் வெகு அரிதான பின்னடைவுகளும் உள்ளன. அவையும் எதிர்கால மக்கள் நலனுக்கான அனுபவங்கள் என எண்ணிப் பணியாற்றிக் கொண்டுள்ளேன்.
ஒரு புத்தகம் வாசிப்பவரை மாற்ற வேண்டும் என்பார்கள். என் வாழ்வில், ’இனிப்பு’ புத்தகம் எழுதியவனையும் மாற்றிவிட்ட்து.
சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு நோய்களிலிருந்து மக்களை விடுவிக்கப் பணியாற்றிக் கொண்டிருக்கும் எனதருமை மரபுவழிச் சிகிச்சையாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். 
உங்கள் அனைவரின் நலனுக்காகவும் பேராற்றலை வேண்டுகிறேன்.
இனிப்பு உள்ளிட்ட செம்மை வெளியீட்டக நூல்களின் படிகள் பெற:
திரு. விஜயன் கதிர்வேல் : 7358887896
விற்பனைப் பொறுப்பாளர்

  0 Downloads   Posted on 10 Aug 2014

கருத்துகள்

27-Mar-2015 08:03:12 selvam said : Report Abuse
maximum
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய

பெயர் *  
இமெயில் *  
கருத்து *  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.

முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Tamil e-books Category

  மொழி-கலாச்சாரம்  மொழி-கலாச்சாரம் (0)
  அரசியல் நூல்கள்  அரசியல் நூல்கள் (0)
  இலக்கிய நூல்கள்  இலக்கிய நூல்கள் (0)
  சமையல்-உணவு நூல்கள்  சமையல்-உணவு நூல்கள் (0)
  ஆன்மீகம்  ஆன்மீகம் (0)
  குழந்தை வளர்ப்பு நூல்கள்  குழந்தை வளர்ப்பு நூல்கள் (0)
  ஈழம்-நூல்கள்  ஈழம்-நூல்கள் (1)
  மதம்-ஆன்மிகம் நூல்கள்  மதம்-ஆன்மிகம் நூல்கள் (0)
  பொருளாதார நூல்கள்  பொருளாதார நூல்கள் (0)
  தொழில்நுட்ப நூல்கள்  தொழில்நுட்ப நூல்கள் (0)
  தொழில்(Business) நூல்கள்  தொழில்(Business) நூல்கள் (0)
  நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்  நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள் (0)
  தன்னம்பிக்கை-சுயமுன்னேற்ற நூல்கள்  தன்னம்பிக்கை-சுயமுன்னேற்ற நூல்கள் (1)
  தியானம்-யோகா நூல்கள்  தியானம்-யோகா நூல்கள் (0)
  வேலைவாய்ப்பு நூல்கள்  வேலைவாய்ப்பு நூல்கள் (0)
  கல்வி நூல்கள்  கல்வி நூல்கள் (3)
  உடல்நலம்-மருத்துவம் நூல்கள்  உடல்நலம்-மருத்துவம் நூல்கள் (2)
  கேள்வி-பதில் நூல்கள்  கேள்வி-பதில் நூல்கள் (0)
  விவசாயம் நூல்கள்  விவசாயம் நூல்கள் (0)
  வரலாற்று நூல்கள்  வரலாற்று நூல்கள் (2)

சற்று முன்

தண்ணீர் விட்டோ  வளர்த்தோம்! தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!
’இனிப்பு’ எழுதியவனின் வாழ்க்கையை மாற்றிய புத்தகம் ’இனிப்பு’ எழுதியவனின் வாழ்க்கையை மாற்றிய புத்தகம்
வெற்றிநிச்சயம்-சுகிசிவம் வெற்றிநிச்சயம்-சுகிசிவம்
கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு
ஈழம் – வந்தார்கள்  வென்றார்கள் -ஜோதிஜி ஈழம் – வந்தார்கள் வென்றார்கள் -ஜோதிஜி