LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

+2 தேர்வு முடிந்து மருத்துவம், பொறியியல் தரவரிசையில் இடம் பிடிக்க இயலாத மாணவர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்

+2 தேர்வு முடிந்து மருத்துவம், பொறியியல் தரவரிசையில் இடம் பிடிக்க இயலாத மாணவர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்:

-ச.பார்த்தசாரதி

+2 தேர்வு முடிவு வந்தவுடன் அடுத்து என்ன படிக்கலாம்? எவ்வளவு மதிப்பெண் வரும்? என்று ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு அவர்கள் முன் உள்ள பல்வேறு கல்வி வாய்ப்புகளை அளிப்பதே நம் நோக்கம்.


அதிக மதிப்பெண்கள் பெற்று cut-off அதிகம் வாங்கி மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற துறைகளை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ள மாணவர்களை தவிர்த்து மற்றவர்கள் என்ன செய்வது என்பது பலருக்கு குழப்பமாக இருக்கும். சில பெற்றோர்கள் சரியான வழிகாட்டுதல் இன்றி பொறியியல் கிடைக்கவில்லையே என்று கவலைகொள்கிறார்கள். உண்மையில் வேலைவாய்ப்போ அதன் மூலம் ஒரு வளமான வாழ்க்கையோ அமைவது +2க்கு பிறகு நீங்கள் எடுக்கும் பொறியியல், மருத்துவத்தை மட்டும் சார்ந்தது அல்ல. அதாவது, மிகப்பெரிய நிறுவனங்களில் உயர்ந்த நிலையில் பணியாற்றும் பலர், +2வில் குறைந்த மதிப்பெண் பெற்று, அல்லது பலமுறை +2 தேர்வெழுதி அதன்பின் தொழிற்க்கல்வி அல்லது ஒரு இளநிலை பட்டம் பெற்று, பிறகு தங்கள் கல்விப் பாதையை சரியாக வழியில் கொண்டு சென்று நல்ல நிலையில் இருப்பதை காண்கிறோம், அதேநேரம் பொறியியல் படித்து சரியான வேலையை பெற முடியாமல், கிடைத்த வேலையை செய்யும் பலரையும் காண்கிறோம். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் கவலையை விடுத்து கீழ்கண்ட அணுகுமுறைகளை உள்வாங்கி வளமான கல்விப்பாதையை அமைத்துக் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

1.  தொழிற்கல்வி:

+2 மதிப்பெண் மிகக் குறைவாக இருந்தாலோ, தோல்வி அடைந்தாலோ கவலை கொள்ளாமல் வருடத்தை வீண் செய்யாமல், +2வை எழுதிக்கொண்டே வேறு படிப்பில் சேர முயற்சி செய்யவும். அதாவது பொறியியல் ஆர்வம் உள்ள மாணவர்கள் பொறியியல் பட்டப்படிப்பில் சேர இயலாவிடில், 10-வதில் பெற்ற மதிப்பெண்ணைக் கொண்டு PolyTechnic கல்லூரிகளில் அனுமதி பெறலாம். இது ஓரு மூன்று வருட படிப்பாகும் இது முடிந்த பின் ஏதேனுமொரு பணிக்கும் சென்று Part time (பகுதி நேர)  B.E படிக்கலாம் பாலிடெக்னிக் படித்தவர்கள் உடனடியாக பணிக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும் சம்பந்தப்பட்ட துறையில் அவர்களுக்கு வாய்ப்புகள் இருக்கின்றன இவர்களின் சொந்தத் தொழிலும் நடத்த முடியும்.


 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. உதாரணாமாக சென்னையில் சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி, சென்னை டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, தரமணி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஓட்டேரி வேதியியல் தொழில் நுட்பநிறுவனம் போன்ற பல்வேறு அரசு மற்றும் தனியார் தொழிற்கல்வி வாய்ப்புகள் உள்ளன.  இதில் பொறியியல் பிரிவுகள் அனைத்தும் Polytechnic ல் உள்ளன.கட்டுமானம், எந்திரவியல், எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல், கணினி, Instrument, commercial, Practice, Computer Hardware, Telecommunication Technology, Automobile, Biomedical , Polymer Technology, Information Technology போன்ற அனைத்துப் பிரிவுகளும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ளன பொதுவாக

 

2. AMIE படிக்கலாமே:

AMIE என்ற கல்வியை வழங்கும் நிறுவனம் Institute of Engineers (India) என்ற நிறுவனம் I.E வழங்குகிறது 0.5 மில்லியனன் உறுப்பினர்களைக் கொண்ட 15 பொறியியல் துறைகள் உள்ளடக்கிய தேசிய அமைப்பாகும் இந்தியாவிலும் மற்றும் அயல்நாட்டிலும் 99 மையங்களில் இது செயல்படுகிறது. இந்த அமைப்பில் Fellow (FIE) Member (MIE) Associate Member ( AMIE), Charted Engineer (C.Eng) Professional Engineer (P.Eng), Senior Technical Member (St) Technical Member (TT)  என்ற உறுப்பினர்கள் உள்ளனர். AMIE (Associate Member of the Institute of Engineers of India) என்பது IE வழங்கும் பட்டப்படிப்பாகும் AMIE இந்தியப் பல்கலைக் கழகங்கள் வழங்கும் B.Tech பட்டத்திற்கு இணையானதாகும் இது முறையாக கல்லூரி சென்று படிக்கக் கூடியதாகவும் பணியின் உள்ளவர்கள் பகுதிநேரமாகப் படிப்பதாகவும் அமையும்.

 

முறையாக பொறியியல் படிக்க வாய்ப்பை தவற விட்டவர்கள் IE நடத்தும் தகுதித் தேர்வை முடித்தபின் section A Section B, Project Work மற்றும் Laboratory Experiment தேர்வு இவற்றில் தேர்ச்சியடைய வேண்டும். ஆண்டு முழுவதும் AMIE க்குப் பதிவு செய்யலாம் XII வில் இயற்பியல் வேதியியல் கணிதம் எடுத்து குறைந்த பட்சம் 45 விழுக்காடு பெற்றவராக இருக்க வேண்டும் 3 ஆண்டு டிப்ளமோ படித்து முடித்தவரும் விண்ணப்பிக்காலாம். AMIE படிக்க முதலில் IE- யில் உறுப்பினராக வேண்டும் www.amiestudy.com வலைத்தளம் சென்று விண்ணப்பத்தை Download செய்து வழியே AMIE/ MIE/ FIE தகுதி உள்ள ஓரு வரியம் கையெப்பம் பெற வேண்டும்.


AMIE Section A, Seciton B என்ற இரண்டு பிரிவுகள் கொண்டது Secion A எல்லோருக்கும் பொதுவானது. Seciton B யில் மாணவர்கள் எதாவது ஒரு பாடப்பிரிவைத் தேர்ந்தேடுத்துக் கொள்ள வேண்டும். Section A யில் டிப்பளமோ, Non Diploma என்ற இரண்டு பிரிவுகள் உண்டு Diploma வில் Engineering Maths, Material Science, Elements of Electrical Engineering & Electronics, Elements of computer Science, Society, Environment & Engineering.

மேலும் விபரங்களுக்கு Email: chapters@ieiindia.org, Web: www. ieiindia.org

 

  1. பட்டப்படிப்புகள்: 

பாலிடெக்னிக் படிக்க விருப்பம் இல்லாதவர்கள், மேற்கொண்டு நிறைய படிக்க வேண்டும் என்று ஆவல் இருந்தால் உங்களுக்கு பிடித்த இளநிலை பட்டப்படிப்பை  தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக, B.E. Computer Science எடுக்கும் ஒருவர் நான்கு ஆண்டுகள் படித்து வெளிவரும்போது அவர் இளநிலை படித்தவராகவே கருதப்படுவார். அதையே B.Sc, BCA, B.S படித்து தொடர்ந்து M.Sc, MCA, M.S. படித்தவர் ஓரிரு ஆண்டுகள் அதிகமானாலும் முதுநிலை படித்தவராக கடுதப்படுவார். கல்லூரி முடித்து முதல் வேலை கொடுப்பதற்கு சில நிறுவனங்கள் குறிப்பிட்ட படிப்புகளை கேட்பார்கள், அது தவிர்த்து உள்ளே சென்றவுடன்  சம்பளமோ, பதவி உயர்வோ எவ்விதத்திலும்  வேறுபடுவதில்லை.   உதாரணமாக B.Sc. Computer Science முடித்து ஒரு சிறிய நிறுவனத்தில் குறைந்த சம்பளமாக இருந்தாலும் அங்கே வேலை  செய்துகொண்டு MCA Distance Education-ல் படிக்கலாம்.  உதாரணமாக MCA போன்ற படிப்புகள் Regular படிப்பும், தொலைதூரக்கல்வியும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் நடத்தப்படுகிறது. வேலைவாய்ப்பிலும் உங்கள் பட்டம்தான் முக்கியமே தவிர, நீங்கள் முதுநிலையை தொலைதூரக் கல்வியில் படித்தவரா என்று யாரும் பார்ப்பதில்லை.  இது இளநிலை படிப்பிற்கு பொருந்தாது. மாணவர்கள் முடிந்தவரை இளநிலை (Under graduate) படிப்புகளை கல்லூரியில் சென்று படிப்பது அவசியம். காரணம், பகுதி நேர இளங்கலை படித்தவர்களுக்கு பெரும்பாலான நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கொடுப்பதில்லை.  ஆனால், ஒரு அடிப்படை இளநிலை பட்டத்தை முழுநேரத்தில் பெற்று பின்பு முதுநிலை படிப்பை தொலைதூரக் கல்வியில் பயின்றால் எவ்வித பாதிப்பும் இல்லை.

 

4. மற்ற வாய்ப்புகள்

இது மற்றுமின்றி உங்களுக்கு கீழ்காணும் பல்வேறு படிப்புகளும் உள்ளன. இதில் பெரும்பாலானவை முடித்தவுடன் வேலைவாய்ப்பு வழங்கும் படிப்புகளாகும்.  அவைகள்: 

  • D.T..Ed -  ஆசிரியர் பயிற்சி 
  • பாரா மெடிக்கல் துறைகள்:  

B.P.T. , BOT, B.Pharm/D.Pharm 

B.S. Optometry, DMLT

B.Sc. Nursing,  Diploma Nursing

Medical Lab Technician

B.Sc/ Diploma -Nutrition  Dietics

Speech Hearing Therapy

Dental Hygienist, Dental Mechanic

ECG, Medical Radiation, Radiology

Orthopist

Anathesian

Medical Transcription

 

 

விவசாயம் மற்றும் கால்நடை படிப்புகள்: 

Home Science

B.Sc. Agri 

Horticulture  

BFSC Fishing

B.Sc. Hotel Management, Catering

B.Sc. Dairy Technology, Dairy Farming, Poultry farming

 

மற்ற இளநிலை படிப்புகள்: 

B.A

Literature

B.Sc. Maths, Physics, Chemistry, Botany, Zoology, Statistics

B.Com, ICWAI, ACS, CA

Media

Journalism

Photography

Fashion & Designing

Fine Arts

Environment

Plastics

Footwear

Astronomy

Statistics

Library

Cell Phone

Sports

Insurance

 

எனவே NAASCOM- அறிக்கையின்படி 12-விழுக்காடு பொறியியல் மானவர்களுக்குத்தான் வேலை கிடைப்பதாக தெரியவருகிறது. மாணவர்கள் பொறியியல் கிடைக்கவில்லையே என்ற கவலையை விடுத்து, உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற, வேலைவாய்ப்பு வழங்கும் மற்ற ஒரு நல்ல படிப்பை தேர்ந்தெடுத்து, ஒரு கல்வி வழிகாட்டியை அணுகி தக்க ஆலோசனை பெற்று கல்வியிலும் வாழ்க்கையிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.  என்ன படிக்கிறோம் என்பதை விட, அந்தக் கல்வியைக் கொண்டு எப்படி உங்கள் அறிவை விருத்தியாக்கி, நிபுணத்துவம் பெறுகிறீர்கள் என்பதும், வேலைவாய்ப்பு உடனே கிடைக்கும் வகையில் எப்படி உங்களை தயார் செய்துகொள்கிறீர்கள் என்பதும் மிகவும் முக்கியம். 

by Swathi   on 17 Apr 2014  9 Comments
 தொடர்புடையவை-Related Articles
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு
பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி
இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது! இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது!
கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை! கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை!
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு!
கருத்துகள்
26-May-2018 17:51:54 Muthu said : Report Abuse
நான் டிப்ளமோ இன்சிவில் முடித்துஉள்ளேன் ஆனால் எனக்கு 2 அரியர்ஸ் உள்ளது நான் மேலும் படிக்க விரும்புகிறேன் நான் என்ன seivathu
 
22-May-2018 00:53:50 Pandi said : Report Abuse
நான் 12 வது commerce computer science group ல் pass ஆகிவிட்டேன் அடுத்து என்ன படிக்கலாம் total mark 567
 
03-Apr-2017 01:01:46 p.மோகன் babu said : Report Abuse
நான் 12 வது ஆர்ட்ஸ் கம்ப்யூட்டர் குரூப் எடுத்த பி.ஸ்.சி .கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க ஆசை மடியுமா பிளேஸ் ஹெல்ப் me
 
07-Jul-2016 02:56:09 அருண் said : Report Abuse
ஐயா நான் m.sc zoology முடித்து விட்டேன் அடுத்து என்ன பண்ணலாம்???? pH.d பண்ணலாமா????
 
07-Jul-2016 02:54:46 அருண் said : Report Abuse
ஐயா நான் m.sc zoology முடித்து விட்டேன் அடுத்து என்ன பண்ணலாம்????
 
12-Jun-2016 09:24:13 மணி said : Report Abuse
Super
 
23-Jan-2016 04:40:00 vijayakumar said : Report Abuse
நான் 10 முடித்திருக்கிறேன். என் வயது 17 நான் கப்பல் துறையில் சேர்ந்து பணியாற்றலாமா? ப்ளீஸ் ஹெல்ப் மீ சார் மி மெயில் id vijayvsatha@ஜிமெயில்.com
 
06-Aug-2015 06:21:39 S.Manikandan said : Report Abuse
நான் இளங்கலை கணிதம், மூன்றாம் ஆண்டு படிக்கிறேன், Above 75% மதிப்பெண் உள்ளது., அடுத்தது MCA,MBA படிக்கலாமா? ..எவ்வாறு படிக்க? எவ்வளவு செலவு ஆகும்? ?? Please help me.... give ur answer ...my.. mail.id.... mathsmani281@gmail.com
 
01-Nov-2014 00:11:20 சின்னசாமி r said : Report Abuse
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.