|
||||||||
ஈடுபாடு - பாகுபாடு |
||||||||
ஈடுபாடு என்ற சொல்லைப் பற்றி ஆராய்ந்தபோது ‘இடு’ என்ற வினையிலிருந்து பிறந்த ‘முதல்நிலை திரிந்த தொழிற்பெயர்’ ஈடு என்பது புரிந்தது. அதேபோல் ‘படு’ என்பதன் முதல்நிலை திரிந்த தொழிற்பெயர்தான் பாடு.
முதல்நிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் கட்டளைப்பொருள் தரும் வினைவேர்ச்சொல்லின் முன்னெழுத்து நெடிலாகி, அந்த வினைக்குரிய பெயராவதாகும்.
பெறு - பேறு,
ஈடுபாடு என்ற சொல்லின்வழியாகப் பாகுபாடு என்ற சொல்லை அடைந்து ஆராய்ந்தேன். பகு’ என்ற வினைவேர்ச்சொல்லின் முதல்நிலை திரிந்த தொழிற்பெயராகப் ‘பாகு’ ஆகியிருக்கிறது. இந்தப் ‘பாகு’ என்னும் சொல்லை நாம் முற்றாக மறந்துவிட்டு, பாகம் என்ற சொல்லைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். இப்படி வழக்கில் உள்ள எத்தனையோ சொற்களை அவற்றின் பொருளுணர்ந்து கொள்ளாமல் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
- கவிஞர் மகுடேசுவரன் |
||||||||
by Swathi on 17 Dec 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|