LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் !

இன்றைய இளைய தலைமுறையினரிடையே கலாச்சார சீரழிவால் மது அருந்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. மதுவை கண்டால் அலறி ஓடிய பெண்கள் கூட இன்று அதற்கு அடிமையாகிவிட்டானர். சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களே அதிகம் குடிக்கின்றனர். அத்தகையவர்களிடம் மது அருந்துவீர்களா என்று கேட்டால், அவர்கள் இல்லை, அது ஃபேஷன் நான் அவ்வளவாக அருந்தமாட்டேன் என்று சொல்வார்கள். ஆனால் என்ன தான் ஃபேஷனாக இருந்தாலும்.அவற்றை குடிப்பதால், உடலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையைச் சொன்னால், நம்பவேமாட்டீர்கள். அந்த அளவு நோயானது ஏற்படும். இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடியாது. ஆனால் வயதுக்கு ஏற்றவாறு குறைத்துக் கொண்டு வந்தால், விரைவில் குணப்படுத்திவிடலாம். ஒரு வேளை அவ்வாறு செய்யாவிட்டால், பின் ஆல்கஹால் அதன் விஸ்வரூபத்தை உங்கள் வாழ்க்கையில் காட்டி விடும்.

பொதுவாக  ஆல்கஹால் பருகுவதால் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை உடலில் ஏற்படும். அதுவும் குறைந்த வயதிலேயே அளவுக்கு அதிகமான அளவில் ஆல்கஹால் பருகினால், அவை இளம் வயதிலேயே உடலில் நோய்களை அதிகமாக்கிவிடும். உண்மையில் நிறைய நோய்கள் ஆல்கஹால் பருகுவதால், ஏற்படுகிறது. இப்போது அவ்வாறு ஆல்கஹால் பருகுபவர்களின் உடலில் சாதாரணமாக எந்த நோய்கள் வரும் என்பதை பட்டியலிட்டுள்ளோம்.

 

மதுபழக்கம் உள்ளவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படும். இந்த நோயால் கல்லீரலில் உள்ளசெல்களில் டாக்ஸின்கள் தங்கி, அந்த செல்களை அழிக்கும். இவை தொடர்ந்தால், இறுதியில் கல்லீரலின் செயல்பாடு முற்றிலும் குறைந்து, இறப்பு ஏற்படும். பொதுவாக மதுபானங்கள் பருகினால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவையே அளவுக்கு அதிகமானால், இரத்த அழுத்தமானது உடனே அதிகரித்து, பின் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

 

வோட்கா, பீர் மற்றும் ஜின் போன்றவற்றில் கொழுப்புகள் அதிகம் உள்ளன. பொதுவாக இவற்றை இந்த ஆல்கஹாலில் உணவுகளை விட, அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும். எனவே இதனை பருகினால், உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிடும். பின் உடல் பாதிப்பின் ஆரம்ப நிலையான தொப்பை வந்து, பின் பல்வேறு கொடிய நோய்களும் உடலில் வந்துவிடும்.இரத்த அழுத்தம் உடலில் அதிகரித்தால், இவை இதயத்திற்கு அழுத்தத்தை கொடுத்துவிடும். பின் மாரடைப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, ஆல்கஹால், இரத்தத்தை உறைய வைத்து, இதயத்திற்கு போதிய இரத்த ஓட்டத்தையும் தடுத்துவிடும்.

 

அனீமியா எனப்படும் இரத்தக்குறைவு, ஆல்கஹால் பருகுவதால், ஏற்படும். ஏனெனில் ஆல்கஹால் பருகும் போது, ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் கொள்ளவானது குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால் எந்த வேலை செய்யாமல் இருக்கும்போதும், அதிகமான சோர்வு ஏற்பட்டு, மூச்சுவிடுவதே கஷ்டமாக இருக்கும்.

 

மன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக ஆல்கஹால் பருகுவார்கள். ஆனால் உண்மையில் ஆல்கஹால் பருகினால், தான் விரைவில் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் ஏற்படும்.

 

மூட்டுகளில் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால், மூட்டு வலியானது ஏற்படுகிறது. அதிலும் ஆல்கஹால் அதிகமாக பருகினால், மூட்டுகளில் இன்னும் அதிகமான வலி ஏற்படும்.

 

ஆல்கஹால் குடித்தால், கணையத்தில் காயங்கள் ஏற்பட்டு, சாதாரணமாக நடைபெறும் செரிமானத்தையும் பாதிக்கும். இத்தகைய பிரச்சனை ஏற்பட்டால், அது குணமாவது மிகவும் கடினம். இதனால் இறப்பு கூட ஏற்படலாம்.

 

ஆல்கஹால் நரம்பு செல்களுக்கு விஷம் போன்றது. எனவே ஆல்கஹாலை அதிகம் பருகும் போது, அது உடலில் உள்ள நரம்புகளில் ஆங்காங்கு ஊசியை வைத்து குத்துவது போன்று இருக்கும் அல்லது உடலின் ஒரு பகுதி மட்டும் ஒரு மணிநேரத்திற்கு உணர்ச்சியில்லாமல் இருக்கும்.

by Swathi   on 05 Apr 2013  5 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
25-May-2020 17:58:27 Priya deepak said : Report Abuse
Sir yen husband monthly two time beer adikkararu athum fulla ah kudikka mattaru konjothan kudipparu so ithanala effects rba ah irukkathula idhukku any medicine irukka ah sir
 
17-Nov-2019 13:54:31 Kapipulla azarudeen said : Report Abuse
Nan 24 vayathu odaya oru male nan varudathirgu oru murai allathu muntru murai kudipen anal fullah kudipen ennakku kal arikkuthu sir
 
15-Apr-2019 06:45:21 Gowrappan said : Report Abuse
Good news *No drinks *No smoking *No shosait *No rowdisam * no killer *Save india
 
09-Jan-2016 01:15:40 krishna said : Report Abuse
எதுக்கு இந்த...நியூஸ் அப்ப்லொஅட் பண்றீங்க
 
27-Nov-2015 13:20:11 Jai said : Report Abuse
ஈஉங்கலது சைட் மிகவும் அருமை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.