LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- ச.ரவிச்சந்திரன்

எழுதுகோல்களே! !

கடற்கரையின் படகுகளின் பின்னால்
கன்னியரும் காளையரும்
உடற்திணவை தணித்து கொள்வதா காதல் ?
ஆளில்லா திரையரங்குகளில்
ஆண்மையிடம்
தன்னை இழப்பதா காதல் ?
சோலையின் புதர்மறைவில்
சோரம் போவதா காதல் ?
பார்வையால் காமத்தை
உமிழ்வதா காதல் ?
விடுதி அறைகளில் தன்னை
விற்றுக்கொள்வதா காதல் ?
எது காதல் எது காமம் என்று
எதுவுமே தெரியாமல்
எதை எதையோ காதல் என்று
கதைப்பதும் காட்சிப்படுத்துவதும்
நடப்பதால் தானோ என்னவோ
பெண்மை தன்நலன் குன்றி
மண் மீது கிடக்கிறது
விண் முட்ட நின்ற பெண்மை
வீரம் விளைத்த பெண்மை
கண்ணினும் மேலான பெண்மை
கண்ணியம் காத்து நின்ற பெருமை
காசுக்காக காமத்தை விற்கும்
கயவர்களால்
கீழ்மை பட்டு கிடக்கிறது
ஊடகங்கள் என்ற பாலில்
நஞ்சை கலந்து
வரையறை இன்றி வாரி தருவதால்
தலை நிமிர்த்து நின்ற
மகத்தான பெண்மை
நிலைகுலைந்து கிடக்கிறது
நிமிருமா பெண்ணின் பெருமை
நீணிலத்தில் திரும்புமா நம்மவர் மேன்மை?
எழுதுகோல்களே! நேர்மையாய் எழுதுங்கள் !
எதுவும்நடக்கும் !எல்லாமும் திரும்பும்

கவிஞர் ச .ரவிச்சந்திரன்  

by Swathi   on 16 Nov 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சந்தன மரம் திருட்டு சந்தன மரம் திருட்டு
தொடர் தோல்விகள் தொடர் தோல்விகள்
மிச்சத்தை மீட்போம் ! மிச்சத்தை மீட்போம் !
வெல்லும் சொல் வெல்லும் சொல்
வாழ்க்கையெனும் போர்க்களம் வாழ்க்கையெனும் போர்க்களம்
தற்சாற்புப் பொருளாதாரம்.. தற்சாற்புப் பொருளாதாரம்..
கண்ணீர்  அஞ்சலி கண்ணீர் அஞ்சலி
உனை காணும் நொடியில் உனை காணும் நொடியில்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.