LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- சுஜாதா

என் பேர் ஆண்டாள்

 

கதை ஆசிரியர்: சுஜாதா.
செப்டம்பர் 29 எனக்கு ஹாப்பி பர்த்டே. நான் 2000-பார்ன். இன்னும் எனக்கு நாலு வயசு ஆகலை. சிக்கரமே எனக்கு பேச்சு வந்துடுத்து. சாக்லேட் ரொம்ப பிடிக்கும். அம்மாவுக்கு பிடிக்காது. எங்கயாவது எனக்கு தெரியாம ஒளிச்சு வெச்சிடுவா. அப்பறம் POGO பார்ப்பேன். என் பேர் ஆண்டாள். என்னை கேட்காமலே அப்பா எனக்கு இந்தப் பேர் வெச்சுட்டா.
நான் பொறந்த உடனே என்ன பார்க்க நெறைய பேர் வந்தா. எல்லாரும் என்னை “புஜ்ஜி”, “அம்முகுட்டி”ன்னு கொஞ்சிட்டு, என் அப்பாட்ட “கொழந்தக்கு என்ன நட்சத்திரம்”ன்னு கேப்பா. எதுக்குனு தெரியலை. அப்பறம் என்ன பேர்ன்னும் கேப்பா.
இப்டிதான் அப்பாகிட்ட எங்காத்து மாமா, “மாப்பிளே குழந்தைக்கு என்ன பேர் வைக்க போகிறேள்”ன்னு கேட்டா
“ஆண்டாள்”
“ஆண்டாளா? நல்ல பேர்! ஸ்கூல் பேர் என்ன?”
“ஆண்டாள் தேசிகன்”
“ஜோக் அடிக்காதிங்க மாப்பிளே, நல்ல ஃபேஷனா ஒரு பேர் வையுங்க பிற்காலத்துக்கு உதவும்”
“நிஜமாகவே ஆண்டாள் தான் அவ பேர்.”
“அப்புறம் உங்க இஷ்டம்” ன்னு சொல்லிட்டுப் போய்ட்டா.
அப்பறம் என் அம்மாவோட ஃபிரண்டு ஒரு நாள் என்னப் பாக்க எங்காத்துக்கு வந்தா. அமெரிக்காவ்லேருந்து எனக்கு டெட்டி பொம்மை வாங்கிண்டு வந்திருந்தா. வைட் கலர். அழகா என்னைப் பார்த்து சிரிச்சுது. அம்மா அவாளுக்கு காப்பி கொண்டுவர கிச்சனுக்குப் போனா. நான் மட்டும் ஹால்ல இருந்தேன்.
“What is your name?”
“ஆண்டாள்”
“What?.. உன் பேர் என்ன?”
“ஆண்டாள்”
அதுக்குள்ள என் அம்மா வர..,
“Hey I could’nt understand what she is saying.. what’s her name?”
“ஆண்டாள்”ன்னு அம்மா சொல்ல
“What? you should be crazy. Hey come on ya, ஸ்ரீரங்கத்தில கூட இப்பெல்லாம் இந்தப் பேர் வெக்கர்தில்லல”ன்னு அவங்க பங்குக்கு சொல்லிட்டுப் போயிட்டாங்க.
அம்மாக்கு ஒரே வருத்தம். அப்பாகிட்ட சொல்லி என் பெயரை “சம்யுக்தா”ன்னு மாத்தலாமான்னு கேட்டா. அப்பா அதுக்கு ஒத்துக்கவே இல்லை. எங்கிட்ட யாருமே கேக்கவே இல்ல.
அப்பறம் ஒரு நாள் எனக்கு ஒரே ஜுரம். அப்பா, அம்மா என்னை டாக்டர் கிட்ட அழைச்சிண்டு போனா. அங்கே ரெஜிஸ்டரேஷன் பண்ணும்போது ஒரு நர்ஸ், “குழந்தையோட பேர் என்ன?”ன்னு கேட்டா.
அப்பா, “ஆண்டாள்”ன்னு சென்னா.
“என்ன?”
“ஆண்டாள்”
“Child’s Name”
“Andal”
“சார் குழந்தையின் பேர்”
“மேடம், குழந்தையின் பேர்தான் ஆண்டாள்”ன்னு அப்பா கொஞ்சம் கோபமா சொன்னா.
டாக்டர் மாமி எனக்கு ஊசி போடலை. ஒரு சிரப் கொடுத்தா. ஒரே கசப்பு. டாக்டர் மாமி, “பாப்பா, உன் பேர் என்ன சொல்லு”ன்னு கேட்டா.
“ஆண்டாள்”
“அட, என் பேரும் ஆண்டாள் தான்”
எங்க எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். இப்போ தான் எங்களுக்கு ஏன் அந்த நர்ஸ் போன பாராவில திரும்பத் திரும்ப என் பேரை ஏன் கேட்டான்னு புரிஞ்சுது.
இப்படி எங்காத்துக்கு வந்த ஐயங்கார்ஸ் எல்லோரும் ஆச்சரியப்பட்டா ‘அவங்களுக்கு 9-ஆம் நூற்றாண்டுல வாழ்ந்த ஆண்டாள் பத்தி ரொம்பத் தெரியாததே காரணம்’னு அப்பா அடிக்கடி வருத்தப்படுவா. எங்கள் ரிலேட்டிவ்ஸ் முக்கால்வாசி பேருக்கு ஏனோ இந்தப் பேர் பிடிக்கலை. எல்லாரும் ஸ்கூல் சேர்க்கும் போது பேரை மாத்துங்கோன்னு அம்மாவுக்கு அட்வைஸ் தரா. இன்னுமும் எங்காத்துக்கு வரவா என் பேர் கேட்டு ஆச்சிரியப்படறா.
என் பேர் கேட்டு சந்தோஷப்பட்டு எங்கப்பாவை தட்டிக்கொடுத்தது நானி தாத்தா மட்டும் தான். எனக்கு இப்போ 6 திருப்பாவை தெரியும். அப்பா சொல்லிக் கொடுத்தா. அப்புறம் சொல்ல மறந்துட்டேனே.. அடுத்தவாரம் நான் ஸ்கூல் போகப்போறேன். LKG.
ஸ்கூல்ல என் பேர் ஆண்டாள் தான்!

          எனக்கு ஹாப்பி பர்த்டே. நான் 2000-பார்ன். இன்னும் எனக்கு நாலு வயசு ஆகலை. சிக்கரமே எனக்கு பேச்சு வந்துடுத்து. சாக்லேட் ரொம்ப பிடிக்கும். அம்மாவுக்கு பிடிக்காது. எங்கயாவது எனக்கு தெரியாம ஒளிச்சு வெச்சிடுவா. அப்பறம் POGO பார்ப்பேன். என் பேர் ஆண்டாள். என்னை கேட்காமலே அப்பா எனக்கு இந்தப் பேர் வெச்சுட்டா.நான் பொறந்த உடனே என்ன பார்க்க நெறைய பேர் வந்தா. எல்லாரும் என்னை “புஜ்ஜி”, “அம்முகுட்டி”ன்னு கொஞ்சிட்டு, என் அப்பாட்ட “கொழந்தக்கு என்ன நட்சத்திரம்”ன்னு கேப்பா. எதுக்குனு தெரியலை.

 

         அப்பறம் என்ன பேர்ன்னும் கேப்பா.இப்டிதான் அப்பாகிட்ட எங்காத்து மாமா, “மாப்பிளே குழந்தைக்கு என்ன பேர் வைக்க போகிறேள்”ன்னு கேட்டா“ஆண்டாள்”“ஆண்டாளா? நல்ல பேர்! ஸ்கூல் பேர் என்ன?”“ஆண்டாள் தேசிகன்”“ஜோக் அடிக்காதிங்க மாப்பிளே, நல்ல ஃபேஷனா ஒரு பேர் வையுங்க பிற்காலத்துக்கு உதவும்”“நிஜமாகவே ஆண்டாள் தான் அவ பேர்.”“அப்புறம் உங்க இஷ்டம்” ன்னு சொல்லிட்டுப் போய்ட்டா.அப்பறம் என் அம்மாவோட ஃபிரண்டு ஒரு நாள் என்னப் பாக்க எங்காத்துக்கு வந்தா. அமெரிக்காவ்லேருந்து எனக்கு டெட்டி பொம்மை வாங்கிண்டு வந்திருந்தா. வைட் கலர். அழகா என்னைப் பார்த்து சிரிச்சுது. அம்மா அவாளுக்கு காப்பி கொண்டுவர கிச்சனுக்குப் போனா.

 

          நான் மட்டும் ஹால்ல இருந்தேன்.“What is your name?”“ஆண்டாள்”“What?.. உன் பேர் என்ன?”“ஆண்டாள்”அதுக்குள்ள என் அம்மா வர..,“Hey I could’nt understand what she is saying.. what’s her name?”“ஆண்டாள்”ன்னு அம்மா சொல்ல“What? you should be crazy. Hey come on ya, ஸ்ரீரங்கத்தில கூட இப்பெல்லாம் இந்தப் பேர் வெக்கர்தில்லல”ன்னு அவங்க பங்குக்கு சொல்லிட்டுப் போயிட்டாங்க.அம்மாக்கு ஒரே வருத்தம். அப்பாகிட்ட சொல்லி என் பெயரை “சம்யுக்தா”ன்னு மாத்தலாமான்னு கேட்டா. அப்பா அதுக்கு ஒத்துக்கவே இல்லை. எங்கிட்ட யாருமே கேக்கவே இல்ல.அப்பறம் ஒரு நாள் எனக்கு ஒரே ஜுரம். அப்பா, அம்மா என்னை டாக்டர் கிட்ட அழைச்சிண்டு போனா. அங்கே ரெஜிஸ்டரேஷன் பண்ணும்போது ஒரு நர்ஸ், “குழந்தையோட பேர் என்ன?”ன்னு கேட்டா.அப்பா, “ஆண்டாள்”ன்னு சென்னா.

 

          “என்ன?”“ஆண்டாள்”“Child’s Name”“Andal”“சார் குழந்தையின் பேர்”“மேடம், குழந்தையின் பேர்தான் ஆண்டாள்”ன்னு அப்பா கொஞ்சம் கோபமா சொன்னா.டாக்டர் மாமி எனக்கு ஊசி போடலை. ஒரு சிரப் கொடுத்தா. ஒரே கசப்பு. டாக்டர் மாமி, “பாப்பா, உன் பேர் என்ன சொல்லு”ன்னு கேட்டா.“ஆண்டாள்”“அட, என் பேரும் ஆண்டாள் தான்”எங்க எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். இப்போ தான் எங்களுக்கு ஏன் அந்த நர்ஸ் போன பாராவில திரும்பத் திரும்ப என் பேரை ஏன் கேட்டான்னு புரிஞ்சுது.இப்படி எங்காத்துக்கு வந்த ஐயங்கார்ஸ் எல்லோரும் ஆச்சரியப்பட்டா ‘அவங்களுக்கு 9-ஆம் நூற்றாண்டுல வாழ்ந்த ஆண்டாள் பத்தி ரொம்பத் தெரியாததே காரணம்’னு அப்பா அடிக்கடி வருத்தப்படுவா.

 

         எங்கள் ரிலேட்டிவ்ஸ் முக்கால்வாசி பேருக்கு ஏனோ இந்தப் பேர் பிடிக்கலை. எல்லாரும் ஸ்கூல் சேர்க்கும் போது பேரை மாத்துங்கோன்னு அம்மாவுக்கு அட்வைஸ் தரா. இன்னுமும் எங்காத்துக்கு வரவா என் பேர் கேட்டு ஆச்சிரியப்படறா.என் பேர் கேட்டு சந்தோஷப்பட்டு எங்கப்பாவை தட்டிக்கொடுத்தது நானி தாத்தா மட்டும் தான். எனக்கு இப்போ 6 திருப்பாவை தெரியும். அப்பா சொல்லிக் கொடுத்தா. அப்புறம் சொல்ல மறந்துட்டேனே.. அடுத்தவாரம் நான் ஸ்கூல் போகப்போறேன். LKG.ஸ்கூல்ல என் பேர் ஆண்டாள் தான்!

by parthi   on 13 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.