LOGO
  முதல் பக்கம்    சினிமா    திரைவிமர்சனம் Print Friendly and PDF

என்றும் புன்னகை - திரைவிமர்சனம் !!

நடிகர்கள் : ஜீவா, வினய்


நடிகை : திரிஷா 


இயக்கம் : முயீனுதின் அஹமத்

 

இசை : ஹாரிஸ் ஜெயராஜ் 

 

ஜீவா, வினய், சந்தானம் ஆகிய மூவரும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். ஜீவாவின் அப்பாவாக வருகிறார் நாசர். ஜீவாவின் அம்மாவோ, வேறொருவருடன் ஓடிப்போக, அதனால் பெண்களையே வெறுக்கிறார் ஜீவா.

 

ஒரு சிறிய பிரச்சனையால் அப்பா நாசருடன் பேசாமல் இருக்கிறார் ஜீவா. பாலிய சிநேகிதர்கள் மூவரும் விளம்பர நிறுவனத்தை இணைந்து நடத்தி வருகிறார்கள். கல்யாணமே செய்ய மாட்டோம் என கல்யாணி பீர் மீது மூவரும் சத்தியம் செய்கிறார்கள்.

 

ஓரு விளம்பர படபிடிப்பிற்காக த்ரிஷா இவர்களுடன் இணைகிறார். மெல்ல மெல்ல நட்பாகிறார். ஒரு நாள் ஜீவாவிடம் சொல்லிக் கொள்ளாமல் காணாமல் போகிறார்கள் வினய்யும் சந்தானமும். திரும்பி வந்து ஜீவாவிடம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறுகிறார்கள். கோவப்பட்டு அவர்களுடனும் நட்பை முறிக்கும் ஜீவா. த்ரிஷாவுடன் நெருக்கமாகிறார். படிப்படியாக காதல் ஜீவாவுக்குள் முளைக்கிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் பிரிவு ஏற்படுகிறது. 

 

எல்லா பிரச்சனைக்கும் காரணம் தன்னுடைய ஈகோ தான் காரணம் என்பதை அறியும் ஜீவா, அதனை கைவிட்டு அப்பா நாசருடனும், நண்பர்களுடனும், காதலியுடனும் இணைகிறாரா, இல்லையா என்பதே படத்தின் கதை.

 

படத்தின் முதல் பாதியை சந்தனத்தின் காமெடியை வைத்தே ஓட்டி விடுகிறார்கள். எங்கடா படம் கமெடியிலே ஓடிவிடுமோ என்று நினைக்கும் போது நண்பர்களுக்குள் பிரிவும், இடைவேளையும் வந்து விடுகிறது. அதன் பிறகு த்ரிஷாவுடன், ஜீவா இணையும் காட்சிகள் சூப்பர். வெல்டன் இயக்குனரே.

 

ஜீவா இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். எப்போதும் கடுகடு முகத்துடன் இருக்கும் போது கதாபாத்திரத்தை பிரதிபலிக்கிறார். கடைசியில் காதலை சொல்லும் போதும் அதே சிடுசிடு எக்ஸ்பிரசன் செம...... கலக்குறிங்க ஜீவா ....

 

உன்னாலே உன்னாலே, ஜெயம்கொண்டான் படங்களில் பட்டையை கிளப்பிய வினய்யா அது அடப்பாவமே. இந்த படத்தில் அவரது பாத்திரப்படைப்பு நன்றாக இருந்தாலும் வினய்யின் உடல்மொழியும் நடிப்பும் கடுப்பேத்துகிறது. சந்தானமும், இவரும் சேர்ந்து செய்யும் காமெடிகள் பரவல......

 

த்ரிஷா கூட நன்றாக நடித்து இருக்கிறார். வயது முதிர்ச்சி முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. கிரீடம் படத்தில் இதே ஹேர்ஸ்டைலில் பார்க்க அழகாக இருப்பார். ஆனால் இந்த படத்தில் ஹேர்ஸ்டைல் மட்டும் அழகாக இருக்கிறது.

 

மாடல் அழகியாக வரும் ஆண்ட்ரியாவுக்கு சிரித்துப் பேசி கழுத்தறுக்கும் கேரக்டர். நிறைவாக செய்திருக்கிறார். சரியாக லாக்செய்து ஜீவாவை மன்னிப்பு கேட்கச் சொல்கிறார். ஆனால் அதற்கு ஜீவாவின் ரியாக்சன் செம.......

 

ஹரிஸ் ஜெயராஜ் இசையில் இரண்டு பாடல்கள் பரவாயில்லை..... 

 

மொத்தத்தில் என்றும் புன்னகை..... காமெடி + காதல் காட்சிகள்..

by Swathi   on 20 Dec 2013  0 Comments
Tags: என்றும் புன்னகை   Endrendrum Punnagai   Endrendrum Punnagai Movie   Endrendrum Punnagai Review   Endrendrum Punnagai Movie Review   Endrendrum Punnagai Vimarsanam   Endrendrum Punnagai Thirai Vimarsanam  
 தொடர்புடையவை-Related Articles
என்றும் புன்னகை - திரைவிமர்சனம் !! என்றும் புன்னகை - திரைவிமர்சனம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.