LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

எதிரிகள் ...

எப்போதாவது

திறக்கிற

எதிர் வீட்டு

ஜன்னல்கள் ...


மொட்டைமாடியில்

கொடியோடு

அசைந்தாடி

முகவரி சொல்கிற

சுடிதார்கள் ..


எங்கேயோ

எப்போதோ

எங்களைப் பார்த்து

புன்னகைத்துவிட்டுப் போன

முகவரியில்லா

அழகு முகங்கள் ...


எங்களுக்குப்

பிடித்தவர்களோடு

ஏதேச்சையாய்

அமைந்துவிடுகிற

சந்திப்புகள் ..


அவர்கள்

முனுமுனுத்த

பாடல் வரிகள் ..


அந்த

முக பாவனைகள் ...


அபூர்வமாய்

ஒரு சில பெண்கள்

வளர்க்கிற கூந்தல்கள் ..


கூந்தலேறி

ஊர்வலம் போகிற

மோட்சமடைந்த

ரோஜாக்கள் ..


அவர்கள் நகர்ந்தாலும்

அந்த இடம்விட்டு

நகராத

அவர்களுக்கே உரிய

வாசனைகள் ...


காற்றடிக்கும் போது

சேலையோடு

சேர்ந்தாடுகிற

வண்ணவண்ணப்

பூக்கள்...


பருவம் கடந்தும்

யாரும் பார்க்காதபோது

பட்டாம்பூச்சி பிடிக்கும்

இருகால் மலர்கள் ...


இந்த வயதில்

எங்களின்

தூக்கம் கெடுக்கும்

எதிரிகள்

இவைகளைத் தவிர

வேறேதுமில்லை ...


-      குகன்

by Guhan   on 06 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவின் ஒளியில்… நிலவின் ஒளியில்…
விடை தெரியாமல்.. விடை தெரியாமல்..
வானமும் வசப்படுமே! -சி.தமிழரசி , சென்னை வானமும் வசப்படுமே! -சி.தமிழரசி , சென்னை
புத்தரின் புன்னகை புத்தரின் புன்னகை
தேநீர் நேரம் தேநீர் நேரம்
ஏனெனில் என் பெயர் தமிழ். -ஆர்.பாலகிருஷ்ணன் ஏனெனில் என் பெயர் தமிழ். -ஆர்.பாலகிருஷ்ணன்
வர்ணஜாலம் வர்ணஜாலம்
நிழலாடும்  நினைவு - பாவலர் கருமலைத்தமிழாழன் நிழலாடும் நினைவு - பாவலர் கருமலைத்தமிழாழன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.