LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள்

அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள் – அறிமுகம்

 இரா.இராஜராஜன், கல்வியாளர் 

Author - Entrance to Entrance 

Founder & Director, Students Vision Academy
(www.StudentsVisionAcademy.com)

Advisor, www.StudyGuideIndia.com

பனிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் அல்லது படித்து முடிந்த மாணவர்கள் உள்ள அனைத்து இல்லங்களிலும் பேசபடுகின்ற தலைப்பு இதுவாக தான் இருக்கும். ஆண்டு இறுதி தேர்வு ஒவொன்றாக முடிந்து விட்டன.

இனி என்ன? அடுத்து என்ன படிக்க வேண்டும்? எங்கே படிக்க வேண்டும்? இடம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? என்னென்ன தேர்வு எழுத வேண்டும்? தனக்கு பிடித்த படிப்பு கிட்டுமா? இவை மாணவர்களின் சிந்தனைகள். இந்த படிப்பில் சேர என்னவெல்லாம் செய்யவேண்டும்? செலவிற்கு வங்கி கடன் கிடைக்குமா? படித்த பின் மாணவர்களுக்கு வேலை கிடைக்குமா? இவை பெற்றோர்களின் கவலைகள். பொறியியல், மருத்துவம் என்று இரண்டு தொழில் படிப்புகளை மட்டும் நாடி ஓடிய நிலை மெல்ல மெல்ல மாறி இன்ன பிற துறைகளிலும் எதிர்காலம் உள்ளது என்று மாணவர்கள் சிந்திக்கின்ற காலம் உருவாகி வருகிறது. இந்நாளில் மாணவர்கள், பெற்றோர்கள் இவர்களின் தேடல் மிக மிகுதி.

பொதுவாக அகில இந்திய கல்லூரிகளில் உள்ள பதினைந்து விழுக்காடு இடங்களைப்பெற தமிழ்நாடு போன்ற மாநிலங்களிருந்து மிக குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் முயன்று வெற்றியடைகிறார்கள். இவற்றை பெரும்பாலான மாணவர்களும், பெற்றோர்களும் சிந்திக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.

அண்மையில் இந்த நிலை மாறி அனைவரும் பல்வேறு வாய்ப்புகளையும், நுழைவுத்தேர்வுகளையும் பற்றி சிந்தனை செய்ய  வேண்டிய  தேவை ஏற்பட்டுள்ளது. இதன் காரணம் அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வுகள் கட்டாயம் என்ற நிலையை நோக்கி தற்போதைய கல்வி சூழல் நகர்ந்து கொண்டுள்ளது. இதில் பல சாதக பாதகங்கள் இருப்பினும், எதையும் எதிர் கொள்ளும் மன உறுதியையும் ,முயற்சியையும் நம் மாணவர்களுக்கு தர வேண்டிய நிலை அரசுக்கும், கல்வியாளர்களுக்கும், கல்வி ஆர்வளர்களுக்கும் ஏற்ப்பட்டுள்ளது.

அகில இந்திய நுழைவுதேர்வு தேவையான துறைகள் பொறியியல்,மருத்துவம் மட்டும்மல்ல இவற்றை தாண்டி எத்தனையோ துறைகள் உள்ளன. கட்டிட கலை, நவநாகரிக ஆடை ,ஆபரண, தோல் வடிவமைப்புக்கலை, உணவு மற்றும் உணவாக  மேலாண்மை, விவசாயம், கடல்சார் படிப்புகள், சட்டம் என்ற எத்தனையோ துறைகளுக்கு அகில இந்திய நுழைவுதேர்வுகள் உள்ளன.

இந்த நுழைவு தேர்வுகளில் நுழைய ஏன் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் மாணவர்கள் அச்சப்படுகிறார்கள்? தயங்குகிறார்கள்?

இதுவரை தமிழகத்தில் பெரும்பான படிப்புகளுக்கு மாணவர்கள் கல்லூரிகளுக்கு அவர்கள் குறிப்பிட்ட பாடங்களில் பன்னிரெண்டாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களின் கட் ஆப் (cut off) அடிப்படையில் தேர்வு செய்யபட்டார்கள் இந்த முறையில் பல நன்மைகள் இருந்தாலும் , ஒரு பெரும் தயக்கம்  கல்வியில் ஏற்பட்டது .இதற்கு காரணம் வேறு எதுவும் இல்லை – வணிக நோக்கில் உருவாக்கிவிட்ட தனியார் கல்வி நிறுவனங்களும்,  வணிகத்தில் வெற்றிபெற அவர்கள் ஒவ்வொரு நாளும் செய்துவரும் போட்டி மனப்பான்மையும், கல்வியின் நோக்கத்திற்கு நேர்மாறாக மதிப்பெண் பெற கையாண்ட உத்திகளும்தான். 

இந்த மதிப்பெண் எடுத்தால் இந்த இடம் என்ற நல்ல வசதியை பயன்படுத்தி அந்த மதிப்பெண்களை பெற மட்டுமே பெற மாணவர்களை எந்திர கதியாக தயார் செய்தன இக்கல்விக்கூடங்கள். இந்த அணுகுமுறைக்கு பெற்றோர்களும் அறிந்தோ அறியாமலோ துணை சென்றனர். இதைக்குறித்து எதுவும் செய்யும் அதிகாரமோ, சக்தியோ அரசைத் தவிர எவரிடமும் இல்லை. சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும், எழுதியும் வந்தாலும் இதனால் பெரும் பயன் ஏற்படவில்லை.  இதனால் மாணவர்கள் மனப்பாடம் செய்து மதிப்பெண் பெரும் உத்தியை கற்றுக்கொண்டார்களே தவிர, பாடம் சார்ந்த ஆழமான அறிவோ, அவர்களுக்குத் தெரிந்த கேள்விகளை மாற்றி அதே பதிலுக்கு வேறு விதமாக கேள்வியை கேட்டாலும் அதை எதிர்கொள்ளும் நிலையில் மாணவர்கள் உருவாக்க்கப்படவில்லை என்பதே அடிப்படை உண்மை.

சிந்தனை சக்தியுடன் கூடிய ஆக்கப்பூர்வ கல்வி முற்றிலும் அழிந்தது. பல வருடங்களாக வெறும் வினா-விடைகளை மட்டும் படித்து தேறி வந்த இதையே பெரும் சாதனை என்று நினைத்து பழகிய நம் மாணவர்கள் எதிர்கால சிந்தனை கானல் நீரானது.

நுழைவுதேர்வுகள் என்றால் என்ன? ஒரு மாணவன் பாடங்களை முழுமையாக படித்து, பாடம் சார்ந்த தெளிவான அறிவை பெற்றுள்ளானா என்ற சோதித்தாலே  நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுவதன் நோக்கம். மாணவர்கள்  மனப்பாடம் செய்துள்ளதை சோதிப்பது அல்ல. இதையும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்த புற்றீசல் போன்று தோன்றி வரும் அதே தனியார் நிறுவனங்கள் நுழைவுத்தேர்விற்கு தனியார் பயிற்சி தர முயற்சிக்கின்றன. இது எப்படி சாத்தியமாகும்? பாடங்களை ஆழமாக ,அறிவுசார்ந்து மாணவர்கள் கற்றிருக்கிறார்களா? என்ற அறிய நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ள பாடங்களையல்லவா ஆழமாக போதிக்க வேண்டும்.

எது எப்படியிருப்பினும், நுழைவுத்தேர்வுகள் என்றால் என்ன? என்னென்ன நுழைவுத்தேர்வுகள் எந்தெந்த படிப்புகளுக்கு நடத்தப்படுகின்றன? அவைகளுக்கு எப்பொழுது எப்படிவிண்ணப்பிக்க வேண்டும்? எவ்வாறு தயாராக வேண்டும்?  

இப்படி அத்தனை சிக்களுக்கும், ஐயங்களுக்கும், தேர்வுகான மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக நுழைவுத்தேர்வை குறித்து அச்சப்படும் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் ஐயங்களை தீர்த்து அவர்களை தயார்படுத்தவேண்டும். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்திலிருந்து வரும் மாணாக்கர்கள் நுழைவுத்தேர்வுகளுக்கு புற்றீசல்போல் கடைபரப்பிவரும் தனியார் வணிக நிறுவனங்களில் சேராமல் தங்களை தயார்ப்படுத்திக்கொண்டு வெற்றிபெறும் வாய்ப்புகளைக் குறித்து ஆராய்வதும் இந்தத் தொடரின் முக்கிய நோக்கம்.  இதுதான்  இன்றைய தேவையுமாகும்.

 -தொடரும் ...

by Swathi   on 18 Apr 2018  3 Comments
 தொடர்புடையவை-Related Articles
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு
பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி
இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது! இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது!
கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை! கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை!
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு!
கருத்துகள்
26-Feb-2021 07:16:15 naveen said : Report Abuse
Thanks for sharing this post.It is very informative and helpful. I like this blog very much, https://www.slainstitute.com/selenium-training-in-chennai https://www.slainstitute.com/ccna-training-in-chennai/
 
30-Apr-2018 13:08:05 சுரேஸ் பாபு said : Report Abuse
அருமையாக ஆரம்பித்துள்ளீர்கள் , வாழ்த்துக்கள்
 
20-Apr-2018 01:05:19 இளங்கோவன் said : Report Abuse
பயனுள்ள கட்டுரை
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.