புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2016 - கலிபோர்னியா , அமெரிக்கா

  • Venue
    • சாண்டா க்ளாரா மாநாட்டு மையம்
    • San Francisco Bay Area
    • California
    • USA
  • Organizer

    உலகத் தமிழ்க் கல்விக் கழகம்

    • http://www.tamilconference.org/
Events Schedule
DATE TIMINGS
27 May 2016
28 May 2016
29 May 2016
30 May 2016

உலகத் தமிழ்க் கல்விக் கழகம் 1998 ல் உருவாக்கப் பட்டு இன்று அமெரிக்காவின் பல மாநிலங்களிலும், பல நாடுகளிலும் பல கிளைகளுடன் இயங்கி வருகிறது. புலம் பெயர்ந்த  தமிழ் அறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் ஒன்று கூடி தங்கள் தமிழ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கோடு 2012 ல் "புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012" நடத்தப்பட்டது.  

இதன் தொடர்ச்சியாக எங்கள் உலகத் தமிழ்க் கல்விக் கழகம் வரும் ஆண்டு மே மாதம் 27 முதல் 30 வரை "புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு "ஒன்றை  கலிபோர்னியாவில் நடத்த உள்ளது.

உலகமெங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், தங்கள் இளைய தலைமுறையினரிடையே தமிழைத் தழைக்க வழிகாட்டுவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.  இந்த மாநாட்டைச் சிறப்பிக்க உலகின் பல பாகங்களில் இருந்தும்,  தமிழ்க்கல்வியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துக் கொள்ள உள்ளனர். தமிழ்க் கல்வி தொடர்பான கட்டுரைகள், கலந்துரையாடல்கள், பயிலரங்குகள் , மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் என பலச் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை, http://www.tamilconference.org/ என்ற இணையதளம்  மூலம் அறிந்துக் கொள்ளலாம்

ஐயாயிரத்திற்கும்  மேற்பட்ட புலம் பெயர்ந்த தமிழர்கள் இந்த மாநாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.  இம்மாநாட்டில் கல்வி தொடர்பான புத்தகங்கள், இசைத்தட்டுகள், வட்ட தகடுகள், தமிழில் மென்பொருட்கள் ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் வரவேற்கப்படுகின்றன. நீங்களும் இம்மாநாட்டில் கலந்துக் கொண்டு உங்கள் பொருட்களைப்  கலந்துக் கொள்வோர் பார்வைக்கு வைக்கலாம்.

உலகத் தமிழ் மாநாட்டில் மூன்று முத்தான போட்டிகள்

வேறு சூழலில் வளரும் புலம் பெயர் மாணவர்களின் திறனை வெளிபடுத்த வாய்ப்பு நல்கும் விதமாக உலகத் தமிழ் மாநாட்டில் மூன்று முத்தான போட்டிகள் நடைபெற உள்ளன.

குறும்படம் :

உங்கள் படைப்புத் திறனை உலகெங்கும் பரப்ப, படம் மூலம் சொல்ல ஓர் அறிய வாய்ப்பு.

பொது விதிமுறைகள் : குறும்படம் முழு அசைவூட்டமாகவோ(Animation) அல்லது சில அசைவூட்ட பகுதிகள் கொண்டவையாகவோ இருக்கலாம்.

தலைப்புகள் :

அ. தமிழ் மொழி.

ஆ. தமிழ் கலாச்சாரம்

இ. தமிழர் பண்பாடு.

ஈ. தமிழர் வரலாறு

சிறுகதை :

உங்களின் கற்பனை, தமிழ்ப்புலமை சொல் ஆளுமை ஆகியவற்றை சிறுகதை மூலம் வெளிப்படுத்த நல்லவாய்ப்பு.

பொது விதிமுறைகள் : உங்களின் சிறுகதைகள் ஏதேனும் கற்பனைக் கதையாகவோ அல்லது உண்மையான நிகழ்வாகவோ இருக்கலாம்.

மின்புத்தகம் :

புத்தகத்தில் உலகத்தைப் படிப்போம். உலகையே புத்தகமாக்கிப் படிப்போம். உங்கள் படைப்பாற்றலை மின்புத்தகம் வடிவில் வெளியிட நல்வாய்ப்பு.

பொது விதிமுறைகள் : அனைத்து மின்புத்தகங்களும் தமிழ் ஒருங்குறி எழுத்துக்களாக ஐபாட் மற்றும் பிற ஸ்மார்ட் தொலைபேசியிலும் பார்க்கும் வண்ணம் இருக்கவேண்டும். போட்டியில் வெற்றிபெறுபவர்கள் சிறந்த பரிசுகளை தட்டிச் செல்லலாம்.

மேல் விவரங்களுக்கு : http://www.tamilconference.org/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2016 - கலிபோர்னியா , அமெரிக்கா