பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளில் சமூகநலக் கருத்துகள் - பல்வழி அழைப்பு(Conference Call)

 • Venue
  • பல்வழி அழைப்பு
  • Virginia
  • USA
 • Organizer

  FeTNA தமிழ்ச்சங்கப் பேரவை

  • (641) 715-3670) - நுழைவுக்குறியீட்டு எண்: 873905#
Events Schedule
DATE TIMINGS
25 Mar 2018 08.00 PM to 09.00 PM (EST)

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை மாதந்தோறும் நடத்தும் இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம், இம்மாதம் 25-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, கிழக்கு நேரம் இரவு 8:00 மணி முதல் 9:00 மணிவரை பல்வழி அழைப்பு வாயிலாக நடக்கவுள்ளது. இந்த இலக்கியக் கூட்டத்தில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு இலக்கிய இன்பம் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

இலக்கியச் சொற்பொழிவு - "பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளில் சமூகநலக் கருத்துகள்"

சிறப்புப் பேச்சாளர்
சொல்லின் செல்வி உமையாள் முத்து
(பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் நடுவர்)

பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள் வழியாக தமிழ்மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். கடந்த 50-ஆண்டுகளாகப் பட்டிமன்றங்கள், கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி வழியாகவும் தமிழ் இலக்கியப் பணியாற்றி வருகிறார். உலகத் தமிழ் மாநாடு உள்ளிட்ட சிறப்பு மேடைகளிலும் அவர் உரையாற்றி இருக்கிறார். வரலாறு மற்றும் சட்டத்துறையில் பட்டம் பெற்ற இவர், வங்கித்துறையிலும் பணிபுரிந்துள்ளார்.

திகதி: மார்ச் 25-ஆம் திகதி (03/25/18)

நேரம்: கிழக்கு நேரம் இரவு 8:00 மணி முதல் 9:00 மணி வரை

பல்வழி அழைப்பு விவரங்கள்:
தொடர்பு எண்: (641) 715-3670)
நுழைவுக்குறியீட்டு எண்: 873905#

திருமதி உமையாள் முத்து அவர்கள் பல்வழி அழைப்பு வழியாக நம்முடன் பேசவிருக்கிறார். நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே இந்த இலக்கியக் கூட்டத்தில் பல்வழி அழைப்பின் வாயிலாகக் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

பேரவை இலக்கியக்குழு


பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளில் சமூகநலக் கருத்துகள் - பல்வழி அழைப்பு(Conference Call)