ஜார்ஜ் ஹார்ட் பங்கேற்கும் சிந்தனை வட்டம் - நியூ ஜெர்சி, அமெரிக்கா

 • Venue
  • 9 Van Doren Street
  • Plainsboro
  • New Jersey
  • USA
 • Organizer
  • நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம்
Events Schedule
DATE TIMINGS
18 Aug 2018 02.00 PM to 04.00 PM

2004ம் ஆண்டு இந்திய அரசு தமிழைச் செம்மொழியென அறிவித்துப் பெருமைப் படுத்தியதை நாம் அறிவோம். அதற்கான பெரும் முயற்சியின் பின்புலமாக அமைந்த முக்கியமான ஒரு சான்றை அளித்தவர் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள்.

செம்மொழித் தகுதிக்குத் தேவையான மொழியியல்
அடிப்படைக் கூறுகளை ஆய்ந்து வகைப்படுத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு வந்த பெருமைக்கும், போற்றுதலுக்கும் உரியவர் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள்.

அத்தோடு, வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் முதலாவதாக, கலிபோர்னியா  பல்கலைக் கழகத்தில் பெர்க்லியில்
தமிழிருக்கை அமைப்பதில் (1996)
பெரும்பங்காற்றியவர். தொடர்ந்து அங்கு பல அரிய தமிழாய்வுகளை நடத்தியும்.ஆய்வாளர்களுக்கு உறுதுணையாக இருந்தும்
தமிழின் பெருமையைத் தக்க ஆதாரங்களுடனும், பிற மொழிகளுடன் ஒப்பிட்டும்
தரணிக்கு எடுத்துச்  செல்லும் பன்மொழி அறிஞர். இந்திய அரசின் பத்மபூசண் விருது பெற்றவர். ஆகஸ்டு 18 அன்று, நியூஜெர்சி வர உள்ள அவர், நம் தமிழ்ச்சங்க சிந்தனை வட்டத்தில் பேச இசைந்துள்ளார்கள்.

அனைவரும் வாருங்கள்
பேரறிஞர் உரை கேட்போம்,
பேருவகையுடன் நன்றி பகர்வோம்.


ஜார்ஜ் ஹார்ட் பங்கேற்கும் சிந்தனை வட்டம் - நியூ ஜெர்சி, அமெரிக்கா