History of Kanchi Kamakshi Temple - Chennai, India

  • Venue
    • Arkay Convention Center (ACC)
    • OMS Lakshana, 146/3 R.H.Road, Mylapore
    • Chennai
    • Tamil nadu
    • India
  • Organizer

    Tamil Heritage Trust

    • 044 2466 1130
    • asrk@arkay.co.in
Events Schedule
DATE TIMINGS
04 Nov 2017 5:30 PM - 7:30 PM

காமக்கோட்டம் என்ற கருத்துருவானது காஞ்சியிலிருந்தேதான் துவங்கியிருக்கிறது. காஞ்சி காமாக்ஷி ஆலயமே காமக்கோட்டமென்று இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் குறிப்பிடப்பெற்றிருக்கிறது. காமாக்ஷி ஆலயத்தின் கோயில் வரலாறு கே.ஆர். வேங்கடராமன் முதலியோரால் ஆய்வு செய்யப் பெற்றிருக்கிறது. 13 நூற்றாண்டுக்கு முன்னர் கோயிலைப் பற்றிய கல்வெட்டுக்களில் நேரடியான குறிப்பில்லாத்தாலும் பலவிதமான பௌத்த சின்னங்களாலும் பௌத்த விஹாரையின் மேல் எழுந்த கோயில் என்றே பல்வேறு கருத்துக்களும் தோன்றியிருக்கின்றன. இந்நிலையில் அண்மையில் கும்பாபிஷேகத்திற்கான அகழ்வுகளில் பழமையான பல கல்வெட்டுக்கள் வெளிப்பட்டிருக்கின்றன. அவற்றையும் மேலும் பல இலக்கிய வரலாற்று ஆதாரங்களைக் கொண்டும் கோயிலின் வரலாற்றை மீளாய்வு செய்யும் முயற்சியே இந்த உரை.