புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு 2016

  • Venue
    • சான்டா க்ளாரா கன்வென்ஷன் சென்டர்
    • சான்டா க்ளாரா
    • California
    • USA
  • Organizer

    உலகத் தமிழ்க் கல்விக்கழகம்

    • 408.490.0282
    • tamil-conference@catamilacademy.org
Events Schedule
DATE TIMINGS
27 May 2016
28 May 2016 09.00 AM to 05.30 PM
29 May 2016 09.00 AM to 05.00 PM
30 May 2016 09.30 PM to 03.30 PM

International Tamil Academy: புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு

பன்னாட்டுத் தமிழ் அகடமி (ITA, மேனாள் CTA) புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டை 2016 மே மாதம் 27 தொடங்கி 30ம் தேதிவரை கலிஃபோர்னியாவின் விரிகுடாப்பகுதியில் சான்ட க்ளாரா கன்வென்ஷன் சென்டரில் நடத்துகிறது. முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

மே 28; காலை 9:00 - மாலை 5:30: ஆய்வரங்கம்

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பங்கேற்கும் ஆய்வரங்கம். தமிழ் கற்பிப்பதில் உதவும் பல்வேறு உத்திகள், கருவிகள்; புலம்பெயர்ந்த தமிழாசிரியர்களின் அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகள்; முன்னணி தமிழறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் உரைகள்; கேள்வி பதில் நேரம் ஆகியவை இடம்பெறும்.

மே 29; காலை 9:00 - மாலை 5:00: பயிலரங்கம்

பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள், அமெரிக்க மற்றும் பிறநாட்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் தமிழறிஞர்களின் உரை; தமிழ் கற்றல், கற்பித்தலில் தங்கள் அனுபவம் மற்றும் ஆலோசனை; கேள்வி பதில் நேரம் ஆகியவை இடம்பெறும்.
இரண்டு நாட்களிலும் கலைநிகழ்ச்சிகள் மாலை 5:30 முதல் 8:30 வரை நடைபெறும்.

மே 30; காலை 9:30 - மாலை 3:30: கண்காட்சி

தமிழ் மொழி, தமிழர் வரலாறு, தமிழ்க் கலாசாரம், கலைகள் ஆகியவற்றை விளக்கும் கண்காட்சி. இதில் புத்தகங்கள், குறுந்தகடு (CD), தமிழ் பயிற்றும் கருவிகள் மற்றும் மென்பொருட்கள் கிடைக்கும்.

குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்: மேஜிக் ஷோ, பலூன், முகப்பூச்சு (face painting) மற்றும் பல்வேறு விளையாட்டுகள்.
புடவை மற்றும் ஆபரணக் கடைகள் உண்டு.

எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம்.

மேலும் விவரங்களுக்கு www.tamilconference.org

நித்யவதி சுந்தரேஷ், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா


புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு 2016