இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம் - இந்தியா

  • Venue
    • வானகம்
    • சுருமான்பட்டி, கடவூர்,
    • கரூர்
    • Tamil nadu
    • India
  • Organizer

    வானகம்

    • 95666 67708, 84897 50624, 94880 55546
Events Schedule
DATE TIMINGS
29 Jan 2015 9.00 AM to 5.00 PM
30 Jan 2015 9.00 AM to 5.00 PM
31 Jan 2015 9.00 AM to 5.00 PM
01 Feb 2015 9.00 AM to 5.00 PM

வணக்கம்,

வருகிற 2015, ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை வானகம் பண்ணையில் நான்கு நாள் விரிவான இயற்கை வாழ்வியல் பயிற்சி நடைபெற உள்ளது . பயிற்சி 29ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்குத் துவங்கி 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நிறைவடையும்.

பயிற்சியில் இயற்கை வழி வேளாண்மை, மரபு வழி மருத்துவம், தேனீ வளர்ப்பு, சிறுதானியம்,, பூச்சி நண்பன் , மாடி வீட்டுத்தோட்டம், இயற்கை வேளாண்மைக்கான அடிப்படைகள் மற்றும் இயற்கை வாழ்வியலுக்குத் தேவையான பல.... இடம் பெறும்.

பயிற்சியில் 40 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.

பயிற்சியை வானகம் கல்வி குழுவினர் மற்றும் தொண்டர் படையினர் வழங்குவார்கள்.

பயிற்சி குறித்த நேரத்தில் நடைபெறும்.

பயிற்சி நன்கொடை : ரூ.2000/- மட்டுமே.

உணவு, தங்குமிடம், சான்று வழங்கப்படும்.

பயிற்சிக்கான ஏற்பாடுகள் செய்வதற்கு உதவியாக கட்டாயம் முனப்திவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். முன்பதிவு செய்ய வேண்டிய இறுதி நாள் 24 – 01- 2015

முன்பதிவு அவசியம்.


முன்பதிவு செய்ய தங்களுடைய பெயர், முகவரி அடங்கிய தகவல் ( முடிந்தால் புகைப்படம்) , முன்பதிவுக் கட்டணம் செலுத்திய வங்கி விபரம் அடங்கிய தகவல் ஆகியவற்றை nammalvarecologicalfoundation@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

முன்பதிவுக் கட்டணம் ரூ.1000/-

முன்பதிவுக் கட்டணம் & நன்கொடை செலுத்த வேண்டிய விவரங்கள் :

வங்கி கணக்கு எண் :

Nammalvar Ecological Foundation A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor
Branch Address : 22-a South Street Via Tharangampatti Kadavoor Pin : 621315
Bank Contact No : 04332 -279233
email: kadavoorbr@erosco.iobnet.co.in

( அல்லது )

பயிற்சி நன்கொடை செலுத்த வேண்டிய

மணி ஆர்டர் முகவரி :

M. செந்தில் கணேசன்

வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,

சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல்,

கரூர் மாவட்டம் - 621 311

முன்பதிவு அவசியம்.

முன்பதிவுக்கு: 95666 67708, 84897 50624, 99942 77505

குறிப்பு :

1. சோப்பு , ஷாம்பு, பேஸ்ட், கொசுவர்த்தி போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்து என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.

2. தங்களுக்குத் தேவையான போர்வை போன்றவற்றை எடுத்து வரவேண்டும்.

3. பண்ணை வேலை செய்வதற்குத் தேவையான உடைகளை எடுத்து வரவும்.

பயிற்சியின் முடிவில் நம்மாழ்வார் ஐயா எழுதிய

1. புத்தகங்கள்

2. செய்முறை விளக்கங்களுடன் கூடிய குறுந்தகடுகள்

3. ஆவணப்படம்

4. வானகம் மாத இதழ்

5. சத்துமிகு தானியங்களான வரகு, குதிரைவாலி, கம்பு, போன்றவைகள்

6. மூலிகை தேநீர் போன்ற பொருள்கள் கண்காட்சிக்கு வைக்கப்படும். அவற்றில் உங்களுக்குத் தேவையான பொருள்களை, வேண்டுமெனில் விலைக்கு வாங்கி செல்லலாம்.

நமக்கான உலகை இயற்கையின் வழியில் உருவாக்குவோம்... நம்முடைய சந்ததிகள் போற்ற வாழ்வோம்.


இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம் - இந்தியா