வட அமெரிக்கக் குறள் தேனீப் போட்டி - அமெரிக்கா

  • Venue
    • San Jose
    • Missouri
    • USA
  • Organizer

    FeTNA

    • 408-480-7594
    • sivagamiramiah@yahoo.com
Events Schedule
DATE TIMINGS
31 May 2015

குழந்தைகளே வாருங்கள்! உங்கள் திருக்குறள் திறமையை காட்டுங்கள்! US $1000 பணப்பரிசு மற்றும் தேசீய அளவிலான வட அமெரிக்கக் குறள் தேனீ 2015 விருதை தட்டிச் செல்லுங்கள்! இவ்வாண்டு பேரவை விழாவின் திருக்குறள் போட்டி வட்டார (Regional) அளவிலும், தேசிய (National) அளவிலும் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் "வட அமரிக்கக் குறள் தேனீ" என்ற பெயரில் மிகச் சிறப்பாக நடை பெற உள்ளது.

1. வட்டார அளவிலான போட்டியின் வடிவமைப்பு:

* திருக்குறள் (இரண்டு அடிகள்) முழுமையாக ஒப்புவிக்கப்பட வேண்டும்.

* திருக்குறளின் பொருள் (தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ) சொல்லப்பட வேண்டும். ஒப்புவிக்கப் படும் ஒரு குறளுக்கு 1/2 மதிப்பெண்ணும், கூறப்படும் பொருளுக்கு 1/2 மதிப்பெண்ணும் வழங்கப்படும்.(டெக்சாஸ் சாஸ்தா தமிழ்அறக்கட்டளையிலும், கலிஃபோர்னியா விரிகுடாக் கலைக்கூடத்திலும் நடத்தப்படும் திருக்குறள் போட்டிகளில் ஒரு மதிப்பெண்ணுக்கு ஒருடாலர் என்ற முறையில் பணப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.)

2. வட்டார போட்டியில் பங்கெடுக்கும் சில தமிழ் மன்றங்கள் மற்றும் தமிழ் பள்ளிகள் பின் வருமாறு:

* விரிகுடாக் கலை கூடம், வளைகுடாப் பகுதி, கலிபோர்னியா

* சாஸ்தா அறக்கட்டளை, ப்ளேனோ, டெக்ஸஸ்

* கனேடியன் தமிழ் காங்க்ரெஸ், டொரொண்டோ, கனடா

* ஹூஸ்டன் தமிழ்ப் பள்ளி, ஹூஸ்டன், டெக்ஸஸ்

* மினசோட்டா தமிழ்ச் சங்கம், மினசோட்டா

* மிசெளரி தமிழ்ச் சங்கம், மிசெளரி

3. பேரவை விழாவின் இடைநிலை மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான வடிவமைப்பு:

திருக்குறளில் குழந்தைகளின் திறமையை சோதிக்கும் வண்ணம்,

* ஒரு குறளின் தொடங்கும் சொல்லையோ அல்லது முடியும் சொல்லையோ கொடுத்து குறளை கண்டுபிடிப்பது

* குறளின் அதிகாரத்தைக் கண்டுபிடிப்பது அல்லது ஒரு அதிகாரத்தின் கீழ் வரும் குறளைக் கூறுவது

* பொருளுக்கேற்ற குறளைக் கூறுவது

போன்றவை இடம் பெறும்.

4. போட்டி விதிமுறைகள்:

* போட்டி பங்கேற்பாளர்கள்  வட அமெரிக்கக் குறள் தேனீப் பாடத்திட்டத்தை  பின்பற்ற வேண்டும். மேலும் விவரங்களுக்கு - 'பாடத்திட்டம்' - இணைப்பை 'கிளிக்' செய்யவும்.

* போட்டியில் பங்கேற்க பேரவையின் தமிழ் விழாவிற்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு http://fetna.org/index.php/2015/registration

* போட்டி பங்கேற்பாளர்கள், தங்கள் பெயர், வயது போன்ற விபரங்களை  விண்ணப்பத்தில் பதிவு செய்யவும்
பதிவு செய்ய -  'சமர்பிக்க' - இணைப்பை 'கிளிக்' செய்யவும்.

பேரவை குறள் தேனீ போட்டிக்குப் பதிவு செய்ய கடைசி தேதி:  May 31, 2015.

தேசிய அளவிலான இறுதிப் போட்டி சான் ஹோசே, கலிபோர்னியாவில் இவ்வாண்டு நிகழவிருக்கும் பேரவை விழாவின் ( http://www.fetna2015.org) பொது மேடையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் அன்பர்கள் முன்னிலையில் அரங்கேற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் வெற்றியாளருக்கு US$1000 பணப் பரிசு மற்றும் வட அமரிக்கக் குறள் தேனீ விருது காத்துக் கொண்டிருக்கிறது.

போட்டியில் கலந்து கொள்ளும் குழந்தைகளுக்கான வயது வரம்பு: 5 வயது முதல் 18 வயது. பெற்றோர்கள் பேரவை விழாவிற்கு பதிவு செய்திருந்தால் ஒன்பது வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு விழாப்பதிவு கட்டணம் கிடையாது.

நம் தாய் மொழி தமிழின் சிறப்பையும், வாழ்க்கை விழுமியங்களையும் திருக்குறளின் மூலம் நம்முடைய அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் இம்முயற்சிக்கு உங்களின் பேராதரவு மிகவும் இன்றியமையாதது!

உங்களுடைய பகுதி தமிழ் மன்றம் அல்லது தமிழ்ப் பள்ளி வட அமரிக்கக் குறள் தேனீப் போட்டிகளில் பங்கு பெறவோ மேலும் விபரங்கள் அறியவோ தொடர்பு கொள்ளுங்கள்:

வட அமெரிக்கக் குறள் தேனீ 2015 ஒருங்கிணைப்பாளர்:

திருமதி சிவகாமி இராமையா

sivagamiramiah@yahoo.com / 408-480-7594

வட்டாரப் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள்:

அமெரிக்கா: திரு வேலு ராமன் - velu@kw.com; 972-754-5027 திரு திருமுடி துளசிராமன் thirumudi@gmail.com; 510-684-9019

கனடா: திரு சிவா வேலுப்பிள்ளை pvsivam@gmail.com; 416-706-2323


வட அமெரிக்கக் குறள் தேனீப் போட்டி - அமெரிக்கா