LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF
- நீதிக் கதைகள்

பஞ்சம்

    ஷீராவஸ்தி என்ற ஊரில் ஒரு சமயம் புத்தர் தங்கியிருந்த போது அந்த ஊரில் பஞ்சம் தலை விரித்தாடியது. உண்ண உணவின்றி மக்கள் வாடினர். அந்த ஊரில் பெரும் செல்வந்தர்கள் இருந்தும் உணவின்றி வாடும் ஏழை மக்களுக்கு உதவ முன்வரவில்லை.பஞ்ச காலத்தில் அனைத்தையும் தானம் செய்துவிட்டால், இறுதியில் நாம் பஞ்சத்தில் சிக்கித் தவிக்க நேரிடுமோ என்று நினைத்து சுயநலத்துடன் வாழ்ந்து வந்தனர்.


     ஒரு நாள் புத்தர் தன் முன்னே கூடியிருந்த பல செல்வந்தர்களைப் பார்த்து, “”கனவான்களே! பஞ்சத்தினால் ஏழை எளிய மக்கள் பெரும் துன்பத்திற்குள்ளாகி இருக்கின்றனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உங்களில் யாருக்குமே கிடையாதா?” என்று கேட்டார். அவர் பேசியதைக் கேட்ட செல்வந்தர்கள் அனைவரும் பதில் ஏதும் கூறாமல் மவுனமாக இருந்தனர்.புத்தர் மீண்டும், “”ஏன் மவுனமாக இருக்கிறீர்கள்? உங்களில் ஒருவருக்குக் கூட பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கிடையாதா?” என்று சற்றும் உரத்த குரலில் கேட்டார்.


அப்போது —


     அந்தக் கூட்டத்திலிருந்து ஒரு சிறுமி வெளிப்பட்டு, “”ஏன் இல்லை! இதோ… நான் இருக்கிறேன் சுவாமி,” என்றாள்.புத்தர் உள்பட அங்கு கூடியிருந்த அனைவரும் அந்தச் சிறுமியைப் பார்த்தனர். “அருகில் வா! உன்னால் என்ன செய்ய முடியும் குழந்தாய்?” என்று கேட்டார் புத்தர்.


     “இவ்வூர் மக்களுக்கு என்னால் உதவ முடியும்!” “எப்படி?” “என் தந்தை பெரிய கோடீஸ்வரர். ஆனாலும், யாருக்கும் உதவமாட்டார். நான் வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்து இவ்வூர் க்களின் பசியைப் போக்குகிறேன். பிச்சைப் போடும் தர்மவான்கள் இவ்வூரில் உண்டு,” என்றாள் அச்சிறுமி. அவளது பேச்சையும், தர்ம சிந்தனையுள்ள உள்ளத்தையும் கண்டு அப்படியே மெய்சிலிர்த்துப் போனார் புத்தர்.


     சொன்னபடியே அச்சிறுமி வீடு வீடாகச் சென்று பிச்சையெடுத்தாள். ஒரு கோடீஸ்வர வீட்டுச் சிறுமி வீடு வீடாகச் சென்று பிச்சையெடுக்கிறாளே என்ற விஷயம், அத்தனை செல்வந்தர்களின் உள்ளத்தையும் தொட்டது. அவர்கள் உணவுகளையும் தானியங்களையும் அவ்வூர் ஏழை மக்களுக்கு வாரி வாரி வழங்கினர். அவர்களது தர்ம சிந்தனையால் விரைவிலேயே அந்த ஊரில் பஞ்சம் நீங்கியது. அதற்காக பாடுபட்ட அச்சிறுமி மிகவும் போற்றப்பட்டாள்.

by parthi   on 09 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
புதிய நண்பர்கள் புதிய நண்பர்கள்
தப்பி வந்த முதலை தப்பி வந்த முதலை
ஒரு நீண்ட பயணம் ஒரு நீண்ட பயணம்
நாணயஸ்தன் நாணயஸ்தன்
வகுப்புக்கு தாமதம் வகுப்புக்கு தாமதம்
பரிசும் ஊக்கமும் பரிசும் ஊக்கமும்
முட்டாள் வேலைக்காரன்! முட்டாள் வேலைக்காரன்!
வல்லவனுக்கு வல்லவன் வல்லவனுக்கு வல்லவன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.