LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாம்பார் (Sambar)

திடீர் இட்லி சாம்பார் (Fast Idli Sambar)

தேவையானவை :


பாசி பருப்பு - ஒரு கப்

சிறிய வெங்காயம் - 15

தக்காளி -  ஒன்று

பச்சை மிளகாய் - ஒன்று

மிளகாய்த்தூள் - இரண்டு டீஸ்பூன்

மஞ்சள்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மல்லிதழை - சிறிதளவு

இட்லி மாவு - இரண்டு டேபிள் ஸ்பூன்


தாளிக்க தேவையானவை :


எண்ணெய்  - 4 டீஸ்பூன்

கடுகு - ஒரு ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - இரண்டு

கறிவேப்பிலை  - ஒரு கொத்து

பெருஞ்சீரகம் - கால் டீஸ்பூன்



செய்முறை :

 

1.குக்கரில் பாசி பருப்பை நன்கு கழுவி விட்டு  போட்டு வேகும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சள்த்தூள், பாதி மிள்காய்த்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்துக் கொண்டு கொதி வருவதற்க்குள்ளாக வெங்காயத்தையும் உரித்து விட்டு கழுவி நீளவாக்கில் அரிந்து அதில் பாதியையும்,தக்காளியையும் பொடியாக அரிந்தும்,பச்சைமிளகாயை கீறியும் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும்.


2.குக்கரை திறந்து அடுப்பில் வைத்து தேவைக்கேற்ப சிறிது தண்ணீர் சேர்த்து இரண்டு கொதி கொதிக்கவிட்டு இறக்கவும்.அதற்க்கிடையில் சோம்பை ஒன்றிரண்டுமாக நுணுக்கியும்,இட்லி மாவை சிறிது தண்ணீரில் கரைத்தும் வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் தாளிக்க கொடுத்தவைகளை தாளித்து  மீதி அரிந்த வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிவிடவும்.பிறகு மீதி மிளகாய்த்தூளையும் சேர்த்து தாளித்து சாம்பாரை ஊற்றவும்.


3.மேலும் இதனுடன் கரைத்து வைத்திருக்கும் இட்லி மாவை ஊற்றி கலக்கி விட்டு ,மல்லி தழையை அறிந்து சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

Fast Idli Sambar

Ingredients for Fast Idli Sambar:

 

Green Gram-1 Cup

Small Onion-15

Tomato-1

Green Chilly-1

Chilly Powder-2 tsp

Turmeric Powder-1 tsp

Coriander Powder-Little

Idly Flour-2 tbsp

 

Ingredients for Seasoning:

 

Oil-4 tsp

Mustard-1 tsp

Dry Chilly-2

Curry Leaves-1 Bunch

Fennel- 1/4 tsp

 

Procedure to make Fast Idli Sambar:

 

1. Put the washed green gram in a cooker along with water, turmeric powder and 1/2 of chilly powder and allow medium flame to boil. Then cut the onion vertically, chop the tomato and peel the green chilly and then put these ingredients in to cooker and allow 1 whistle and then remove from flame.

2. Open the cooker and put it on stove, add enough need water and allow to boil and then remove from flame. Then grind the fennel and mix the idli flour in water. Heat oil in a pan, add the given seasoning ingredients and add chopped onion and saute well. Then add remaining chilly powder and let them to splutter and then put in to sambar.

3. Then add the idly flour mixure and stir well. Add corinader leaves, allow to boil and remove from flame.

 

 

 

by vanitha   on 26 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.