LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF

சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்

காவிரி நதியின் தமிழகத்தின் தொன்மை உரிமைகளை மீட்டெடுக்கவும், காவிரி பிரச்சனையில், மத்திய அரசு தனது சட்டப்பூர்வ பொறுப்பை நிறைவேற்ற தவறியதால் ஏற்பட்ட விவசாயிகளின் பயிர் இழப்பிற்கும், உயிர் இழப்பிற்கும் மத்திய அரசு பொறுப்பேற்று உரிய நீதியும், நஷ்ட ஈடும் வழங்க வேண்டும், மாநில அரசும் முழு அளவில் உதவி விவசாயிகளை காப்பற்ற வேண்டும் என வலியுரித்தியும்.....
 

 காவிரி நதியின் தமிழகத்தின் தொன்மை உரிமையை மீட்டெடுக்கவும், காவிரி பிரச்சனையில், மத்திய அரசு தனது சட்டப்பூர்வ பொறுப்பை நிறைவேற்ற தவறியதால் ஏற்பட்ட விவசாயிகளின் பயிர் இழப்பிற்கும், உயிர் இழப்பிற்கும் மத்திய அரசு பொறுப்பேற்று உரிய நீதியும், நஷ்ட ஈடும் வழங்க வேண்டும், மாநில அரசும் முழு அளவில் உதவி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தியும்.....

 

காவிரி நம் பிறப்புரிமை!  காவிரி நீர் நம் வாழ்வுரிமை!  காவிரி நதி நம் ஆயிரமாயிரம் ஆண்டு காலாச்சாரம்!  காவிரி நதி நம் தாய்! காவிரியின் தொன்மை, உரிமைகளை மீட்க தமிழகத்தை காப்பாற்றிட கட்சி, ஜாதி, மதம் இவைகளை கடந்து தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்கள் சக்தியை ஒருமுகப்படுத்தும் நோக்குடன், முதல்கட்ட மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவுள்ளது. இதில் உழவர் பெருமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டுகிறோம்...

 

 
சென்னையில்  மாபெரும்


உண்ணாவிரதப் போராட்டம்

 

நாள் :௦08.01.2013 செவ்வாய் கிழமை

 நேரம் :காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை

 இடம் :அரசு விருந்தினர் இல்லம் அருகில், சேப்பாக்கம், சென்னை 

 

 

நிகழ்ச்சி நிரல்

 

தலைமை  : திரு. மு. சேரன், தலைவர், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, டெல்டா மாவட்டங்கள்.

முன்னிலை :

  • திரு. சி. பாலகிருஷ்னான், பொருளாளர், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு.
  • திரு. த.மணிமொழியன், தஞ்சை மாவட்ட தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
  • திரு. ஏ.வி. துரைராஜ், தலைவர், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் 
  • திரு. எம்.சி. பழனிவேல், மாநில செயலாளர், பாரதீய கிசான் சங்கம் 
  • திரு. பி. கே.சி.சி.கணேசன், தலைவர், நாகை மாவட்ட விவசாயிகள் நல பாதுகாப்பு சங்கம் 
  • திரு. என். வி. சுந்தரம், விவசாயிகள் மன்றம், திருவாரூர் மாவட்டம் 

 

 

வரவேற்புரை : திரு. வெ. சத்தியனாராயணன், பொதுச்செயலாளர், காவிரி டெல்டா விவசாயிகள் குழுமம் 



துவக்கி வைத்தல்: இயற்கை விஞ்ஞானி முனைவர். கோ.நம்மாழ்வார் 


நிறைவு செய்தல் : தலைவர், இந்திய மக்கள் இயக்கம்


கோரிக்கை விளக்கவுரை:  திரு.ஆருபாதி ப. கல்யாணம், பொதுச்செயலாளர்,விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, டெல்டா மாவட்டங்கள் 


=================


கோரிக்கைகள்: 

1. தற்போது தமிழகத்தில் காவிரி பாசன பகுதிகளில் 2 1/2 கோடி மக்களின் வாழ்வாதாரமாகவும், வடக்கே சென்னை மாநகர், தெற்கே இராமநாதபுரம் வரை சுமார் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் திகழும் காவிரி நதியின் தமிழகத்தின் தொன்மை உரிமைகள் முழவதும் மீட்டெடுக்கப்பட வேண்டும். காவிரி நடுவர் மன்றத்தின் 2007 இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட பாதகமான அம்சங்கள், அநீதிகள் போக்கப்பட வேண்டும். 


2. மேட்டூர் அணைக்கு கடந்த 1970 வரை சராசரியாக கிடைத்த 378 டி.எம்.சி. நீர், காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு 1991ல் 205 டி,.எம்.சி. நீர் என குறைந்து, இறுதி தீர்ப்பு 2007 ல் 192 டி.எம்.சி. என மேலும் குறைக்கப்பட்டு தமிழகத்திற்கு பாதகமும், அநீதியும் இழைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை காத்திட மேட்டூருக்கு நீண்டகால சராசரி நீர் வரத்து அடிப்படையில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 325 டி.எம்.சி. நீர்  உறுதி செய்யப்படவேண்டும். இதற்க்காக தமிழக அரசு தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் சக்தியை ஒருமுகப்படுத்தவேண்டும். தமிழகம் பாலைவனம் ஆகாமல் காப்பாற்றப்பட வேண்டும். 


3. இந்திய கூட்டாட்சியை தகர்க்கும் வகையில் தனி நாடு போல் செயல்படும் கர்நாடகத்தின் அநீதிகளுக்கு இனியும் மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் உடனே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மத்திய அரசு கர்நாடக காவிரி அணைகளை தன் பொறுப்பில் ஏற்று சுய அதிகாரம் உள்ள ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வைத்து, நானுவத்தின் பாதுகாப்புடன் தமிழகத்திருக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டும்.


4. வறட்சியின் பிடியில் தவிக்கும், தமிழக காவிரி பாசன மாவட்டங்களை பேரிடர் பாதிப்பு பகுதிகளாக அறிவிக்க வேண்டும். கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குரிய காவிரி நீரை மத்திய அரசு பெற்றுத்தரும் சட்டப்பூர்வ பொறுப்பை நிறைவேற்ற தவறியதால் ஏற்பட்ட விவசாயிகளின் பயிர் இழப்பிற்கும், உயிர் இழப்பிற்கும் மத்திய அரசுதான் பொறுப்பேற்று உரிய நீதியும், நஷ்ட ஈடும் வழங்க வேண்டும. தமிழக அரசும், முழு அளவில் உதவி கூடுதல் நிதி ஒதுக்கி பரிதவிக்கும் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். 


சென்னை தொடர்பாளர்: சமூக ஆர்வலர் திரு. செந்தில் ஆறுமுகம், செல் 9791050513, kgsenthil@gmail.com

by Swathi   on 25 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் இந்த ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு.. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் இந்த ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு..
650 நெல் ரகங்களைப் பாதுகாத்து வரும் கேரள விவசாயிக்குப் பத்மஸ்ரீ விருது 650 நெல் ரகங்களைப் பாதுகாத்து வரும் கேரள விவசாயிக்குப் பத்மஸ்ரீ விருது
உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு
இந்தியாவில் முதன் முதலாக வயல்களில் சென்சார் மற்றும் ரேடர்கள் மூலமாக நடைபெற்ற நோய்க் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி. இந்தியாவில் முதன் முதலாக வயல்களில் சென்சார் மற்றும் ரேடர்கள் மூலமாக நடைபெற்ற நோய்க் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி.
3 மடங்கு லாபம் ஈட்டும் பிலிப்பைன்ஸ் விவசாயிகள்: நேரில் பார்வையிட்ட உடுமலை விவசாயிகள் தகவல் 3 மடங்கு லாபம் ஈட்டும் பிலிப்பைன்ஸ் விவசாயிகள்: நேரில் பார்வையிட்ட உடுமலை விவசாயிகள் தகவல்
நேரடியாக_உழவர்களிடம்_வாங்கிடுங்கள்... நேரடியாக_உழவர்களிடம்_வாங்கிடுங்கள்...
விவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள் விவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள்
தமிழ்நாட்டின் விவசாயம் ஏன் சிக்கலில் தவிக்கிறது? என்ன தீர்வு ? தமிழ்நாட்டின் விவசாயம் ஏன் சிக்கலில் தவிக்கிறது? என்ன தீர்வு ?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.