LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழ்க்கல்வி - Tamil Learning Print Friendly and PDF

தந்தை வழி உறவுகள்

மகனுக்கு தனது தந்தை மூலம் வரும் உறவுமுறைகளே தந்தை வழி உறவுகள் ஆகும். தந்தை வழி உறவுமுறைகளும் அவற்றிற்கான விளகங்களும் பின்வருமாறு :

பெரியப்பா:

மகனுக்கு  தந்தையின் உடன் பிறந்த சகோதரங்களுள் மூத்த ஆண் சகோதரன் பெரியப்பா என்று அழைக்கப்படுவார்.

பெரியம்மா:

மகனுக்கு தந்தையின் உடன் பிறந்த சகோதரங்களுள் மூத்த ஆண் சகோதரனின் மனைவி அதாவது பெரியப்பாவின் மனைவி பெரியம்மா என்றழைக்கப்படுவார்.

சித்தப்பா:

மகனுக்கு தந்தையின் உடன் பிறந்த சகோதரங்களுள் இளைய ஆண் சகோதரன் சித்தப்பா என்று அழைக்கப்படுவார்.

சின்னம்மா :

மகனுக்கு தந்தையின் உடன் பிறந்த சகோதரங்களுள் இளைய ஆண் சகோதரனின் மனைவி அதாவது சித்தப்பாவின் மனைவி சின்னம்மா (சித்தி) என்றழைக்கப்படுவார்.

சகோதரன் :

ஒருவரின் பெரியப்பா அல்லது சித்தப்பாவின் மகன் அவருக்கு சகோதரன் முறை ஆவார். அச்சகோதரன் தன்னை விட வயதில் மூத்தவராக இருப்பின் அண்ணன் என்றும் இளையவராக இருப்பின் தம்பி என்றும் அழைக்கப்படுவார்.

சகோதரி :
ஒருவரின் பெரியப்பா அல்லது சித்தப்பாவின் மகள் அவருக்கு சகோதரி முறை ஆவார். அச்சகோதரி தன்னை விட வயதில் மூத்தவராக இருப்பின் அக்கா என்றும் இளையவராக இருப்பின் தங்கை என்றும் அழைக்கப்படுவார்.

அத்தை:

மகனுக்கு தந்தையின் உடன் பிறந்த சகோதரங்களுள் பெண் சகோதரி அத்தை என்று அழைக்கப்படுவார். தகப்பனாரின் அக்கா பெரியத்தை என்றும் தகப்பனாரின் தங்கை சின்னத்தை என்றும் அழைக்கப்படுவார்.

மாமா :

மகனுக்கு தந்தையின் உடன் பிறந்த சகோதரங்களுள் பெண் சகோதரியின் கணவர் அதாவது அத்தையின் கணவர் மாமா என்றழைக்கப்படுவார். பெரியத்தையின் கணவர் பெரியமாமா என்றும் சின்னத்தையின் கணவர் சின்னமாமா என்றும் அன்புடன் அழைக்கப்படுவர்.

மைத்துனன் :

அத்தையின் மகன் மைத்துனன் என்றழைக்கப்படுவார். மைத்துனன் என்ற முறையை பேச்சுவழக்கில் மச்சான் என்றும் அழைப்பர்.

மைத்துனி:
அத்தையின் மகள் மைத்துனி என்றழைக்கப்படுவார். மைத்துனி என்ற முறையை பேச்சுவழக்கில் மச்சாள் என்றும் அழைப்பர்.

தாத்தா:
அப்பாவின் அப்பா தாத்தா என்றழைக்கப்படுவார். இலங்கைத் தமிழரின் உறவுமுறையில் அப்பாவின் அப்பாவை அப்பப்பா என்றும் அழைப்பர்.

பாட்டி :

அப்பாவின் அம்மா பாட்டி (அ) அப்பாயி என்றழைக்கப்படுவார். இலங்கைத் தமிழரின் உறவுமுறையில் அப்பாவின் அம்மாவை அப்பம்மா என்றும் அழைப்பர்.

by Swathi   on 02 Feb 2013  6 Comments
 தொடர்புடையவை-Related Articles
பறவைகள் சரணாலயம் பறவைகள் சரணாலயம்
முதன் முதலில் கடலை பார்க்கும் சிறார்கள் முதன் முதலில் கடலை பார்க்கும் சிறார்கள்
உயர பறந்திடுவோம் உயர பறந்திடுவோம்
ஒன்றாய் இருப்போம் ஒற்றுமையுடனே ஒன்றாய் இருப்போம் ஒற்றுமையுடனே
சூரிய அண்ணனின் கோபம் சூரிய அண்ணனின் கோபம்
எப்பொழுது பள்ளி செல்வோம் ? எப்பொழுது பள்ளி செல்வோம் ?
அயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா அயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா
பயணம் செய்தால் பயணம் செய்தால்
கருத்துகள்
20-Nov-2020 15:10:07 Anandhababu said : Report Abuse
En appa voda thangaci ennudaiya age vida 2 vayathu siriyaval apadi endral antha pen enaku thangaci murai ya illlai thirumanam sayithu kolum muraiya
 
20-Mar-2020 00:00:38 Gokul said : Report Abuse
Paatiyoda annanin maganin magal enaku enna uravu
 
20-Mar-2020 00:00:28 Gokul said : Report Abuse
Paatiyoda annanin maganin magal enaku enna uravu
 
20-Mar-2020 00:00:18 Gokul said : Report Abuse
Paatiyoda annanin maganin magal enaku enna uravu
 
17-Dec-2019 12:33:24 Dhanseelan said : Report Abuse
En appa voda thangaci in age um ennudaiya age um ondru apadi endral antha pen enaku thangaci murai ya illlai thirumanam sayithu kolum muraiya
 
04-Nov-2019 17:21:58 Senthil murugan said : Report Abuse
அத்தையின் மகளின் மகள் என்ன முறை வரும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.