LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் 31-வது மாநாட்டில் 5500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்..

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் 31-வது  மாநாடு  டெக்சாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரில் 5500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துக்கொண்டு மிகவும் சிறப்பாக நடைப் பெற்றது. இந்த விழாவினை மெட்ரோ ப்ளக்ஸ் தமிழ்ச் சங்கம் தலைமை ஏற்று 500 தன்னார்வத் தொண்டர்களின் உழைப்பில் மிகவும் நேர்த்தியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு விழா நடத்தியது பாராட்டதக்கது.

இவ்வாண்டு இதுவரை இல்லாத மக்கள் ஆதரவும், அதிக எண்ணிக்கையில் விருந்தினர்களும், பன்னாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஒத்த தரத்தில்  வித்தியாசமான அரங்கமும்,  தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட கட்டிடக்கலையை போற்றும் மிகப்பெரிய உழைப்பில் உருவான வடிவமும் பேராவையின்  குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகள். 
100-க்கும் மேற்பட்ட இயல் இசை நாடக நிகழ்ச்சிகள், தொழில் முனைவோர் பட்டறைகள், தமிழ் கருத்தரங்குள், கருத்துக்களம் நிகழ்ச்சி, சிறுவர்களுக்கான மற்றும் இளைஞர்களுக்கான போட்டிகள், பட்டறைகள், இயல் இசை நாடகம் ஆய்வுகள் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஜூன் 29, 30, ஜூலை 1 ஆகிய மூன்று நாட்கள் மிகச்சிறப்பாக நடந்தது. 
மெட்ரோ ப்ளக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் 50க்கும் மேற்பட்ட தன்னார்வாளர்கள் கிட்டதட்ட 6 மாதம் உழைப்பில் உருவான தஞ்சை பெரிய கோவிலின் மாதிரி மாநாட்டின் முதல் சிறப்பு எனலாம்.
150க்கும் மேலான தமிழ் இலக்கியவாதிகள், திரைப்பட, நாடக கலைஞர்கள், தொழில் அதிபர்கள் என உலகின் பல தேசங்களில் வந்திருந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். வட அமெரிக்காவில் தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் முதன்மையான விழா இந்த மாநாடு என்றால் அது மிகையாகாது. விழா குழுவின் தலைவர் கால்டுவெல் வேல்நம்பி அவர்களின் அபார உழைப்பு, அவர் தலைமையில் பம்பரமாக சுற்றி தொண்டுசெய்யும் இளைஞர் கூட்டம் என்று பார்ப்பதற்கு நம்பிக்கையூட்டும் செயல்பாடுகள் கலந்துகொண்ட அனைவரின் மனதிலும் நிறைவையும் , பெருமிதத்தையும் ஏற்படுத்தியது. 
வட அமெரிக்காவில் வாழும் ஒவ்வொரு தமிழரும் பேரவை விழாவில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய விழா...  விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் இணையமர்வுகளாக  நடைபெற்றது. கீழ்காணும் காணொளிகள் நிகழ்ச்சியில்  நேரில் கலந்துகொள்ள முடியாதவர்கள் மற்றும் வேறு மேடை, இணையமர்வுகளில் கலந்துகொண்டவர்கள்  கண்டு , கேட்டு பயன்பெற உதவும்.  இவை விழாவின் ஒரு பகுதி மட்டுமே. பிற காணொளிகள் தொடர்ந்து பகிரப்படும் ..
அடுத்த ஆண்டு முப்பெரும் விழா  சிகாகோ மாநகரில் சூலை 3-6, 2019 தேதிகளில் நடைபெற உள்ளது!   உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,  பேரவையின் 32ஆவது தமிழ் விழா,  சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு விழா ஆகியவை இணைந்து நடைபெறும் இந்த விழா மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் 31-வது  மாநாடு  டெக்சாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரில் 5500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துக்கொண்டு மிகவும் சிறப்பாக நடைப் பெற்றது. இந்த விழாவினை மெட்ரோ ப்ளக்ஸ் தமிழ்ச் சங்கம் தலைமை ஏற்று 500 தன்னார்வத் தொண்டர்களின் உழைப்பில் மிகவும் நேர்த்தியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு விழா நடத்தியது பாராட்டதக்கது. பேரவை தலைவர் , செயற்குழு, மெட்ரோபிளக்ஸ் தமிழ்ச்சங்க தலைவி, செயற்குழு, தன்னார்வலர் குழுக்கள் என்று பலரும் கைகோர்த்து திட்டமிட்டு நிகழ்ச்சியை மிகப்பெரிய வெற்றியாக்கினார்கள் என்றால் மிகையாகாது. 

இவ்வாண்டு இதுவரை இல்லாத மக்கள் ஆதரவும், அதிக எண்ணிக்கையில் விருந்தினர்களும், பன்னாட்டு நிகழ்ச்சிகளுக்கு ஒத்த தரத்தில்  வித்தியாசமான அரங்கமும்,  தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட கட்டிடக்கலையை போற்றும் மிகப்பெரிய உழைப்பில் உருவான வடிவமும் பேரவையின்  குறிப்பிடவேண்டியவை.

100-க்கும் மேற்பட்ட இயல் இசை நாடக நிகழ்ச்சிகள், தொழில் முனைவோர் பட்டறைகள், தமிழ் கருத்தரங்குள், பல்வேறு தலைப்புகளில் இணையமர்வுகள்,  கருத்துக்களம் நிகழ்ச்சி, சிறுவர்களுக்கான மற்றும் இளைஞர்களுக்கான போட்டிகள், பட்டறைகள், இயல் இசை நாடகம் ஆய்வுகள் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஜூன் 29, 30, ஜூலை 1 ஆகிய மூன்று நாட்கள் மிகச்சிறப்பாக நடந்தது. 

முத்தமிழில் தமிழிசைக்கென்று இவ்வாண்டு சிறப்பு இணையமர்வு தொடங்கப்பட்டு இசையறிஞர் திரு.மம்முது , முனைவர்.திரு.ஞானசம்பந்தன் , புரவலர் திரு.பால்பாண்டியன் ஆகியோரைக் கொண்டு நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்ட தமிழிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. விவசாயத்திற்கென்று ஒரு தனி இணையமர்வு தேவை என்பதை விவசாய ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பார்த்தனர்.

மெட்ரோ ப்ளக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் 50க்கும் மேற்பட்ட தன்னார்வாளர்கள் கிட்டதட்ட 6 மாதம் உழைப்பில் உருவான தஞ்சை பெரிய கோவிலின் மாதிரி மாநாட்டின் முதல் சிறப்பு எனலாம்.

150க்கும் மேலான தமிழ் இலக்கியவாதிகள், திரைப்பட, நாடக கலைஞர்கள், தொழில் அதிபர்கள் என உலகின் பல தேசங்களில் வந்திருந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள். வட அமெரிக்காவில் தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் முதன்மையான விழா இந்த மாநாடு என்றால் அது மிகையாகாது. விழா குழுவின் தலைவர் கால்டுவெல் வேல்நம்பி அவர்களின் அபார உழைப்பு, அவர் தலைமையில் பம்பரமாக சுற்றி தொண்டுசெய்யும் இளைஞர் கூட்டம் என்று பார்ப்பதற்கு நம்பிக்கையூட்டும் செயல்பாடுகள் கலந்துகொண்ட அனைவரின் மனதிலும் நிறைவையும் , பெருமிதத்தையும் ஏற்படுத்தியது. 
வட அமெரிக்காவில் வாழும் ஒவ்வொரு தமிழரும் பேரவை விழாவில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய விழா...  விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் இணையமர்வுகளாக  நடைபெற்றது. கீழ்காணும் காணொளிகள் நிகழ்ச்சியில்  நேரில் கலந்துகொள்ள முடியாதவர்கள் மற்றும் வேறு மேடை, இணையமர்வுகளில் கலந்துகொண்டவர்கள்  கண்டு , கேட்டு பயன்பெற உதவும்.  இவை விழாவின் ஒரு பகுதி மட்டுமே. பிற காணொளிகள் தொடர்ந்து பகிரப்படும் ..

அடுத்த ஆண்டு முப்பெரும் விழா  சிகாகோ மாநகரில் சூலை 3-6, 2019 தேதிகளில் நடைபெற உள்ளது!   உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு,  பேரவையின் 32ஆவது தமிழ் விழா,  சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு விழா ஆகியவை இணைந்து நடைபெறும் இந்த விழா மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

புதிய காணொளிகள் தொடர்ந்து இந்த கட்டுரையில் சேர்க்கப்படும்.. மேலும் www.YouTube.Com/ValaiTamil -ல் இணைந்து உடனுக்குடன் புதிய காநோளிகளை பெறலாம் .. 

விழாவில் பதிவு செய்யப்பட்ட காணொளித் தொகுப்பு 

FETNA-2018: திரு. ஜேம்ஸ் வசந்த் நடத்திய தமிழ்த்தேனீ நிகழ்ச்சி

https://www.youtube.com/watch?v=dwGCXMKqHqA&t=37s


FETNA-2018: கைத்தறியின் மகத்துவம் -முனைவர்.சுபாஷினி

https://www.youtube.com/watch?v=e70PlKcRYgA&t=108s


FETNA 2018 -தஞ்சை பெரிய கோவிலை ஹூஸ்டனில் கட்டிய தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்?

https://www.youtube.com/watch?v=ksGthKOO3B4&t=391s


FETNA 2018 : திருக்குறள் நடனம்-ஒருங்கிணைப்பு : கலைமாமணி நர்த்தகி நடராஜ்

https://www.youtube.com/watch?v=HHOhAqi5orc&t=739s


FETNA-2018 : மக்களிசை பாடல் நடனத்துடன், திருமதி. சுகந்தி கருப்பையா

https://www.youtube.com/watch?v=X_um2eFNAFw&t=139s


FETNA 2018: பேரவை மலர் வெளியீடு - கவிஞர் அறிவுமதி மற்றும் திரு.சுப.வீரப்பாண்டியன்

https://www.youtube.com/watch?v=-gbmL2ij41g&t=218s


FETNA 2018:மரபுக்கலை ஆடல் -பறையிசை

https://www.youtube.com/watch?v=28ZZrXUsK7Q


FETNA 2018: கவியரங்கம் -தலைமை: முனைவர்.ஞானசம்பந்தன்

https://www.youtube.com/watch?v=03QdplYDx1A&t=2s


FETNA-2018: பேரவை விழாவில் எ.கலியமூர்த்தி, IPS(Retd.) உரை

https://www.youtube.com/watch?v=THGux2xbB-s


FETNA 2018: பாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=pChUPhJBnoc


FETNA 2018: ஹார்வார்ட் தமிழ் இருக்கையின் நிறைவு விழா கொண்டாட்டம் (Harvard Tamil Chair)

https://www.youtube.com/watch?v=jurwh_9iOYs&feature=youtu.be

 

FETNA-2018: Kalaimamani Trotsky Marudu (கலைமாமணி ட்ராஸ்கி மருது)  ஓவிய பயிற்சி

https://www.youtube.com/watch?v=dyx2qMyojds


FETNA2018 -அமெரிக்கத் தமிழ் கல்விக் கழகம் (ATA) பேரவை மேடையில்

https://www.youtube.com/watch?v=TT1SH2AMcxI&t=30s

பாவலர் அறிவுமதி கவிதைக்கு கலைமாமணி நர்த்தகி நடராஜ் நடனம்
by Swathi   on 08 Jul 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.