LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

ஐந்தாம் திருமுறை-97

5.097.சித்தத்தொகை 
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம் 
2026 சிந்திப் பார்மனத் தான்சிவன் செஞ்சுடர்
அந்தி வான்நிறத் தானணி யார்மதி
முந்திச் சூடிய முக்கண்ணி னானடி
வந்திப் பாரவர் வானுல காள்வரே. 5.097.1
சிந்திப்பவர் மனத்து உறைபவனாகிய சிவனும், சிவந்த சுடர் உடையவனாய் அந்திவானத்து நிறம் பொருந்தியவனும், அழகு நிறைந்த பிறைமதியினை முந்துறச் சூடிக்கொண்ட முக்கண்ணினனுமாகிய பெருமான் திருவடிகளை வணங்குவார்கள் வானுலகை ஆள்வர்.
2027 அண்ட மாரிரு ளூடு கடந்தும்பர்
உண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர்
கண்டிங் காரறி வாரறி வாரெலாம்
வெண்டிங் கட்கண்ணி வேதிய னென்பரே. 5.097.2
அண்டங்களையெல்லாம் உள்ளடக்கிய செறிந்த இருள் நடுவே கடந்து அப்பால் ஓர் ஒள்ளிய சுடர் உண்டுபோலும்; அச்சுடரைக் கண்டு இங்கு ஆர் அறியவல்லவர்கள்? அறிபவரெல்லாம் அதனை வெள்ளிய பிறையினை முடிக்கண்ணியாகக்கொண்ட வேதியன் என்பர்.
2028 ஆதி யாயவ னாரு மிலாதவன்
போது சேர்புனை நீண்முடிப் புண்ணியன்
பாதிப் பெண்ணுரு வாகிப் பரஞ்சுடர்ச்
சோதி யுட்சோதி யாய்நின்ற சோதியே. 5.097.3
தன்னுடலிற்பாற் பெண்ணுருவமாகி மேலாய சுடரை உடைய சோதியுட்சோதியாய் நின்ற சோதியாகிய பெருமான் அனைத்தும் ஆதி ஆகியவன் தனக்குப் பற்றாவார் ஆரும் இல்லாதவன் மலர்கள் சேர்த்துப் புனைந்த நீண்டமுடியை உடைய புண்ணியன்.
2029 இட்ட திட்டதோ ரேறுகந் தேறியூர் 
பட்டி துட்டங்க னாய்ப்பலி தேர்வதோர் 
கட்ட வாழ்க்கைய னாகிலும் வானவர் 
அட்ட மூர்த்தி யருளென் றடைவரே. 5.097.4

2030 ஈறில் கூறைய னாகி எரிந்தவெண் 
ணீறு பூசி நிலாமதி சூடிலும் 
வீறி லாதன செய்யினும் விண்ணவர் 
ஊற லாயரு ளாயென் றுரைப்பரே. 5.097.5
முடிவற்ற திக்குகளையே ஆடையாக உடுப்பவனாகி எரிந்துவெந்த திருநீறு பூசி நிலவினை உடைய பிறையைச் சூடினும், தன் பெருமைக்கு உகவாதவற்றைச் செய்யினும், தேவர்கள் ` இடையூறற்றவனே ! அருள்வாயாக ` என்று இரந்துரைப்பர். 
2031 உச்சி வெண்மதி சூடிலும் ஊனறாப் 
பச்சை வெண்டலை யேந்திப் பலஇலம் 
பிச்சை யேபுகு மாகிலும் வானவர் 
அச்சந் தீர்த்தரு ளாயென் றடைவரே. 5.097.6
உச்சிக்கண் வெள்ளியமதி சூடினும், தசை நீங்காத பச்சை வெண்தலையோட்டைக் கையில் ஏந்திப் பல இல்லங்களுக்குப் பிச்சை ஏற்கப் புகுந்தாலும், தேவர்கள் ` எம் அச்சம் தீர்த்து அருள்வாயாக ` என்று அடைவர். 
2032 ஊரிலாயென்றொன் றாக உரைப்பதோர்
பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகா
காரு லாங்கண்ட னேயுன் கழலடி
சேர்வி லார்கட்டுகுத் தீயவை தீயவை. 5.097.7
தனக்கென்று ஓர் ஊரில்லாதவனே ஓன்றாக உரைக்கும் பேரில்லாதவனே பிறைசூடிய பிஞ்ஞகனே கருமை பொருந்திய திருக்கழுத்தினனே உன் கழலணிந்த திருவடியைச் சேர்தல் இல்லாதவர்களுக்குத் தீயவை என்றும் சேரும்.
2033 எந்தை யேயெம் பிரானே யெனவுள்கிச்
சிந்திப் பாரவர் தீவினை தீருமால்
வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
அந்த மாவளப் பாரடைந் தார்களே. 5.097.8
எந்தையே எம்பெருமானே என உள்ளத்தால் நினைந்து சிந்திப்பார்களின் தீவினை தீரும் வெந்த திருநீறு பூசிய மெய்யை உடைய வேதியனை அடைந்தவர்கள் அந்தமாக அளக்குந் தம்மை உடையார்.
2034 ஏன வெண்மருப் போடென்பு பூண்டெழில்
ஆனை யீருரி போர்த்தன லாடிலும்
தான வண்ணத்த னாகிலுந் தன்னையே
வான நாடர் வணங்குவர் வைகலே. 5.097.9
பன்றியின் வெள்ளிய கொம்பினோடு எலும்பு அணிந்த அழகுமிக்க ஆனையினை ஈர்ந்து தோல் போத்துத் தீயுடன்ஆடினாலும், தான் அவ்வியல்புடையனாயினும் தேவர்கள் நாள் தோறும் தன்னையே வணங்குவர்.
2035 ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம்
மெய்யன் மேதகு வெண்பொடி பூசிய
மைகொள் கண்டத்தன் மான்மறிக் கையினான்
பைகொள் பாம்பரை யார்த்த பரமனே. 5.097.10
படம் கொண்ட பாம்பினை இடுப்பில் கட்டிய இறைவன் தலைவன் அந்தணன் ( அழகும் குளிர்ச்சியும் உடையவன்) ஆண்பெண் வடிவமுடைய திருமேனியினன் மேன்மை மிகுந்த வெண் திருநீரு பூசிய கருமை கொண்ட திருக்கழுத்தினன் மான்குட்டி உடைய கையினன்.
2036 ஒருவ னாகிநின் றானிவ வுலகெலாம்
ஒருவ ராகிநின் றார்கட் கறிகிலான்
அருவ ராஅரை ஆர்த்தவ னார்கழல்
பரவு வாரவர் பாவம் பறையுமே. 5.097.11
இவ்வுலகமெல்லாம் தான் ஒருவனே ஆகி நின்றவனும், திருமாலும் பிரனுமாகிய இருவராகி நின்றவர் அறியஇயலாதவனும், அரிய பாம்பினை இடுப்பில் கட்டியவனும் ஆகிய இறைவனது நிறைந் கழலணிந்த திருவடிகளை வணங்குவாரின் பாவங்கள் கெடும்.
2037 ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும்
நாத னேயரு ளாயென்று நாடொறும்
காதல் செய்து கருதப் படுமவர்
பாத மேத்தப் பறையும் நம் பாவமே. 5.097.12
கடல்வண்ணம் உடையவனாகிய திருமாலும் ஒள்ளிய தாமரைமலர் மேலானாகிய பிரமனும், " தலைவனே அருள்வாய்" என்று நாள்தோறும் விருப்பம் புரிந்து எண்ணப் படுவாராகிய இறைவன் பாதங்களை ஏத்த நம்பாவங்கள் கெடும்.
2038 ஒளவ தன்மை யவரவ ராக்கையான்
வெவ்வ தன்மைய னென்ப தொழிமினோ
மொளவர் நீண்மலர் மேலுறை வானொடு
பவ்வ வண்ணனு மாய்ப்பணி வார்களே. 5.097.13
அவரவர் உடம்பினால் அடைவதற்கு வெவ்விய தன்மை உடையவன் என்ற கருத்தை ஒழிப்பீராக. மலர்தல் உடைய நீண்ட மலர்மேல் உறைவானாகிய பிரமனோடு கடல்வண்ணனாகிய திருமாலுமாய்ப் பணிவார்கள்.
2039 அக்க மாமையும் பூண்டன லேந்தியில்
புக்குப் பல்பலி தேரும் புராணனை
நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ
தொக்க வானவ ராற்றொழு வானையே. 5.097.14
அக்கமணிகளும் ஆமையும் அணிந்து தீயை ஏந்தி இல்லங்கள் தோறம் புகுந்து பல பலிதேறும் பழமை உடையவனும், தொகத்த தேவர்களால் தொழப்படுவானுமாகிய இறைவனை விரும்பி நீங்கள் நரகத்துப்போகாமல் நற்பேறு அடைவீராக.
2040 கங்கை தங்கிய செஞ்சடை மேலிளந்
திங்கள் சூடிய தீநிற வண்ணனார்
இங்க ணாரெழில் வானம் வணங்கவே
அங்க ணாற்கது வாலவன் தன்மையே. 5.097.15
அழகிய கண்ணராகிய கங்கை தங்கிய சிவந்த சடையின்மேல் இளம் பிறையினைச் சூடிய தழல்வண்ணர் இமைக்காத கண்ணை உடைய எழில் உடைய வானகத்துள்ளோர் வணங்க உள்ளார் அதுவே அவர் தன்மை.
2041 ஙகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே
நுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே. 5.097.16
நல்ல நெஞ்சே வெல்லும் கொடி உடையானோடு நுகர்தற்கு நீ உன்னைக் கொண்டு உய்யப்போதலுற்றால், மீனாகிய வெல்லும் கொடி உடைய மன்மதனைச் சினந்தவனாகிய பெருமானின் குற்றமற்ற சேவடியே தஞ்சப்பொருளாகும்.
2042 சரண மாம்படி யார்பிற ரியாவரோ
கரணந் தீர்த்துயிர் கையி லிகர்ந்தபின்
மரண மெய்திய பின்னவை நீக்குவான்
அரண மூஎணில் எணிதவ னல்லனே. 5.097.17
புகலடையத்தக்கவர் பிறர் யாவர்? செயலற்று உயிர் இறக்கம்போது நம் வினைக்குற்றங்களைத் தீர்த்து அருள்பவன் வேறு யாவன்? அரணமைந்த மூன்று கோட்டைகளையும் அழித்தவன் அல்லனோ?
2043 ஞமனென் பான்நர கர்க்க நமக்கெலாம்
சிவனென் பான்செழு மான்மறிக் கையினான்
கவனஞ் செய்யுங் கனவிடை யூர்தியான்
தமரென் றாலுங் கெடுந்தடு மாற்றமே. 5.097.18
நரகர்க்கெல்லாம் ஞமனாகியும், நமக்கெல்லாம் சிவன் எனப்படுவானாகியும் உள்ளவனும், மான்குட்டி உடைய கையினனும், விரைந்து செல்லும் பெருமைமிக்க இடப ஊர்தி உடையவனம் ஆகிய பெருமானின் தமர் என்றாலும் தடுமாற்றம் கெடும்.
2044 இடப மேறியு மில்பலி யேற்பவர்
அடவி காதலித் தாடுவ ரைந்தலைப்
படவம் பாம்பரை யார்த் பரமனைக்
கடவி ராய்ச்சென்று கைதொழு துய்ம்மினே. 5.097.19
இடபத்தின்மீது ஏறியும், இல்லங்கள் தோறம் பலி ஏற்பவரும், சுடுகாட்டினை விரும்பி ஆடுபவரும், ஐந்தலை உடைய படர்ந்த பாம்பினை அரைக்கண் ஆர்த்தவரும் ஆகிய பரமனை வணங்கும் கடப்பாடுடையீராய்ச் சென்று கைதொழுது உய்வீராக.
2045 இணர்ந்து கொன்றைபொன் தாது சொரிந்திடும்
புணர்ந்த வாளர வம்மதி யோடுடன்
அணைந்த அஞ்சடை யானவன் பாதமே
உணர்ந்த வுள்ளத் தவருணர் வார்களே. 5.097.20
கொத்தாகிய கொன்றை பொன் போன்ற மகரந்தத் துறினைச் சொரிந்திடும் இயல்பினதும், பொருந்திய வாள்போன்றபாம்பும் மதியினுடன் அணைந்ததுமாகிய அழகிய சடையுடைய பெருமான் திருவடிகளை உணர்ந்த உள்ளத்தவரே உணர்வர்.
2046 தருமந் தான்தவந் தான்தவத் தால்வரும்
கருமந் தான்கரு மான்மறிக் கையினான்
அருமந் தன்ன அதிர்கழல் சேர்மினோ
சிரமஞ் சேரழல் தீவினை யாளரே. 5.097.21
தொல்லைகள் சேர்ந்த அழலும் தீவினையாளர்களே தானே தருமமாகவும், தானே தவமாகவும், தானே தவத்தால்வரும் செயலாகவும் உள்ள வலிய மான்குட்டியைக் கையில் உடைய பெருமானது, அரிய மருந்து போன்ற (அமிர்தம்) ஒலிக்கும் கழலணிந்த திருவடிகைச் சேர்வீராக.
2047 நமச்சி வாயவென் பாருள ரேலவர்
தமச்ச நீங்கத் தவநெறி சார்தலால்
அமைத்துக் கொண்ட தோர் வாழ்க்கைய னாகிலும்
இமைத்து நிற்பது சால அரியதே. 5.097.22
நமசிவாய என்று சொல்வார் உளராயின் அவர்தம் அச்சங்கள் நீங்கத் தவநெறியைச் சார்தலால் தானே அமைத்துக் கொண்ட ஒப்பற்ற வாழ்க்கையை உடையவனாகிலும் இமைத்து நிற்பது மிகவும் அரியதாகும்.
2048 பற்பல் காலம் பயிற்றிப் பரமனைச்
சொற்பல் காலநின் றேத்துமின் தொல்வினை
வெற்பில் தோன்றிய வெங்கதில் கண்டவப்
புற்ப னிக்கெடு மாறது போலுமே. 5.097.23
பரமனைப் பலப்பல காலங்கள் பயிற்றிச் சொற்களால் பல காலம் நின்று ஏத்துவீராக. உம் பழைய வினைகள் உதயகிரியில் தோன்றிய சூரியனைக் கண்ட அழகிய புல் நுனியில் உள்ள பனித்துளிகள் கெடுமாறு கெடும்.
2049 மணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான்
கணிசெய் வேடத்த ராயவர் காப்பினால்
பணிகள் தாஞ்செய வல்லவர் யாவர்தம்
பிணிசெ யாக்கையை நீக்குவர் பேயரே. 5.097.24
கரியமணிபோலும் கண்டத்தை உடையவரும், மான்குட்டியை உடைய கையினரும், கருதிச் செய்கின்ற வேடம் உடையவராகிய அவர் காத்தருள்வதால் பணிகளைச் செய்ய வல்லவர்களே நல்லோர் அவ்வாறு புரியது நோய் செய்யும் உடம்பை வீணே கழிப்பவர் பேயர்.
2050 இயக்கர் கின்னர ரிந்திரன் தானவர்
நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான்
மயக்க மெய்தவன் மாலெரி யாயினான்
வியக்குந் தன்மையி னானெம் விகிர்தனே. 5.097.25
வியக்கும் தன்மை உடையவனாகிய எம் மேலோன், இயக்கர், கின்னரர், இந்திரன், தானவர் முதலியோர் விரும்ப நின்றவனும், பிரமனும் திருமாலும் மயக்கம் எய்த வன்மை உடைய பேரெரிவடிவமாயினான்.
2051 அரவ மார்த்தன லாடிய அண்ணலைப்
பரவு வாரவர் பாவம் பறைதற்குக்
குரவை கோத்தவ னுங்குளிர் போதின்மேல்
கரவில் நான்முக னுங்கரி யல்லரே. 5.097.26
பாம்பினைக்கட்டி அனலோடு ஆடிய அண்ணலை வணங்குவோர் பாவம் கெடுதற்குக் குரவைக் கூத்து ஆடியவனாகிய திருமாலும், குளிர்தாமரையின் மேல் கரத்தலில்லாத பிரமனும் சான்றாவார் அல்லரோ?
2052 அழலங் கையினன் அந்தரத் தோங்கிநின்
றுழலும் மூவெயி லொள்ளழ லூட்டினான்
தழலுந் தாமரை யானொடு தாவினான்
கழலுஞ் சென்னியுங் காண்டற் கரியனே. 5.097.27
இறைவன் அழலை அழகிய கையிற்கொண்டவனும், வானில் ஓங்கி நின்று திரியும் மூன்று மதில்களையும் ஒள்ளழல்ஊட்டியவனும் எரியென மலரும் தாமரையிலுள்ள பிரமனோடு திரமாலும் பறந்தும் தாவியும் தன் கழலடிகளையும் சென்னியையும் காண்டறக்ரியவனுமாவான்.
2053 இளமை கைவிட் டகறலு மூப்பினார்
வளமை போய்ப்பிணி யோடு வருதலால்
உளமெ லாமொளி யாய்மதி யாயினான்
கிளமை யேகிளை யாக நினைப்பனே. 5.097.28
இளமை கைவிட்டு நீங்குதலும் உடல் வளமையெல்லாம் கெட்டுப் பிணியோடு மூப்பு வருதலால் , உள்ளமெல்லாம் ஒளியாகி மதியாகிய பெருமானின் உரிமையையே உறவாகயான் நினைப்பேன்.
2054 தன்னிற் றன்னை யறியுந் தலைமகன்
தன்னிற் றன்னை யறியில் தலைப்படும்
தன்னிற் றன்னை யறிவில னாயிடில்
தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே. 5.097.29
தன்னில் தன்னை அறியும் தலைமகனாகிய இறைவன் தன்னில் ஒருவன் தன்னையறிந்தால் தலைப்படுவான்.தன்னில் தன்னை அறியும் அறிவிலாகில் தன்னில் தன்னையும் சார்தற்கு அரிய இயல்பினன் ஆவன்.
2055 இலங்கை மன்னனை யீரைந்து பத்துமன்
றலங்க லோடுட னேசெல வூன்றிய
நலங்கொள் சேவடி நாடொறும் நாடொறும்
வலங்கொண் டேத்துவார் வானுல காள்வரே. 5.097.30
இராவணனைப் பத்துத் தலைகளும் அன்று அணிந்திருந்த மாலைகளோடு உடனே கெட ஊன்றிய நலம் உடைய பெருமான் சேவடிகளை நாள்தோறும் வலம்கொண்டு வழிபடுவார் வானுலகினை ஆள்வர்.

by C.Malarvizhi   on 20 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.