LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF

சென்னை மண்டலத்தில் முதல் விவசாய நிறுவனத்தை உருவாக்கிய சாப்ட்வேர் இன்ஜினியர்

விவசாயத்தின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக நச்சலூரைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் கரூர், நச்சலூரில் விவசாயிகள் பங்களிப்பில் நிறுவனம் ஒன்று துவங்கியுள்ளார். 

 

தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக விவசாய நிலங்கள் அனைத்தும் விலை நிலங்களாக மாறிவருகின்றன. விவசாயத்தை முழுமூச்சாக நம்பியிருக்கும் சில விவசாயிகள் மட்டும் குறைந்த நீரை வைத்து பயிர்களை காப்பாற்ற போராடி வருகின்றனர். அப்படி பாடுபட்டு வளர்த்த பயிர்கள் இடைத்தரகர்களின் ஈடுபாட்டால் குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் வாங்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. மேலும் அரசின் சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் இயங்கி வந்தாலும், இடைத்தரகர்கள் ஆதிக்கம் குறைந்தபாடில்லை. 

 

கரூர் மாவட்டம், நச்சலூரைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் கரிகாலன். இவர் கம்ப்யூட்டர் பிரிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவிட்டு கடந்த 15 ஆண்டுகாலமாக சென்னை, பெங்களூர், ஹைராபாத் ஆகிய நகரங்களில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றினார்.இவர் விவசாயத்தின் மேல் உள்ள, "காதல்' காரணமாக, வேலையை உதறிவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு திருப்பினார். அங்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி போன்ற பல்வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, கரும்பு நாற்கால் உருவாகியுள்ளார். இருப்பினும் உர தட்டுப்பாடு, உற்பத்தி செய்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காது ஆகியவை கண்டு கவலையடைந்தார்.இதையடுத்து அவருக்கு, விவசாயிகள் பங்களிப்புடன் விவசாய நிறுவனம் துவங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

 

நச்சலூர், கீழப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுடன் ஆலோனை நடத்தினார். இதன் விளைவாக முதலில் முப்பது விவசாயிகள், தலா, 25 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஒரு நிறுவனம் துவங்கினர். பின், 2012 ஜூன், 13ம் தேதி, நச்சலூர் ஃபார்மர்ஸ் புரோடியூசர் கம்பெனி லிட் என்ற பெயரில் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. இப்போது, 120 விவசாயிகள் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் பங்குத்தொகை செலுத்தியதில் மொத்தம் 30 லட்சம் ரூபாய் முதலீடு குவித்துள்ளது.

 

விவசாய நிறுவனம் பற்றி அதன் நிர்வாக இயக்குனர் கரிகாலன் கூறியதாவது : 

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் அதன் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சென்று சேர வேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் நோக்கம். இது போன்ற விவசாயி நிறுவனங்கள்  நம் நாட்டில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. நமது மாநிலத்தில் நிறுவனங்களை பதிவு செய்ய, சென்னை, கோவை மண்டலங்களில் அலுவலகங்கள் உள்ளது. ஏற்கனவே கோவை மண்டலத்தில் விவசாயிகள் சார்பில், இரண்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளது. ஆனால், சென்னை மண்டலத்தில், எங்கள் நிறுவனம் தான் முதல் விவசாய கம்பெனியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விவசாயிகளுக்கு நல்ல தரமான உரம், பூச்சி கொல்லி மருத்து ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமே நேரடியாக கொள்முதல் செய்து குறைந்த விலையில் விவசாயிகளுக்கு கொடுத்து வருகிறோம். தற்போது விவசாயிகள் தரமான விதைகள் கிடைப்பதில் பல சிக்கல் உள்ளது. தரமான விதையை விதைத்தால் மட்டுமே, நல்ல விளைச்சலை விவசாயிகள் செய்ய முடியும். இதன் விளைவாக, நெல் விதை உற்பத்தி கூடம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் அதிக விளைச்சல் தரும் நெல் விதைகளை உற்பத்தி செய்ய உள்ளோம். பின் மாடர்ன் ரைஸ் மில், எள்ளிலிருந்து எண்ணெய் உற்பத்தி போன்ற விவசாய மதிப்பு கூட்டு பொருட்களை உற்பத்தி செய்து, நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்ய உள்ளோம் என அவர் தெரிவித்தார். 

by Swathi   on 25 Jan 2014  8 Comments
Tags: Karur Software Engineer   Software Engineer   Chennai Zone   Agriculture Company   சாஃப்ட்வேர் இன்ஜினியர்   விவசாய நிறுவனம்     
 தொடர்புடையவை-Related Articles
சென்னை மண்டலத்தில் முதல் விவசாய நிறுவனத்தை உருவாக்கிய சாப்ட்வேர் இன்ஜினியர் சென்னை மண்டலத்தில் முதல் விவசாய நிறுவனத்தை உருவாக்கிய சாப்ட்வேர் இன்ஜினியர்
அமெரிக்காவில் கணிப்பொறி வல்லுனர்கள் கையில் எடுத்திருக்கும் தமிழனின் பறை இசை! அமெரிக்காவில் கணிப்பொறி வல்லுனர்கள் கையில் எடுத்திருக்கும் தமிழனின் பறை இசை!
கருத்துகள்
29-Nov-2018 09:38:58 hg said : Report Abuse
jhgj
 
01-Feb-2018 08:34:12 K.வரககிரி said : Report Abuse
நானும் விவசாய்த்தான் தற்போது கைகுத்தல் அரிசி விற்பனைசெகின்றேன் சிறுதானியமும் அரவு மற்றும் விற்பனைசெகின்றன் -தானிய பிஸ்கெட் .தானிய முருககு .உடலுக்கு சத்தூட்டரும் தானிய சாது மாவு உள்ளிட்ட பாலா வகையான பொருள்களை விற்பனைசெகின்றான் தங்களின் முகவரி தேவை
 
29-Jan-2017 04:24:29 kannan said : Report Abuse
வெரி குட் நானும் பங்பெறவேண்டு தங்கள் முகவரி வேண்டும்
 
27-Jan-2017 21:19:23 ravanan said : Report Abuse
congratulation pls send your company address for me
 
25-Dec-2016 10:20:01 vimal said : Report Abuse
Vazhthugal
 
31-Oct-2016 09:44:59 மணிகண்டன் said : Report Abuse
நல்ல தொடக்கம்! வாழ்த்துக்கள்!
 
25-Nov-2015 00:43:29 g harikrishnan said : Report Abuse
please send your copaney அட்ரஸ் செல் no
 
08-Oct-2015 03:12:17 karthick said : Report Abuse
நீங்கள் செய்யும் இந்த தொண்டிற்கு மிக்க மகிழ்ச்சி . எனக்கு உங்களுட முகவரி மற்றும் மொபைல் நம்பர் தேவை .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.