இரண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் மெடிக்ளைம் பாலிசியில் கிளைம் செய்ய முடியுமா...
karthik - 10 Oct 2013 03:32 AM
எனது கணவர் மெடிக்ளைம் பாலிசி ஒன்றை வைத்துள்ளார். கடந்த ஒருமாதத்திற்கு முன்பு அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அந்தச் சமயத்தில் அவர் ஒரு மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார். இடையில் மூன்று நாட்கள் வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் க்ளைம் பெற முடியுமா?
ganesh Said : 10 Oct 2013 05:10 AM
மெடிக்ளைம் பாலிசியை பொறுத்தவரை, உங்கள் கணவர் எத்தனை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தார் என்பது முக்கியமில்லை. 24 மணி நேரத்திற்கு மேல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்தாலே நீங்கள் க்ளைம் பெற முடியும். எனவே, இரண்டு மருத்துவமனையிலும் சிகிச்சை எடுத்ததற்கான விவரங்கள், ரசீது, மருத்துவர் அறிக்கை ஆகியவற்றை க்ளைம் படிவத்துடன் இணைத்து கொடுத்து நீங்கள் கிளைம் பெறலாம்.