Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  பொது தலைப்புகள் (General Topics)  |  சட்டம் (Law)
பூர்வீகச் சொத்து
  malarvaanan - 18 Dec 2012 04:43 AM

பூர்வீகச் சொத்தை எனது திருமணமாகிவிட்ட மகள்கள் ஒப்புதலுடன், மகனுக்கு எழுதி கொடுத்து விட்டேன்.அந்த பத்திரத்தில் அனைவருமே கையெழுத்து போட்டுள்ளோம்.இந்த சொத்தின் மீது பிற்காலத்தில் வேறு வாரிசுகள் யாரும் உரிமை கொண்டாட முடியுமா?

    Praveen Said : 03 May 2019 07:02 AM
என் பாட்டின் பெயரில் சொத்துக்கள் உள்ளது 4ஆண்கள் மற்றும் 3பெண்கள் உள்ளனர் அதில் ஒரு ஆண் இறந்து விட்டார் இப்போது ஆண்கள் மட்டும் அந்த சொத்தை வைத்து கொல்வதாக கூறுகின்றனர் அனால் ரெண்டு பெண்களுக்கு 1988திருமணம் முடிந்தது ஒரு பொண்ணுக்கு2005திருமணம் முடிந்தது இப்போது சொத்தில் பங்கு உண்ட?
    G PARAMESWARAN Said : 01 Jun 2018 07:04 AM
Poorveeka sothu Patiri thagaval perum urimai sattam
    வே.உமாபதி Said : 02 Mar 2018 05:02 AM
என் தாத்தா சுயசம்பாதியத்தில் இரண்டு வீடு எழு ஆயிரம் சதுர அடி நிலங்களை என் அப்பா மீது settlement செய்துள்ளார்.என் அப்பாவிற்க்கு இரண்டு மனைவிகல் அதில் முதல் மனைவின் மகன் நான் எனக்கு ஒரு தஙகை என் அம்மா இறந்துவிட்டார் இரண்டாம
    கவிதா Said : 11 Oct 2017 10:09 AM
என் கணவருடன் கூட பிறந்தவர்கள் நான்கு பெண்கள் . அவர்களுக்கு திருமணத்தின் போடு சீர்வரிசை மற்றும் நகைகள் மற்றும் தாய் மாமன் சீர்வரிசை அனைத்தும் செய்துலும் அவர்களுக்கு சொத்தில் பங்கு வேண்டும் என்று கேக்கிரகர்கள் ப்ளீஸ் ரிப்ளை
    அரசன் Said : 02 Nov 2016 07:42 AM
இந்து மதத்தைச் சேர்ந்த என்னுடைய தாய்க்கு அவருடைய தந்தை வாங்கிக் கொடுத்த 2 வீடுகள் உள்ளன.வெவ்வேறு தெருக்களில் அமைந்துள்ளன. இந்த 2 வீடுகளும் என்னுடைய அம்மாவின் பெயரிலேயே பட்டாவாகியுள்ளது. எங்களின் தந்தை உயிரோடு இருக்கிறார்.எனக்கு ஒரு அக்கா, அண்ணன் மற்றும் தங்கை. அக்கா 1991 ல் திருமணமானவர்.தற்போது மன நிலை பாதிக்கப்பட்டவராக உள்ளார்.தங்கை பதின்வயதிலேயே இறந்துவிட்டார்.சொத்தின் மீதான என் தாயின் உரிமைகள், எல்லைகள் என்னென்ன? அவருடைய விருப்பம் போல் பாகப்பிரிவினை செய்யலாமா? பெண்ணுக்கு பங்கு கொடுப்பது கட்டாயமா? சட்ட வழிகாட்டுதலின்படியான பாகப்பிரிவினை எப்படி?
    A.S.துளசி சா Said : 15 Aug 2016 08:30 AM
இந்து பெண்களுக்கு கிடைக்கக்கூடிய சொத்தில் பங்கு! சட்ட புத்தகத்தில் என்ன சொல்கின்றது என்றால்? !!! ??? 25.3.1989-ம் ஆண்டில் இந்து திருமண சட்டத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின் படி திருமணமாகாத பெண்களுக்கு பூர்வீக சொத்தில் பங்கு உண்டு.ஆனால் அதை பெறுவதற்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு.(1)-25.3.1989-ம் தேதி அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்திருக்க கூடாது.(2)- அவருடைய தந்தை அந்நாளில் உயிரோடு இருந்திருக்க வேண்டும்.மேற்கண்ட ஷரத்துகள் பூர்த்தியாகவில்லைஎன்றால் இந்து வாரிசுரிமை சட்டத்தில் சேர்க்கப்பட்டபிரிவு 29A-ன் படி பெண்ணுக்கு சொத்தில் பங்கு கிடைக்காது.அதேபோல் இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி ஆண்களை போலவே பெண்களுக்கும் கூட்டு குடும்ப சொத்தில் சரி பங்கு உரிமையை 20.12.2004-ம் தேதி முதல் அளிக்கிறது.ஆனால் 20.12.2004-க்கு முன்பாக உயில் மூலமாக அல்லது பாகப்பிரிவினை மூலமாக ஒரு ஏற்கனவே வேறு ஓருவருக்கு வழங்கப்பட்டிருந்தால் பெண்ணுக்கு சொத்து கிடையாது.தமிழ்நாடு சட்ட திருத்தம் மற்றும் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம் ஆகியவற்றின்படி பூர்வீக சொத்தில் ஒரு பெண் பங்கு பெறுவதற்க்கு அந்த சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட நாளில் அந்த பெண்ணின் தந்தை உயிரோடு இருக்க வேண்டும். வழக்கறிஞர் திரு. Dhanesh Balamurugan
    A.S. துளசி சா Said : 15 Aug 2016 08:22 AM
இந்து வாரிசுரிமை சட்டத்தில் திருத்தம் தேவை இன்று. (1)சொத்தின் மதிப்பு உயர்ந்து இருப்பதன் காரணமாகவும். (2)வழக்குகள் தேக்க நிலைக் காரணமாகவும். (3)வாரிசுகள் விரைவில் பயன் அடையும் நோக்கத்திற்காகவும். (4)குடும்பத்தில், சொந்தத்தில் உறவுகள் மேன்பட திருத்தம் தேவை. A.S.Thulasi Sah.
    ஸ்ரீதர் சி Said : 17 Jun 2015 11:37 PM
ஐயா எங்கள் குடும்பத்தில் மொத்தம் நாங்கு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் உள்ளன. ஐயா எனது தந்தை அரசு வேலையில் இருந்தபோது அவருக்கு உடல்நலம் சரியின்றி இறந்துவிட்டார் எனவே எனது தந்தையின் அரசு வேலை எனது அண்ணனுக்கு கிடைத்தது.இப்போது எனது அண்ணன் பணிக்காலம் முடிவடைய ஒரு ஆண்டு மட்டுமே உள்ளது.எனவே எனது அண்ணன் ஓய்வு பெற்றால் அவரின் ஓய்வுக்கான பணம் யாருக்கெல்லாம் சொந்தம் ஐயா.
    ராஜா Said : 09 Mar 2015 06:22 AM
என்னுடைய பாட்டியின்(தாயின் அன்னை) பெயரில் இருந்த வீட்டை என் தாய் தனது பெயரில் எழுதி வாங்கியிருக்கிறார். (இன்னும் படடா போடவில்லை, பிறகு எனது மூத்த சகோதரிக்குதான் அந்த வீடு என்கிறார். என் சகோதரி வசதியானவர், நான் இரண்டாவது, மூன்றாவதாக என் தம்பி., எங்கள் இருவருக்கும் வீட்டின் மதிப்பில் பங்கு எந்த வகையில் கிடைக்க வாய்ப்புள்ளதா?
    ராஜி Said : 21 Jan 2015 03:28 AM
எங்கள் அப்பா சொத்தில் எங்களுக்கு பங்கு உள்ளதா? அது பூர்வீக சொத்து. அக்கா,அண்ணன் மற்றும் நான் ஆகிய மூவர் என் அக்கா திருமணம் 1970ல் முடிந்தது,எனக்கு 1988ல்,அண்ணன் 1979ல் திருமணம் முடிந்தது. ஆனால் அண்ணன் 2001ல் இறந்துவிட்டார். அதன் பிறகு எங்கள் அண்ணி எங்களுக்கு சொத்தில் உரிமையில்லை என்று சொல்கிறார். இது சரியா? தவறா? பதில் கூறவும்
    Pages : 1 > 2
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

மரபு கவிதை எழுதும் முறைகள்
வீட்டு கட்டிடம் பிளான் அப்ருவல்
காபி அடிகடி குடிப்பதை நிறுத்த என்ன வழி?
எண்ணெய் குளியல்
கபாலி படம் எப்படி இருக்கு?
தற்போதைய சூழலில் பனியன் தொழிலில் முதலீடு செய்யலாமா?
ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?
நாய் கடித்தால்
வீீடு கட்ட அனுமதி தேவையா
பிரிக்கப்பட்ட சொத்து பிரச்சனை
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?