வெளிநாட்டில் இருந்து கொண்டே இந்தியாவில் குடும்ப சொத்தை வாங்க முடியுமா ?
sandhiya - 08 May 2013 06:41 AM
என் அண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் அங்கு இருக்கும்போது குடும்பச் சொத்தை அப்பாவிடமிருந்து வாங்க வழி இருக்கிறதா?
anitha Said : 11 May 2013 04:59 AM
உங்கள் தந்தை சுயசம்பாத்தியத்தில் சம்பாதித்த சொத்தாக இருந்தால் அவருடைய விருப்பத்தின்பேரில் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதில் மற்றவர்கள் உரிமை கோரமுடியாது. உங்கள் அண்ணன் வெளிநாட்டில் இருந்தாலும் அந்தச் சொத்தை உங்களுக்குக் கொடுப்பதற்கு மற்றவர்கள் யாரும் எதிர்ப்பும் தெரிவிக்கமுடியாது, அதில் யாரும் தலையிடவும் முடியாது.குடும்பச் சொத்தாக இருக்கும்பட்சத்தில் சட்டப்பூர்வமான வாரிசுதாரர்கள் அனைவருக்கும் அதில் உரிமை உண்டு.