தல படம் பார்த்துக்கிட்டு இருக்கிறவன்டா: வாலு சிம்புவின் பஞ்ச்
Haider - 27 Feb 2014 05:17 AM
வாலு படத்தில் சிம்பு தனக்கு மிகவும் பிடித்த நடிகரான அஜீத் குமார் பற்றி புகழ்ந்து வசனம் பேசியுள்ளாராம். சிம்புவின் வாலு படம் அஜீத் குமாரின் பிறந்தநாளான மே 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அஜீத், விஜய் வாலு படத்தில் ஒரு காட்சியில் சிம்பு அஜீத் மாஸ்க் போட்டு பைக் ஓட்ட அவர் பின்னால் சந்தானம் விஜய் மாஸ்க் போட்டு அமர்ந்து செல்லும் காட்சி அண்மையில் தான் சென்னையில் படமாக்கப்பட்டது. ஃபைட் வருமா? வாலு படத்தில் ஒரு கதாபாத்திரம் சிம்புவை பார்த்து டேய் உனக்கெல்லாம் ஃபைட் வருமா என்று கேட்பாராம். அதற்கு சிம்பு \'தல\' படம் பார்த்துட்டு இருக்கிறவன்டா என்று பதில் அளிப்பாராம். ஷார்ப் படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தின் பெயர் ஷார்ப். அவர் படத்தில் அஜீத் பற்றி பல வசனங்கள் பேசி நடித்துள்ளாராம்.