LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

நண்பர்கள் தினம் ....

உச்சி பிளக்கும்

வெயில் நேரத்தில்

எங்கிருந்தோ வீசுகிற

தென்றல் போல ...


உன் நினைவுகள்

அவ்வப்போது என்னை

தழுவிப் போவதுண்டு ...


இயல்பு வாழ்க்கையில்

நான் வியர்த்துப்

போகிற போது ...


எனக்கு அவ்வப்போது

அவை

விசிறி விடுவதுண்டு ....


மனிதர்களுக்குள்

மனிதம்

தேடும்போது ...


உன் முகம் மட்டுமே

முதன்மையாய்

ஞாபகம் வருவதுண்டு ...


விளையாட்டாய்

வேடிக்கையாய்

கேளிக்கையாய்

பேசித்திரிந்த

வயதுகளில் ....


எனை மதித்து

உன் நட்பின் அழுத்தம்

மட்டுமே

இப்போது எனக்கு

தலை துவட்டுவதுண்டு ...


பயண அவசரத்தில்

யாரும் என்னை

மிதிக்கிற போது ...


மீண்டும் எனை

மேலெழுப்பிவிட

உன் நட்புக்கரம்

கிடைக்காதா ...


என் கண்களில்

நீர் முட்டுவதுண்டு ...


இந்த உலகம்

வேறு மாதிரி ...


யாரையும்

வெகு நாட்களுக்கு

ஒன்றாகவே பயணம் செய்ய

அனுமதிப்பதில்லை அது ...


தனித்தனியே

பாதை போட்டு

கையோடும் காலோடும்

விலங்கு மாட்டி

பிணைக்கைதியாய்

வாழ்க்கையோடு பினைப்பதில்

அலாதி ஆசை அதற்கு ...


நண்பர்கள் தினம்

என் அகராதியில்அறிமுகமில்லாத போது

என் கதவு தட்டியது

நீ அனுப்பிய

அந்தக் கடிதம் மட்டும்தான் ....


ஒல்லியான

என் உடல்வாகுக்கு

பலம் சொன்னதெல்லாம்

உன் நட்பு மட்டும்தான் ...


எனக்குகுள்அசாத்திய தைரியம்

தந்ததெல்லாம்

உன் ஸ்பரிசம் மட்டும்தான் ...


இப்போது விடு ...


இளமை

இருக்கிறது ...


இரத்தம்

இருக்கிறது ...


ஓடி ஆடி

நரை விழுந்து

கன்னம் குழிவிழுந்து

அடையாளம் தெரியாது

முதுமை வந்து

நாம் முதுகேறுகிற போது

சொல்லியனுப்பு ...


எல்லோரோடும்

பேச முடியாதெல்லாம்

உன்னோடு

பேசவேண்டியிருக்கிறது ..


இன்னும் முழுமையாய்

வாழ்க்கை

வழவேண்டியிருக்கிறது ....


இந்தக் காற்றும்

அந்த மண்ணும்

நிதர்சனம்

நாம் நட்பைபோல .......

-      குகன்

by Guhan   on 06 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.