|
||||||||
காராகருணை வறுவல்(spices yam roast) |
||||||||
தேவையானவை : காராகருணை - அரை கிலோ மிளகாய் வற்றல் - 6 எலுமிச்சைச்சாறு - அரை ஸ்பூன் வெங்காயம் - இரண்டு(நறுக்கியது) சோம்பு - ஒரு ஸ்பூன் பூண்டு - 10 பல் தேங்காய் - கால் மூடி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - அரை கரண்டி செய்முறை: 1.தோல் சீவிய காராகருணையை மெல்லிய சீவலாக நறுக்கவும். இதை நீரில் கழுவிப் பிழிந்து எலுமிச்சைச்சாறு கலந்து வைக்கவும். 2.தேங்காய், சோம்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை அரைத்துக் கொண்டு அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ளவும்.இவை எல்லாவற்றையும் வாணலியில் ஒன்றாகக் கலந்து எண்ணெய், உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற விட்டு கறிவேப்பிலை சேர்த்து வேக விடவும். 3.முதலில் 5 நிமிடம் தீயை கூட்டி வைத்து அடுத்த 5 நிமிடம் தீயை மிதமாக வைத்துக் கிளறி விடவும். நன்றாக கிழங்கு வெந்து சுருண்டு எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி வைக்கவும். சுவையான காராகருணை வறுவல் தயார். |
||||||||
by kavitha on 08 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|