|
||||||||
கருணைக்கிழங்கு வறுவல்(yam roast) |
||||||||
தேவையானவை : கருணைக் கிழங்கு - கால் கிலோ எண்ணெய் - தேவையான அளவு மிளகாய் தூள் - 4 டீஸ்ஸ்பூன் மஞ்சள் தூள் - ஒரு டீஸ்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு பூண்டு - 4 பல் மிளகு தூள் - கால் டீஸ்ஸ்பூன் புளி - சிறிது செய்யும் முறை : 1.முதலில் தோல் நீக்கிய கருணைக் கிழங்கை பட்டை பட்டையாக வெட்டி அதை வேக வைக்கவும். 2.ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து அந்த தண்ணீரில் தேவையான அளவு உப்பு, மிளகாய், மஞ்சள், மிளகு தூள், பூண்டை தட்டிப் போட்டு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். 3.கருணைக் கிழங்கு மிதமாக வெந்ததும் தண்ணீரில் இருந்து வடித்து இந்த கரைசலில் போடவும்.சிறிது நேரம் ஊறியதும், அடுப்பில் தோசைக் கல்லை வைத்து நன்கு காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி இந்த கருணைக் கிழங்கு மசாலாவைப் போடவும். மீன் வறுப்பது போல தனித்தனியாக துண்டுகள் கல்லில் வேகும்படி வறுத்து கொள்ளவும். 4.அவ்வப்போது எண்ணெய் ஊற்றி திருப்பிப் போடவும்.10 நிமிடத்தில் சுவையான கருணைக்கிழங்கு வறுவல் தயார். |
||||||||
by kavitha on 08 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|