LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

விண்மீன் கூட்டங்களை வரைபடம் எடுக்கப்போகும் கையா செயற்கைக்கோள் !!

நமது பூமி, சூரியன் ஆகியவற்றைக் பால் வீதி மண்டலம் என்பது பல ஆயிரம் கோடி விண்மீன்களைக் கொண்டதாகும். இந்த விண்மீன்களின் இருப்பிடம் அவை நகரும் தன்மை ஆகியவற்றை ஒரு வரைபடமாகத் தயாரிப்பது என்பது விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் சவாலாக இருந்தது. இந்த சவாலை சாமர்த்தியமாக செய்து முடிப்பதுதான் தற்போது விண்ணுக்குச் சென்றிருக்கும் கையா செயற்கைக் கோளின் பணி.

 

பால் வீதி மண்டலத்தில் உள்ள கோடிக்கணக்கான விண்மீன்களைக் கணக்கெடுத்து முப்பரிமாண வடிவிலான வரைபடமாகத் தயாரிக்க உதவுவதற்காக தான் கையா செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. 

 

பிரெஞ் கயானாவில் இருந்து புறப்பட்டுள்ள கையா, ஒரு மாதப் பயணத்துக்குப் பிறகு பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை அடைந்து, அங்குள்ள பூமியையும் சூரியனையும் இணைக்கும் எல் 2 என்ற புள்ளியை மையமாகக் கொண்ட வட்டப்பாதையில் இயங்கும். இந்த வட்டப்பாதையில் இயங்குவதற்கு எந்த வகையான உந்துவிசையும் தேவையில்லை. எனினும், பிற உபகரணங்களை இயக்குவதற்கான சக்தியைத் தயாரிப்பதற்காக இந்தச் செயற்கைக்கோளில் சூரியசக்தித் தகடுகள் இணைக்கப்பட்டுள்ளன. இதற்காகவே, சூரியனை பூமி மறைக்காத வகையிலான எல் 2  வட்டப்பாதை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கையாவில் உள்ள உபகரணங்களைக் பாதுகாப்பதற்காக சூரி ஒளி மறைப்புத் தகடுகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

 

விண்மீன்களைக் கண்காணிப்பதற்காக இரண்டு தொலைநோக்கிகள் கையா செயற்கைக்கோளில் உள்ளன. விண்மீன்களின் நிறை, வெப்பநிலை நிறை, இயங்கும் வேகம் போன்றவற்றையும் பூமியில் இருந்து அவற்றின் தொலைவையும் தீர்மானிக்கும் நவீனக் கருவிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. கையா இயங்கும் 5 ஆண்டுகளில் ஒவ்வொரு விண்மீனும் சுமார் 70 முறை அளவெடுக்கப்படும். இந்தக் காலகட்டத்தில் நொடிக்கு சுமார் ஒரு மெகா பிட் வேகத்தில் 60 டெர்ரா பைட் தகவல்களை பூமிக்கு அனுப்பும்.

 

இந்தத் தகவல்களைக் கொண்டு 2020-ம் ஆண்டு சுமார் நூறு கோடி விண்மீன்களைக் கொண்ட முப்பரிமாண வரைபடம் வெளியிடப்படும். எனினும் இந்த வரைபடத்தில் இருக்கப்போவது பால்வீதி மண்டலத்தில் உள்ள வெறும் ஒரு சதவீத விண்மீன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

by Swathi   on 19 Dec 2013  0 Comments
Tags: விண்மீன் கூட்டம்   கையா செயற்கைக்கோள்   பால் வீதி மண்டலம்   விண்மீன்   முப்பரிமாண வரைபடம்   3D   Milky Way  
 தொடர்புடையவை-Related Articles
ஆ வெற்றி கூட்டணியின் அடுத்த படம் ஜம்போ - 3D !! ஆ வெற்றி கூட்டணியின் அடுத்த படம் ஜம்போ - 3D !!
மும்பையில் வசூலை குவித்து வரும் பீட்சா ரீமேக் ! மும்பையில் வசூலை குவித்து வரும் பீட்சா ரீமேக் !
70 நொடிகளில் பிட்சா தயாரிக்கும் 3டி பிரின்டர் : இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளர் கண்டுபிடிப்பு !! 70 நொடிகளில் பிட்சா தயாரிக்கும் 3டி பிரின்டர் : இந்திய வம்சாவளியை சேர்ந்த பொறியாளர் கண்டுபிடிப்பு !!
விண்மீன் கூட்டங்களை வரைபடம் எடுக்கப்போகும் கையா செயற்கைக்கோள் !! விண்மீன் கூட்டங்களை வரைபடம் எடுக்கப்போகும் கையா செயற்கைக்கோள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.